Saturday, June 23, 2012

அக்கப்போர்-23/06/2012




செய்தி-1

இதுவரை எந்த தேர்தலிலும் தான் தோற்றதில்லை என்று ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிடும் பி.ஏ.சங்மா கூறியிருக்கிறார்.

# அண்ணனுக்கு ஒரு ஜிகர் தண்டா தூத் ..


செய்தி-2

விளையாடிக் கொண்டிருந்தபோது 70 அடி ஆழ குழியில் விழுந்த 4 வயது குழந்தை கதி என்ன?: 2-வது நாளாக மீட்பு பணி

# இனிமே குழி தோண்டறவன்..வேலைய முடிச்சு ..குழிய அடச்சு போகற வரைக்கும்..அங்கயே இருக்கணும்னு ஒரு சட்டம் போடணும்...என்னது சட்டமா?



செய்தி-3

பெப்சி அமைப்புக்கு நடந்த தே‌ர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட அமீர் வெற்றி பெற்றுள்ளார்

# கூல் ட்ரிங்க்ஸ்க்கும் இப்ப தேர்தல் ஆரம்பிச்சாச்சா..



செய்தி -4

விஜய் விஸிட் - ஏக தள்ளுமுள்ளு... ரசிகர்கள், போலீசாருக்கு காயம்


# எப்படி ..ஒரு விழாவுல எண்ட்ரி இருக்கணும்னு நம்ம பவர் ஸ்டார பாத்து கத்துக்கொங்கன்னா ..





இந்த வார ட்வீட் 


# ஓசில டிவிய வாங்கிட்டு ஓட்டவாடா மாத்தி போடுறீங்கனு., திமுக கடுங் கோபத்தோட பழி வாங்குது போல #இசையருவி தொகுப்பாளினிகள்ல்


# விருதுகள் வேண்டாம் விசில் சத்தம் போதும் : சிம்பு # அது படம் பார்க்க நிறைய கூர்கா வந்தால் மட்டுமே சாத்தியம்




இன்றைய தத்துவம் 


# கல்யாண வீட்டிலும் சீட்டு விளையாடுறாங்க, இழவு வீட்டிலும் சீட்டு விளையாடுறாங்க. வாழ்க்கைத் தத்துவத்தை தெளிவாக உணர்த்துகிறார்கள்

Thursday, June 21, 2012

ப்ளாஷ் நியூஸ் :பற்றியெரியும் மும்பை மந்த்ராலாயா

ஒரு மாநிலத்தின் தலைமை செயலகமே பற்றி எரிகிறது..மள மளவென்று பற்றிய தீ..ஸ்தம்பித்தது மும்பை மாநகரம்.தீயை அணைக்க முடியாமல் திணறும் வீரர்கள். உயிரழப்பு நிச்சயம். சில முக்கியமான ஆவணங்கள் அழிந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன?????


உங்களுக்கு யாராவது தெரிந்தவர்கள் உள்ளே சிக்கி இருந்தால் அவர்களை ROOFTOP க்கு வருமாறு தொலைபேசியில் தெரிவித்து விடுங்கள் . THIS IS MESSAGE FROM NAVY FOR RESCUE OPERATION


நேரடி காட்சிகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
http://www.ndtv.com/blog/show/major-fire-at-mantralaya-in-mumbai-234400?pfrom=home-lateststories

Sunday, June 17, 2012

அக்கப்போர்-18/06/2012

செய்தி-1


டாஸ்மாக்கில் பீர் விலை உயர்கிறது

# சியர்ஸ்ஸ்ஸ் ..அரசுக்கு இதனால் 300 கோடி கூடுதல் லாபமாம்..மீண்டும் சியர்ஸ் ஸ்ஸ்



செய்தி-2



புதுக்கோட்டை தொகுதியில் டெபாசிட்டை தக்க வைத்த கேப்டன்

# நன்றி..மக்கேலே..நன்றி ..மக்கேலே



செய்தி-3




ருபாய் மதிப்பு சரிவுக்கு காரணம் சின்னத்தில் வாஸ்து சரியில்லையாம்..

டேக் த 25 ருபீஸ் மேன்



செய்தி-4

ஜாமீனில் வெளியில் வந்த நித்யானந்தாவுக்கு பூரண கும்ப மரியாதையுடன் மதுரை ஆதீனம் தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது நித்யானந்தாவை மறு... மறு...மறு... என்று 3 முறை கூறி மறுபிறவி எடுத்ததுபோல இருக்கிறது. இது நமக்கு கிடைத்த முதல் வெற்றி என்று ஆதீனம் கூறி நித்யானந்தாவை மடத்திற்குள் அழைத்து சென்றார்.

# எப்டியோ..தினமும் இந்தாளு செய்தில வந்துற்றான்..இவனுக்கு மட்டும் எப்டி சீக்கிரம் ஜாமீன் கிடைத்து விடுகிறது..



செய்தி-5

நீ அதுக்கு சரியா வர மாட்ட 




இன்றைய தத்துவம்

வறுமை வந்தால் வாடாதே...வசதி வந்தால் ஆடாதே.!



இன்றைய ட்வீட்

சின்னத்தம்பி படத்தில் கவுண்டமணி " "அப்பா ..அப்பா டே" என்று சொல்வது தந்தையர் தினத்தை தானா?




ஏண்டா நமக்கு இந்த விளம்பரம்



இப்ப நாடே..ஆதரவுக்கு தான் அலையுது.ஹி..ஹி...அப்டியே..நம்ம தீப்பந்தத்துக்கும் உங்க ஆதரவை அளிக்குமாறு கேட்டு கொள்கிறேன்..

கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து, facebook தளத்திற்கு சென்று லைக் பட்டனை ஒரு க்ளிக்..அவ்ளோ தான்




Saturday, June 9, 2012

அக்கப்போர்-09/06/2012

செய்தி-1

டாஸ்மாக் கடைகள் குறித்த அரசாணையை சட்டவிரோதமானது என்று அறிவிக்கவும், புதிய கