Thursday, December 15, 2011

முல்லைபெரியாறு பிரச்சனையும்..ஈழத்தமிழர்களின் அணுகுமுறையும்

முல்லைப்பெரியாறு அணை தீர்மானம் இன்று சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது,,ஒரு மனதாக.... காரணம் இது தமிழ்நாட்டின் வாழ்வாதார பிரச்சினை..குறிப்பாக தென் தமிழகத்தை சார்ந்த என் போன்றோர்களுக்கு இப்பிரச்சினை வாழ்வாதாரத்திற்கும் ஒரு படி மேல். இப்பிரச்சினைக்கு அரசியல் சாயம் பூசப்பட்டாலும்..தமிழ்நாடு விடுவதாய் இல்லை. "என் தங்கம் ..எனது உரிமை" என்ற புரட்சிகர கோஷத்தை பரப்புகிறது மலையாளிகளின் நகைக்கடை விளம்பரம்."என் அணை..எங்கள் உரிமை" என்று தமிழகம் எடுத்துக்கொள்ளும் என நம்புகிறேன். 
தமிழகமே இப்பிரச்சனையில் ஒன்று பட்டுள்ள நிலையில்..நான் பல நாட்களாக  பதிவுலகை சற்று உன்னிப்பாக கவனித்து வருகிறேன்..குறிப்பாக ஈழத்தமிழ் சகோதரர்கள் இப்பிரச்சினையை எவ்வாறு அணுகு கிறார்கள் என்று ..எத்தனை பேர் இப்பிரனையை பதிவிட்டுருக்கிரார்கள் என்று ஆராய்ந்து பார்த்தால்...ம்ஹூம்...குறிப்பாக என்னை போன்றோர்களெல்லாம் ஈழ தமிழர்களுக்காக..போர் நடைபெற்ற சமயத்தில் இத்தீப்பந்தத்தை கொளுத்த ஆரம்பித்தேன்..ஆனால்..தமிழகத்தில் ஏதாவது பிரச்சினை என்றால்..சர்வதேச தமிழ் சமூகத்தில் கனத்த மௌனம் நிலவுகிறது...இன்று தமிழ்மணத்தில் முதலிடம் பிடித்த பதிவை படித்து பாருங்கள். யோகராஜா சந்துரு என்பவர் மட்டக்களப்பில் விபச்சாரம் கலை கட்டுவதாகவும்..முஸ்லீம்கள் அதனை முன்னிறுத்தி செயல்படுவதாகவும்..பதிவிட்டு..அதிக ஹிட்டுகளை குவித்துள்ளார்..காவிக்கொடி ஈழத்திலுமா? 
நீர்..நிலத்தை விட முக்கியத்துவம் வாய்ந்தது..முல்லை பெரியார் அணை..தமிழகத்தின் தன்மான பிரச்சினை..தமிழர்களின் தன்மான பிரச்சினை. சர்வதேச தமிழ் சமூகமே..மௌனம் கலைத்து..தமிழக மக்களின் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக பதிவிடுங்கள்..ட்வீட் செய்யுங்கள்.முடிந்தால் போராட்டம் நடத்துங்கள்...தமிழன் யார் என்பதை மலையாளிகள் முதல் கொலையாளிகள் வரை தெரிந்து கொள்ளட்டும்.


Saturday, December 10, 2011

அரசியல் கோமாளி சு.சுவாமி ஹார்வர்டில் இருந்து நீக்கம்..

அரசியல் குள்ள நரி சுப்பிரமணிய சுவாமியை அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக் கழகம் நீக்கியுள்ளது.  மேலும் அவர் கற்றுத் தரும் 2 பொருளியல் பாடப் பிரிவுகளையும் நிர்வாகம் நீக்கியுள்ளது. 2011 ஜூலை 16 ம் தேதி மும்பையில் இருந்து வெளியாகும் டி.என்.ஏ நாளிதழில் முஸ்லீம்கள் குறித்த சர்ச்சைக்குரிய கட்டுரையை சுவாமி எழுதினார். அதற்கு ஆட்சேபம் தெரிவித்து ஹார்வர்டு பல்கலைக் கழகம் அவரை நீக்கியுள்ளது. 2012 ம் ஆண்டுக்கான பாடப் பிரிவுகள் குறித்த இறுதி முடிவெடுக்க ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்கள் கூட்டம் நடந்தது. அப்போது சுவாமியால் எடுக்கப்பட்டு வரும் 2 பொருளியல் பாடங்களை நீக்குவது என்று முடிவெடுக்கப்பட்டது.

Friday, September 30, 2011

பரமக்குடி-நடந்தது என்ன ?

அப்பாவி தலித் சகோதரர்கள் கொல்லப்பட்ட பரமக்குடி சம்பவம் தற்போது உள்ளாட்சி தேர்தல் கூத்துகளால் மறக்கடிக்கப்பட்டுள்ளது..நடந்த சம்பவங்களை நேர்மையாக விசாரித்த மனித உரிமை ஆர்வலர்களின் காணொளி தற்போது "தீப்பந்தம்" இணைய தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது. தொலைக்காட்சியின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது..


முதல்  பாகம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது..இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகம் நாளை வெளியிடப்படும். 

Monday, September 26, 2011

தீப்பந்தம்-இணைய தொலைக்காட்சி..இன்று இனிதே ஆரம்பம்

குறும்படங்கள்..ஆவணப்படங்கள்..ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்ட செய்திகள் ..போன்ற அனைத்தையும்..தமிழ் மற்றும் ஆங்கில மொழி வடிவில்..இனி நீங்கள் தீப்பந்தம் இணைய தொலைக்காட்சி மூலம் கண்டு களிக்கலாம்..முதல் முயற்சியாக..ஊருக்கு நாலு பேறு என்ற குறும்படம் சோதனை கட்டத்தில் வந்து கொண்டிருக்கிறது. பதிவுலக நண்பர்களின் ஆதரவை எதிர்நோக்கி...

கீழே க்ளிக் செய்து தளத்துக்கு செல்லவும் 
http://www.livestream.com/theepandham

Sunday, September 18, 2011

மோடியை பின்பற்றி தமிழர்களுக்காக ராஜபக்ஷே உண்ணாவிரதம்


தமிழர்களின் நலனுக்காக, அவர்கள் வாழ்ந்து வரும் அமைதியான வாழ்க்கையை கொண்டாடும் விதமாக இலங்கை அதிபர் ராஜபக்ஷே மூன்று நாள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக இலங்கையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படின்னு சொன்னா..நம்பிர்றதா..ஆனா ..கூடிய சீக்கிரத்தில் வாய்ப்பு இருக்கு..


Saturday, September 17, 2011

மோடி வழியில் ஜெயா

தமிழன் செத்தா இனப்படுகொலை...அவனை கொன்ற ராஜபட்சே மனித மிருகம்..சரி .ஆனால் ஆயிரக்கணக்காக செத்து மடிந்த இந்திய முஸ்லீம்கள்?..என்ன பாவம் செய்தார்கள்? .அவர்களை கொன்று குவித்த மோடி ..இன்று மாபெரும் மனிதர்..அரசியல் உதாரணம். தமிழக முதல்வருக்கு ஒருவன் போர்குற்றவாளியாக தெரிகிறான்..இன்னொருவன் வருங்கால பிரதமராக தெரிகிறான். நல்ல டபுள் கேம்...ராஜபட்சே போர் குற்றவாளி என்றால்..மோடி? மனித இனத்தின் முதல் எதிரியல்லவா. பார்ப்பனியம் பிரசவித்த சாதி ஆணவமே.. பரமக்குடியில் கலவரமாக பற்றி எரிந்தது.தியாகி இம்மானுவேல் சேகரன் படுகொலை செய்யப்பட்ட நினைவு தினத்தன்று.. அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் போலவே அவரைப் பின் தொடரும் வஞ்சிக்கப்பட்ட மக்களின் துயரமும் தொடருகிறது. காவல் துறை அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் ஜெயலலிதா துப்பாக்கிச் சூட்டை நடத்தி தன்னை யாரென மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருக்கிறார். அடுத்த வாரமே..மோடிக்கு வக்காலத்து வாங்கி மீண்டும் ஒருமுறை தான் யாரென்று உரக்க சொல்லி வருகிறார். 

ஆதிக்க வன்புணர்ச்சிக்கு
ஆளான முஸ்லீம்களின் காயங்கள் ஆறாது!
மோடிக்கு நீங்கள் புகழ்மாலை சூட்டுவதால்
பிண வாடை மறையாது!
பிள்ளைக்கறி கேட்கும்
பெரும்பசிக்கு இரையான
அப்பாவி முஸ்லீம் சமுதாயம்
இனி ஒருபோதும் உறங்காது!
ஜனநாயகத்தின்
விலகாத திரைச்சீலைகளில்
ஹிட்லரை மிஞ்சும்
மோடி படுகொலைகள்!

Wednesday, September 14, 2011

ஆதிக்க சாதி வெறியும்,அரச பயங்கரவாதமும்

ஒவ்வொரு மணிநேரமும் இரண்டு தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்கப்படுகின்றனர்.
ஒவ்வொரு நாளும் மூன்று தாழ்த்தப்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர்.
ஒவ்வொரு நாளும் இரண்டு தாழ்த்தப்பட்ட மக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர்.
ஒவ்வொரு நாளும் இரண்டு தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்படுகின்றன..!
இது வல்லரசு கனவில்.. வளர்ச்சிப் பாதையில் ஒளிரும் இந்தியப் பேரரசின் பெருமைக்குரிய நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை.
தாழ்த்தப்பட்ட மக்களும் பிற்படுத்தப்பட்ட மக்களும் மனித உடலின் இரு கைகளைப் போன்றவர்கள். இரண்டு கைகளும் சண்டையிட்டுக் கொண்டால் அதை இயக்கும் மூளையே பார்ப்பனியம் என்றார் புரட்சியாளர் அம்பேத்கர். பார்ப்பனியம் பிரசவித்த சாதி ஆணவமே.. பரமக்குடியில் கலவரமாக பற்றி எரிகிறது. காவல் துறை அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் ஜெயலலிதா துப்பாக்கிச் சூட்டை நடத்தி தன்னை யாரென மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருக்கிறார்.
தியாகி இம்மானுவேல் சேகரன் படுகொலை செய்யப்பட்ட நினைவு தினத்தன்று.. அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் போலவே அவரைப் பின் தொடரும் வஞ்சிக்கப்பட்ட மக்களின் துயரமும் தொடருகிறது.
இராமநாதபுரம் மாவட்டம் மண்டல மாணிக்கம் என்கிற ஊரைச் சேர்ந்த பள்ளி மாணவன் பழனிக்குமார். ப்ளஸ் 1 படித்து வருகிறான். பக்கத்து ஊருக்கு நாடகம் பார்த்து விட்டு நள்ளிரவில் திரும்பும் வழியில் பச்சேரி என்கிற ஊரில் வைத்து கடுமையாக தாக்கப்படுகிறான். முத்துராமலிங்க தேவர் குறித்து கரித்துண்டால் தவறாக எழுதி வைத்ததாக சந்தேகத்தின் பெயரால் கொலை செய்யப்படுகிறான்.
அதனால் ஏற்பட்ட கொந்தளிப்பே ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்ச்சிப் பிரவாகமாக மாறி இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்க வேண்டிய அரசும் காவல் துறையும் குற்றவாளியை தேடி கைது செய்யாமல் ஜான்பாண்டியனை கைது செய்திருக்கிறது. அவர் வந்தால் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிடுமாம். பரமக்குடியில் இருந்து 130 கி.மீ. தூரத்திலேயே..தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அவரின் கைதைக் கண்டித்து 500-க்கும் மேற்பட்டவர்கள் சுமார் ஒன்றறை மணிநேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து போகச் சொல்லி நடந்த பேச்சுவார்த்தை பலனின்றிப் போனது. காவலர்கள் தடியடி நடத்தியுள்ளனர். அதன் எதிர்விளைவாக வன்முறை வெடித்து இருக்கிறது. காவல் துறை மீது நடந்த எதிர்தாக்குதல் காரணமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த மற்றவர்கள் மருத்துவமனையில் உயிர் இழந்திருக்கின்றனர். இதே போன்று மதுரை சிந்தாமணியில் ஜான்பாண்டியன் கைதினை கண்டித்து நடந்த சாலை மறியலில் ஈடுபட்டவர்களை பரமக்குடி பாணியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். மொத்ததில் 8 பேர் உயிர் இழந்தனர். புரட்சித் தலைவியின் பொற்கால ஆட்சி, சட்டம்- ஒழுங்கை தனக்கே உரிய காட்டுமிராண்டித்தனத்துடன் பாதுகாத்து விட்டது.
துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் எத்தகையவர்கள் என்பதை அறிந்தாலே நடவடிக்கையின் உண்மை முகம் தெரிந்து விடும். பரமக்குடி முத்தாலம்மன் பாலிடெக்னிகில் D.M.E படிக்கும் மாணவர் தீர்ப்புகனி. மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். விடுமுறை நாள் என்பதால் நண்பர்கள் அழைத்ததின் பேரில் இம்மானுவேல் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு சென்று உள்ளார். அவர் கலவரத்தில் சிக்கி சுடப்பட்டு இறந்திருக்கிறார்.
செங்கல் சூளையில் வேலை செய்யும் ஜெயபால் ஓராண்டுக்கு முன்னால் கலப்புத் திருமணம் புரிந்தவர். தன் நிறைமாத கர்ப்பிணியான மனைவிக்கு மருந்து வாங்க வந்தபோது துப்பாக்கிச் சூட்டில் இறந்திருக்கிறார். அதே போல கரிமூட்டம் போடும் கூலி வேலைக்குச் சென்று பிழைக்கும் பன்னீர்செல்வம் சாலையோரம் இம்மானுவேல் நினைவுநாள் நிகழ்ச்சிகளை வேடிக்கை பார்க்க நின்றவர். காவல் துறையால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அவரின் அன்புக்குழந்தைகள் அம்புரோஸ்,ரெபோகாள் தாங்கள் அனாதைகளாகி விட்டதாக கதறுகின்றனர். 'அவர் உயிரோடு இருக்கும்போதே சோத்துக்கு வழியில்லை. இனி என்ன செய்யப் போறமோ?' என்கிறார் அவரின் மனைவி சிரோன்மணி.
வெளிநாட்டில் வேலை செய்து வரும் தன் மகன் குணசேகரன் திருமணத்திற்கு பத்திரிக்கை கொடுக்க வந்த 55 வயதான தந்தை கணேசன் துப்பாக்கிச் சூட்டில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார். சுடப்பட்டதில் அடையாளம் தெரியாத பிணமாக முதலில் அறியப்பட்ட,  நடுத்தர வயதுடைய முத்துக்குமார் பரமக்குடியில் உள்ள எரிவாயு இணைப்பகத்தில் கடைநிலை ஊழியர்.
சுட உத்தரவு இட்ட காவல் துறை அதிகாரிகள் யார்? அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். நீதி விசாரணை கண் துடைப்பாக இருந்து விடக்கூடாது. கொடியங்குளம் கலவரத்தில் காவல் துறையின் அத்துமீறல் சரியே என்று விசாரணை ஆணையம் சொன்னதைப் போல தவறான முன்னுதாரணம் ஆகி விடக்கூடாது.
தேர்தலுக்கு முன்பு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் விலைவாசி குறையும் என்றார்கள். அது இப்போது உண்மையாகி விட்டது. வழக்கமாக கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 2 லட்சம் தருவார்கள். சுடப்பட்டு இறந்தவர்கள் தலித் என்பதால் அம்மா ஆட்சியில் உயிரின் விலை குறைந்து விட்டது. தலா 1 லட்சம் என அறிவித்து உள்ளார். பொற்கால ஆட்சி என்றால் சும்மாவா?
  
நன்றி 
அமீர் அப்பாஸ் israthjahan.ameer@gmail.com)


Monday, July 25, 2011

நார்வே தீவிரவாதிக்கு நன்றி

முதலில் ரத்த வெறி பிடித்து அலையும் சர்வதேச சதியான தீவிரவாதம் என்ற அரக்கனுக்கு எனது கண்டனங்கள். நார்வே நாட்டில் நடந்த இரட்டை தாக்குதல்கள் பற்றிய ரத்தக்கறை படிந்த விரிவான அலசலை இங்கே காணலாம். முதலில் சிறிய அளவில் குண்டு வெடிப்பு. ..பிளாஷ் நியூஸ்..பிறகு இந்த சம்பவம் நடந்த அடுத்த ஒரு சில மணி நேரத்தில் ஆளும் தொழிலாளர் கட்சியின் இளைஞர் அணி முகாம் நடைபெற இருந்த உட்டோயா தீவில் போலீஸ் உடை அணிந்த இளைஞர் ஒருவர் திடீரென்று புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினான்..மீண்டும் ப்ளாஷ் நியூஸ்..  இதனால் அதிர்ச்சியடைந்த இளைஞர்கள் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். பலர் அருகில் இருந்த ஏரியில் குதித்தனர். சிலர் மரங்கள், செடிகளுக்கு பின்னால் மறைந்து கொண்டனர். இந்த சம்பவத்தில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தும் நீரில் மூழ்கியும் 85 பேர் உயிரிழந்தனர். பின்னர் அப்பகுதிக்கு வந்த அதிரடிப் படையினர் அந்த இளைஞரை சுற்றிவளைத்து கைது செய்தனர். ப்ளாஷ் நியூஸ் ஓட..ஓட..அல் கொய்தாவா..முஜாஹிதீனா..என்று ஆவலோடு காத்திருந்த அனைவருக்கும் பெரிய ஏமாற்றம்.. 
ஓடி ஒளிந்தவர்களை எல்லாம் தேடித்தேடி, சுமார் ஒன்றரை மணி நேரம் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டுத் தள்ளியவன் ஒரு கிருத்துவன்.
நார்வே நாட்டு இரட்டை தாக்குதல் பல விஷயங்களை இவ்வுலகிற்கு உணர்த்துகிறது. குறிப்பாக இஸ்லாமிய தீவிரவாதம் என்ற கண்மூடித்தனமான அவதூறு  நம்பிக்கை தகர்த்து எறியப்பட்டிருக்கிறது. இதற்க்கு நார்வே நாட்டின் நேர்மையான மீடியாக்களும், அரசாங்கமும் மற்றும் ரத்தவெறி பிடித்த அந்த தீவிரவாதியே காரணம். அவர்களுக்கு நன்றி. கொலைகாரன் நினைத்திருந்தால்..கோட்சே பாணியில் முஸ்லீம் பெயரை பச்சை குத்தி இறந்து போயிருக்கலாம்..தாக்குதல் நடந்த மூன்று மணி நேரத்தில் ..பிளாஷ் நியூஸ் என்ற பெயரில் அல் கொய்தா..அல் கொய்தா என்று பரபரப்பை மீடியா ஏற்படுத்தியிருக்கலாம்..அரசாங்கம், அவனை கைது செய்யாமல்..போட்டுத்தள்ளி அவனுக்கு ஏதாவது இஸ்லாமிய பெயரை சூட்டி மகிழ்ந்திருக்கலாம். நல்ல வேலை ஓரளவு உண்மை வெளியே வந்துள்ளது..யார் குண்டு வைத்தாலும், ஏன் பட்டாசே கொளுத்தி போட்டாலும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பே இதற்க்கு காரணம் என்று சப்பை கட்டு கட்டும் நேர்மையான இந்திய அரசாங்கம் ஆச்சர்யத்துடன் இந்த தீவிரவாத தாக்குதலை கண்டு களித்தது. இக்காலத்தில், முஸ்லீம்களுக்கு  எதிரான சிந்தனை உள்ள ரத்த வெறி பிடித்த ஒருவன் இத்தாக்குதலை நடத்தியுள்ளான். அவன் தீவிரவாதியிள்ளயாம், கொலைகாரனாம் (நன்றி தின மலர்,தின கரன், தின மணி).தீவிரவாதி என்ற சொல்லை முஸ்லீம்களுக்கு மட்டும் கோட்டாவில்  வைத்திருக்கிறார்கள்...முஸ்லீம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுவது இனி மாற்றி எழுதப்படும் என்பது என் கருத்தல்ல. தின மலர் போன்ற தினசரிகள் இருக்கும் வரை அது முடியாது, காரணம்.. முஸ்லீம்களுக்கு எதிரான இந்த சதி..சர்வதேச சதி..நமது நாட்டில்..மலே கான், அஜ்மீர், ஹைதராபாத் போன்ற நகர்களில் முஸ்லீம்களை குறி வைத்து நடத்தப்பட்ட அனைத்து தீவிரவாத செயல்களும் தினமலர் போன்ற பத்திரிக்கை மற்றும் மீடியாக்களால்  மறக்கடிக்கப்படும். யாராவது விசாரணை என்ற பெயரில் இச்சம்பவங்களை நோண்ட நினைத்தால் அடுத்த தாக்குதலில் அவர் அலேக்காக போட்டு தள்ளப்படுவார். இச்சம்பவங்களை சந்தேக கண்ணோடு பார்க்கும் திக் விஜய் சிங் போன்றோரும் போட்டு தள்ளப்படுவது உறுதி, கட்டுரை எழுதும் நான் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் பட்டியலில் கடைசிப்பெயராக சேர்க்கப்படுவேன். காரணம், இங்கே கூறப்படுபவை அனைத்தும் உண்மை, எழுதுபவன் முஸ்லீம்.
(இந்தியா எங்கள் தாய் நாடு 
இஸ்லாம் எங்கள் வழிபாடு
தமிழே எங்கள் மொழியாகும்
தன்மானம் எங்கள் வழியாகும்)


நன்றி
எப்போதோ கேட்ட இஸ்லாமிய பாடல் 

Friday, June 10, 2011

டீக்கடை டாப்பு / 10-06-2011

டீக்கடை டாப்பு என்ற தலைப்பில் பாதி புரிந்து, டாப்பென்றால் என்ன என்று புரியாதவர்களுக்கு..மதுரையின் விசித்திரமான வட்டார மொழி சொற்களில் ஒன்று இந்த டாப்பு என்ற வார்த்தை..நிச்சயம் ஆங்கில வார்த்தை அல்ல..டீக்கடையில் நண்பர்கள் கூடிப்பேசும் "கெட் டுகெதர்" என்று அர்த்தம். அவ்வளவு தான்.சரி...இந்த வாரம் கடையை திறப்போம்..


!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


இலங்கை தமிழர்களுக்கு சமவாழ்வுரிமை கிடைக்க நடவடிக்கை வேண்டும்-பிரதமருக்கு தங்கபாலு கடிதம் நல்ல ரைமிங்..ஆனா டைமிங் இல்ல


!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


பாபா ராம்தேவை சீண்டியதால் அவரின் உண்மை முகம் வெளி வர தொடங்கியுள்ளது..அவரின் பக்தர் படைக்கு இனி ஆயுதப்பயிற்சி வழங்கப்படுமாம்..


இனிமே தான் வழங்கனுமா...அது சரி..யு.பி, டில்லியில் மட்டுமா...அல்லது தேசிய அளவில் கலவர திட்டமா ?


!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் விண்கலத்தில் உங்கள் பெயர் இடம் பெற வேண்டுமா..இதோ..நாசா வழங்கும் அறிய வாய்ப்பு..இன்னும் மூன்று நாட்களே உள்ளன..முந்துங்கள்..

http://marsparticipate.jpl.nasa.gov/msl/participate/sendyourname/

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இந்த வார "ட்வீட்"


மன்னிக்கவும், ஊழலுக்கு எதிரான போராட்டம் இப்போது பாசிச கும்பலின் கைகளில்..அனைவருக்கும் சூலாயுதம் ..காந்தியின் பெயரை ஓதி வழங்கப்படுகிறது..


நன்றி
பர்கா தத் 

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இந்த வார புகைப்படம்


!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இந்த வார காணொளி 


அலாரம் என்ற கண்டுபிடிப்பின் மேல் உள்ள அனைவரின் வெறுப்பையும் நகைச்சுவையோடு கலந்து உருவாக்கிய குறும்படம். 


!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

சுடச்சுட செய்தி

நடப்புக் கல்வியாண்டில் சமச்சீர்கல்வித் திட்டத்தை ரத்து செய்யும் தமிழக அரசின் சட்டத் திருத்த மசோதாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இத்தீர்ப்புக்காக அரும்பாடு பட்ட பதிவுலக நண்பர்களுக்கு நன்றி..

Monday, June 6, 2011

டீக்கடை டாப்பு / 06-06-2011

வாரா வாரம், கொத்து பொராட்டாவும், சான்ட் வேஜும் சாப்பிட்டு சலித்தவர்களுக்கு..இதோ டீக்கடை டாப்பு..தமிழகத்தின் தினசரி வாழ்க்கையின் முக்கிய அங்கம் .கடை திறப்பு விழாவுக்கு வருகை தந்தோர்..பின்னூட்டமிட்டு ஆதரவை வழங்கி செல்லவும்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அரசியல் பேசுவதே..இந்த டீக்கடை டாப்பின் பிரதான லட்சியம்.

பெல்ஜியத்தில் நடந்த மாநாட்டில் தனித்தமிழ் ஈழம் அமைய ஓட்டெடுப்பு வேண்டும் என்ற வைகோவின் குரல் தமிழ்நாட்டில் ஜெயலலிதா பண்ணும் அக்கப்போரால் எடுபடாமல் போனதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கவர்னர் உரையில் ஆச்சு ப் பிழை ...அச்சுப் பிழை

"ஜெயலலிதா தலைமையில் அமைந்துள்ள இந்த புதிய அரசும், ஏழைகளின் நலனைக் கருதியே செயல்படும்"

பல சிக்கலில் மாட்டி தவித்து வரும் கலைஞருக்கு இத்தகைய பிழை..நீண்ட நாட்களுக்கு பிறகு கிடைத்த பாராட்டு..

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஜாதிகள் இருக்குதடி பாப்பா 

கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கிருத்தவ பள்ளிக்கூடம் மாணவர்களுக்கு வழங்கிய அடையாள அட்டையில் ஜாதியை இடம்பெறசெய்தது கண்டனத்திற்குரியது..கேரளா  பின்னோக்கி செல்கிறது.


!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

சமச்சீர் விடுமுறை

சமச்சீர் கல்வி குழப்பத்தில் கூடுதல் விடுமுறையில் இருக்கும் மாணவ, மாணவிகளுக்கு யூடுபில் உபயோகமான தளம்..அனைத்து பாட தலைப்புகளும், மிக எளிய முறையில்..காணொளியாக காணும் வாய்ப்பு 


!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இந்த வார "ட்வீட்"

"பாபா ராம்தேவை காந்தியோடு ஒப்பிடுவது..ஜெயலலிதாவை அன்னை தெரசாவோடு ஒப்பிடுவதற்கு சமம்" 

நன்றி !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இந்த வார புகைப்படம்
என்கௌண்டர் கொடுமைகளை தினமும் அனுபவித்து வரும் காஷ்மீர் பெண்கள்.
சமீபத்திய என்கௌண்டர் எளவு வீட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

நன்றி
மைக்ரோசாப்ட் நெட்வொர்க் 

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Friday, May 27, 2011

சமச்சீரற்ற கல்வியும் ..சர்வாதிகார அரசும்


"முதல் கோணல் முற்றிலும் கோணல்” என்கிற பழமொழிக்கு ஏற்ப..  தமிழகத்தில் துக்ளக் தர்பார் தொடங்கி விட்டது. "ஒரு அழுக்கு இன்னொரு அழுக்கை அகற்றாது” என்றார் நபிகள் நாயகம். நிகழ்காலத் தவறுகளின் மீதுள்ள கோபத்தில், கடந்த காலத் தவறு ஆட்சிக்கு வந்துள்ளது.
தன்னை மகாராணியாக கருதிக்கொள்ளும் ஜெயலலிதாவிற்கு, தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்பதை நினைவுப்படுத்த வேண்டிய நேரம், இவ்வளவு சீக்கிரம் வரும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். சமச்சீர் கல்வித்திட்டம்  கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில் இல்லை என்பதைக் காரணம் காட்டி அவசர அவசரமாக அமைச்சரவையைக் கூட்டி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
மனுதர்மம் எப்படி நால்வருணம் என்கிற சாதிய அமைப்பைக் காப்பற்றுகிறதோ, அதைப் போலவே நான்கு வகையான கல்வி முறைகள் இங்கே காப்பற்றப்படுகின்றன. அரசுப் பள்ளிகள், மெட்ரிக்குலேசன், ஆங்கிலோ இண்டியன், ஓரியண்டல் என நான்கு வகையான பாடத்திட்டங்கள், தனித் தனியாக இயங்குகின்றன. குழந்தைகள் விசயத்தில் காட்டப்படும் இந்த அநாகரிகமான வேறுபாடு அருவெறுக்கத்தக்கது. அதை மாற்ற முனைந்த சமச்சீர் கல்வித்திட்டத்தை ஜெயலலிதா அரசு நிறுத்தி வைத்துள்ளது.
சமச்சீர் கல்வித் திட்டம் என்பது திடீரென்று முளைத்த மழை நேரத்துக் காளான் அல்ல. அதற்காக கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் பத்தாண்டு காலம் போராடி இருக்கிறார்கள். அதன் விளைவாக, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் 2006 ஆம் ஆண்டு ஒரு குழுவை அன்றைய கலைஞர் அரசு அமைத்தது. அந்த குழு மாவட்டந்தோறும், பள்ளிக்கல்வியின் பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தது.
பின்னர், 2007 இல் முன்னாள் மாநகராட்சி ஆணையர் விஜயகுமார் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ஏற்கனவே நியமிக்கப்பட்ட முத்துக்குமரன் குழு அறிக்கையின் கருத்துக்கள், பரிந்துரைகள் ஆகியவற்றின் நடைமுறை சாத்தியங்களை ஆராய்ந்தது. இதன் பிறகு, பிற மாநிலங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்து தெரிந்து வர 2008 ஆம் ஆண்டு ஒரு கல்வியாளர் குழுவை அரசு நியமித்தது.
பின்னர் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு, 26.08.2009 அன்று தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் நான்கு விதமான பாடத்திட்டங்கள் நீக்கப்பட்டது. சட்ட வடிவு கொண்டு வரப்பட்டது. அதன் முதல் கட்டமாக ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி 2010 இல் கொண்டு வரப்பட்டது. மற்ற வகுப்புகளுக்கு 2011-இல் கொண்டு வரப்படும் என முந்தைய அரசு அறிவித்து இருந்தது.
அதிகாரம் தலைக்கு ஏறிய சில தினங்களுக்குள்ளேயே ஜெயலலிதா சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைத்து விட்டார். ஏழைகளுக்கும் வசதி படைத்தவர்களுக்கும் ஒரே கல்வி என்பதை ஏற்றுக் கொள்ள அவரின் பார்ப்பனீய ஆதிக்க மனம் மறுக்கிறது. எல்லா பொதுத் துறை நிறுவனங்களும் தனியார்மயமாக மாறும் அவலமான உலகமய சூழலில், தனியார் கல்வி நிறுவனங்களின் லாப வெறிக்கு துணை போயிருக்கிறது இன்றைய அரசு.
உயர்நீதி மன்றத் தீர்ப்பும், மக்களின் ஆவேசமும் மட்டுமே இதற்கு மாற்றான சூழலைக் கட்டமைக்க முடியும். ”ஆடுகளும் மாடுகளும் இன்று தான் அமைச்சர்கள் ஆயினர்”  என்ற கண்ணதாசன் வரிகளை மெய்ப்பிக்கும் வகையில் ஆளுமையற்றவர்களை ஜெயலலிதா அமைச்சர்களாக்கி உள்ளார். ஜெயலலிதாவின் அமைச்சர்கள் யாரும் 150 கல்வியாளர்களை கொண்டு நியமிக்கப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டத்தை நிராகரிக்கும் தகுதி படைத்தவர்கள் இல்லை.
பல்வேறு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் பலரும் இதற்கு கண்டணம் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்து முன்ணணித் தலைவர் இராம.கோபாலன் சமச்சீர் கல்வித்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதை வரவேற்றுள்ளார். இந்த முடிவு பிற்போக்குத் தன்மை வாய்ந்தது என்பதை இதிலிருந்தே புரிந்து கொள்ள முடிகிறது. பாடத்திட்டத்தில் ஆட்சேபணைக்குரிய பகுதி இருந்தால், அதை மட்டுமே நீக்க வேண்டுமே தவிர, ஒட்டு மொத்தமாக நீக்குவது என்பது தவறான முன்னுதாரணம் ஆகும்.
'அரசு மதுபானம் விற்பது தவறு’ என ஒட்டுமொத்தமாக மதுவிலக்கு கொண்டு வருவதில் அதிரடி முடிவு எடுப்பாரா ஜெயலலிதா? செய்ய மாட்டார். ஏனெனில், அரசுக்கு ஏற்படும் வருமான இழப்பால், இலவசத் திட்டங்கள் என்னும் ஏமாற்றுத் திட்டங்களை நிறுத்த வேண்டி வரும். இதில் மட்டும் கலைஞர் அரசின் பிற்போக்குக் கொள்கைகளைப் பின்பற்றுவது ஏன்? 
'ஒரு விசயம் உருப்படாமல் போக வேண்டும் என்றால் அதை கிணற்றில் போடு. இல்லையென்றால் அதை விசாரிக்க கமிசன் போடு' என்றார் இராஜாஜி. ஜெயலலிதா கிணற்றில் போட வழியின்றி வல்லுநர்கள் குழுவைப் போட்டிருக்கிறார். அச்சடித்த புத்தகங்கள் குழந்தைகளின் கனவுகளில் மண் அள்ளிப் போட காத்திருக்கின்றன. மக்கள் வரிப்பணம் வழக்கம் போல 200 கோடி வீணடிக்கப்பட்டிருக்கிறது.
பெற்றோர்களை போராடத் தூண்டுகிறது ஜெயலலிதா அரசு. மக்களின் போராட்டம் ஒரு போதும் தோற்றுப் போவதில்லை என்பதை நிரூபிக்கும் காலம் மீண்டும் கூடி வந்திருக்கிறது. மாணவர்களின் எதிர்காலம் பற்றிய விசயத்தில் அரசின் இத்தகைய மோசமான போக்கு நீடிக்குமானால், வரும் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள். 
நன்றி
அமீர் அப்பாஸ் 

Sunday, April 24, 2011

சீமானுக்கு பகிரங்க கடிதம்


தமிழன்..தமிழ்..உணர்வு..ஈழம்..வீரம் ..இனப்படுகொலை..பேரழிவு..ராஜபட்சே .முள்வேலி முகாம்..இதெல்லாம் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா..இருக்கும்..கடந்த இரண்டு ஆண்டுகளில் இணையத்திலும் சரி..தமிழர்கள் இதயத்திலும் சரி..அதிகமாக உச்சரிக்கப்பட்ட வார்த்தைகள் இவை..மதம், ஜாதி, தேசம் போன்றவைகளை தாண்டி...சராசரி தமிழனாகிய என்னைப்போன்றவர்களுக்கு இன்னும் இவ்வார்த்தைகள் சுடுகின்றன..காரணம்..இவ்வார்த்தைகள் மனித உயிர்கள் சம்பந்தப்பட்டது....தமிழன் செத்தா இனப்படுகொலை...அவனை கொன்ற ராஜபட்சே மனித மிருகம்..சரி .ஆனால் ஆயிரக்கணக்காக செத்து மடிந்த இந்திய முஸ்லீம்கள்?..என்ன பாவம் செய்தார்கள்? .அவர்களை கொன்று குவித்த மோடி ..இன்று மாபெரும் மனிதர்..அரசியல் உதாரணம் .தன் மக்களுக்கு உண்மையானவராம்...சொல்கிறார் செந்தமிழன் சீமான்..அப்படி பார்த்தால் உங்கள் சிந்தனைப்படி.., சிங்கள இனத்திற்கு உண்மையானவன் ராஜபட்சே..எங்கே..அப்படி ஒரு பேட்டி கொடுங்கள் பார்ப்போம்...யார் இந்த சீமான்.சராசரி தமிழனையும்..இளைஞர்களையும்..உசுப்பேற்றி..உணர்வேற்றி..காவு கொடுத்து..அத்தீக்குளிப்பில் குளிர் காயும் உண்மையான இன துரோகி.
செந்தமிழன்  யார் ? இப்போது காரணம் புரிகிறது...சிலர் இப்போது என்னை சந்தேக கண்ணோடு, பார்க்க கூடும், காரணம் தமிழனாய் இருந்தும் நான் ஒரு இசுலாமியன்..ஈழத்தில் தமிழர்கள் செத்து மடிகிறார்களே என்ற ஒரே காரணத்திற்க்காக, என் உணர்வுகளை தமிழ் சகோதரர்களோடு பகிர்ந்து கொள்ள , இந்த தீப்பந்தம் பதிவு கொளுத்தப்பட்டது..இருந்தாலும் நான் தமிழனில்லை..தமிழ் உணர்வாளன் இல்லை .இழவு வீட்டில் பாரபட்சம் பார்க்கின்ற கூட்டத்தை சேர்ந்தவர்கள் நாங்கள் இல்லை..ஆகையால் தான்..உணர்ச்சியின் உச்சக்கட்டத்தில் முதன் முதலாக தீக்குளித்தான் சகோதரன் அப்துல் ரவூப்..இறந்த முறை தவறாக இருந்தாலும் அவன் உணர்வுகள் நேர்மையானவை...இத்தீ மற்ற சகோதரர்களையும் பின்னர் காவு வாங்கியது..குளிர் காய்ந்தவர்...காய்ந்து கொண்டிருப்பவர் சீமான் .நான் கேட்கிறேன்..ராஜபட்சே போர் குற்றவாளி என்றால்..மோடி? மனித இனத்தின் முதல் எதிரியல்லவா ..போர் குற்றவாளிப்பட்டியலில் ராஜபட்சேவோடு மோடியின் பெயரையும் இணைத்து கொள்ளுங்கள் தமிழ் உள்ளங்களே.முதல் வரிசையில் மோடியின் பெயர் இருக்கட்டும்.அனுபவத்தில் மூத்தவரல்லவா....இங்கு நான் முஸ்லீம் என்றோ..ஹிந்து என்றோ வேறுபாடு காணவில்லை..இன்று ஆங்காங்கே..இணையத்தில்..ராஜபட்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க தமிழ் உள்ளங்கள் பாடுபட்டு வருகின்றன..அது மட்டும்போதாது..அவன் சர்வதேச அகதியாக்கப்பட வேண்டும் என்பது எனது நிறைவேறா ஆசை..ஆனால்..குஜராத்தில் இறந்து மடிந்த பல்லாயிரக்கணக்கான முஸ்லீம் சகோதர..சகோதரிகளை எப்படி மறப்பது...ராஜ பக்ஷே விற்கு இனப்படுகொலையை அறிமுகம் செய்த மோடியை என்ன செய்வது..அந்த மோடியை புகழ்ந்த சீமானை இப்போது என்ன சொல்வது .செந்தமிழன் சீமான் அவர்களே...வன்னிக்காடுகளில் ஆரம்பித்த உங்கள் அரசியல் பயணம் எங்கே அழைத்து செல்கிறது?..தமிழகத்தில் ...தமிழர்கள் பட்டியலில் இருந்து முஸ்லீம்களை வெளியேற்றி..வெறுப்பேற்றி..சூதாடும் உங்கள் திட்டம் என்ன?..கருப்புச்சட்டை..காவிச்சட்டை அணிய துடிப்பது ஏன்?.எனக்கு கொஞ்சம் புரிகிறது...சர்வதேச தமிழ் உள்ளங்களே உங்களுக்கு இன்னும் புரியவில்லையா?

இப்படிக்கு

சராசரி தமிழன்..


Thursday, April 21, 2011

சீமான்-முற்போக்கு முகமூடி அணிந்த போலி புரட்சியாளர்
இயக்குனர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...தாயக விடுதலை போராட்டத்தில் நசுக்கப்பட்டு முள்வேலி முகாம்களில்
சித்திரவதைக்குள்ளாகி வரும் நமது தமிழீழ சொந்தங்களின் உரிமைக்கு மறுமலர்ச்சிக்கு உரக்க குரல்கொடுத்து பரிசாக இரண்டு தேசபாதுகாப்பு சட்ட சிறைகளை பெற்றவர்... குறுகிய காலத்தில் தமிழக மக்களின் குறிப்பாக இளைஞர்களின் அபிமானத்தை பெற்றவர்.சீமான் வருகைக்கு பிறகு தமிழ் தேசிய அரசியல் முழக்கம் புத்துயிர் பெற்றது என்பதை மறுக்க இயலாது.மாற்றத்தை விரும்பிய மக்களும் தமிழுனர்வாளர்களும் சீமானை சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்றார்கள்... அவரது வீரியமிக்க உரைகள் உணர்வற்றவனையும் உசுப்பேத்தியது. அவர் செல்கிற இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது. அவரைசுற்றி எப்போதுமே உணர்வுமிக்க இளையர் பட்டாளம் அணிவகுத்தது.பகுத்தறிவை தமிழனுக்கு போதித்த தந்தை பெரியாரின் பேரன் நான் என சீமான் முழங்கியதை தமிழ் சமூகம் ரசித்தது. தமிழர்கள் சீமானிடம் ஒரு மாற்று அரசியலை எதிர்பார்த்தார்கள் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் சீமானின் அரசியலுக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் ஏற்பட்டது.


சீமானின் நாம் தமிழர் கட்சி புதிய எழுச்சியை ஏற்படுத்தும் என நடுநிலையாளர்கள் காத்திருந்தனர்.ஆனால் சீமான் ஈழதமிழர்களுக்கு துரோகம் விளைத்த காங்கிரசையும் அதனுடன் கூட்டணிகொண்டுள்ளதிமுகவையும் கருவறுக்க அதிமுக கூட்டணிக்கு ஆதரவு நிலையென அறிவித்தார். அப்போதே தமிழுனர்வாளர்களும் மாற்றத்தை விரும்பிய மக்களும் சீமானின் இந்த அரசியல் சறுக்கலை கண்டு கவலைகொண்டனர். திமுகவிற்கு மாற்றாக அதிமுக என்கிற சீமானின் கோஷம் மக்களிடம் பெரும் விவாதத்தையே விதைத்தது.வலியபோய் சீமான் அதிமுக அணிக்கு ஆதரவு என அறிவித்தும் அதிமுக அவரை சீண்டவில்லை என்பது ஊர் அறியாத ரகசியமல்ல... சீமான் அதிமுக ஆதரவு நிலையெடுக்க மிகப்பெரிய தூண்டுகோலாக இருந்த மதிமுக அதிமுகவின் தலைமையால் உதாசீனபடுத்தப்பட்டது. மதிமுக தேர்தலில் போட்டியிடும் நிலையையே தவிர்க்க வேண்டியதாகிவிட்டது. உடணடியாக சீமான் சொன்னார் நாங்கள் அதிமுகவிற்கு ஒட்டுகேட்கபோவதில்லை திமுக காங்கிரஸ் அணிக்கு எதிராவே ஒட்டுகேட்கபோகிறோம். இந்த வார்த்தைகள்


ஆரம்ப கல்வி பயிலும் ஐந்துவயது பிள்ளைக்கும் நகைப்பைத்தான் தந்தது.
அதன் பிறகு காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளில் மட்டுமே பரப்புரை செய்து காங்கிரசை நாம் தமிழர் கட்சி வீழ்த்தும் என்றார். அதன்படி தேர்தல் பரப்புரையும் மேற்கொண்டார். அவரது ஈழதமிழ் மக்களின் நிலைகுறித்த


விளக்கமும் தமிழக மீனவர்கள் சிங்கள ராணுவத்தால் பட்டுவரும் அவலமும் நிச்சயமாக மக்களை காங்கிரசுக்கு எதிராக வாக்களிக்க தூண்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை...தேர்தல் பரப்புரையின் இறுதிகட்டத்தில் பெரியாரின் பேரன் என தன்னை அடையாளபடுத்திய சீமான் ஈழ மக்களின் அணைத்து துயரங்களுக்கும் காரணமான காங்கிரசையும் அதன் கூட்டணியையும் வீழ்த்தியே தீருவேன் என வீரம் பேசிய சீமான் பரப்புரையினூடே நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தியா நாட்டின் அசிங்க அடையாளமான நரேந்திரமோடியை வானளாவ புகழ்ந்துள்ளார். ஏப்ரல் 24 தேதியிட்ட குமுதம் ரிப்போர்ட்டர் இதழின் தனது நேர்காணலிலும் அவர் மோடியை பாராட்ட தவறவில்லை. கடந்த சில காலமாக தமிழக முஸ்லிம் அமைப்புகளின் நிகழ்வுகளில் கலந்துகொண்டு குஜராத் கலவரத்தையும் அங்கு முஸ்லிம்கள் கருவருக்கப்பட்டதையும் பேசிவந்த சீமான் திடீரென மோடிக்கு பாசவலை வீசுவதுதான் நமக்கு சந்தேகத்தை வலுக்க செய்கிறது.நரேந்திரமோடி மிருகங்களைவிட கேவலமான பிறவி என்பதை நாடே அறியும். அவன் தாய் பாலுக்குப் பதிலாக மனித மாமிசத்தை தின்று வளந்தவன் என்பதை குஜராத்தில் நடந்த கலவரங்களின்போது மோடி திடமாகவே பதிவு செய்தான்.
மோடியின் ஆட்சியில் குஜராத் பலவகைகளிலும் முன்னேறி உள்ளதாம் இருக்கலாம் ஆனால் அந்த முன்னேற்றத்தில் அடித்தளத்தில் முஸ்லிம்கள் கொன்று புதைக்கப்பட்ட உண்மையை சீமானுக்கு யாரும் சொல்லவில்லையா...?சாயிராஹ் என்கிற நிறைமாத கர்பிணியான என் சகோதரி மோடியின் வகையறாக்களால் ஈவிரக்கம் இல்லாமல் கற்பழிக்கப்பட்டு அவளது வயிற்றைகீறி உள்ளே உயிர்வாழ்ந்த சிசுவை வெளியில் எடுத்து எரியும் நெருப்பில் எரிந்து மகிழ்ந்தார்களே... அந்த நயவஞ்சகன் மோடியையா பெரியாரின் பேரன் புகழ்வது...!!!
இந்திய நாட்டின் உச்சநீதிமன்றம் மோடியை நவீன நீரோ மன்னன் என வர்ணித்ததே ரோமாபுரி நகரம் பற்றி எரிந்துகொண்டிருந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துகொண்டிருந்தானாம் அந்த வேலையைத்தான் மோடி


குஜராத்தில் மூவாயிரம் அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டபோது பல லட்சகணக்கான முஸ்லிம்களின் சொத்துகள் சூறையாடபட்டபோது செய்துகொண்டிருந்தான் என இந்திய உச்சநீதிமன்றம் சொன்னது அந்த மோடியைத்தான்.

இராமன் என்கிற ஆடு மாடுகளை மேய்ப்பதை தொழிலாக கொண்ட தலித் சமூக சகோதரன் சற்று இளைப்பாற ஒரு கூரைகொட்டகையில் அமர்ந்தான் அந்த கொட்டகை மேல்சாதிகாரனுக்கு சொந்தமானது என்கிற ஒரே காரணத்திற்க்காக சகோதரன் இராமன் கட்டிவைக்கப்பட்டு கல்லால் அடித்துக்கொல்லப்பட்டதும் குஜராத்தில்தான் இதே மோடியின் ஆட்சிகாலத்தில்தான் இப்படியாக மக்கள் நேசிக்கும் மோடியைத்தான்


இலங்கையில் புலிகளால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட துயரங்களுக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன் என சொன்ன சீமான் புகழ்ந்துள்ளார்.
சீமான் அவர்களே ஏன் இந்த கொள்கை பின்னடைவு... ஏன் இந்த முரண்பாடு... ராஜபக்சே எந்தளவிற்கு கொடுமைகாரனோ அதைவிட ஆயிரம் மடங்கு கொடுமைகாரன் நரேந்திரமோடி அவனை தவிர உதாரணம் காட்ட உங்களுக்கு வேறு முதலமைச்சரே கிடைக்கவில்லையா...?
ஒரு வாதத்திற்கு நரேந்திரமோடியை மண்ணை நேசிக்கும் தலைவன் என்பதை ஏற்றுகொள்வதாக வைத்துகொண்டு உங்களிடம் ஒன்றை கேட்கிறேன் முஸ்லிம்களை வேரறுத்து மோடி மண்ணையும் மக்களையும் நேசிக்கும் தலைவன் என்றால்... எங்கே சிங்கள மக்களின் உரிமைகள் பங்கிடபட்டுவிடுமோ என அஞ்சி நமது தமிழ் சொந்தங்களை வெடிகுண்டுகளின் கோரபசிக்கு இரையாக்கி வெற்றிகளிப்பில் திளைத்துள்ள


அயோக்கியன் ராஜபக்சேவை சிங்கள மண்ணையும் சிங்கள மக்களையும் நேசிக்கும் மகத்தான தலைவன் என யாரும் சொனால் பொங்கிவரும் உங்கள் ரத்தம் சுண்டிவிடுமா...?சீமான் அவர்களே உங்கள் பின்னால் எந்த சுயநல சிந்தனையும் இல்லாமல் தமிழர்களின் வாழ்வியல் மாற்றத்திற்காக அணிவகுக்கும் உங்கள் அன்பு நாம் தமிழர்களுக்கு நீங்கள் எந்த பாதையை காட்டப் போகிறீர்கள்... உங்களிடம் இருந்து வீரியமான தமிழ் தேசியத்தை அரசியல் மாற்றுகளத்தை எதிர்பார்க்கும் தமிழர்களில் நானும் ஒருவன்...
நரேந்திரமோடி என்கிற ஒற்றைவரி நீங்கள் தமிழனுக்காக சிறைபட்டு தமிழர்களின் மனதில் அமர்ந்திருந்த சிம்மாசனத்தை அசைக்கவே செய்துள்ளது...


நன்றி
நிதர்சனங்கள்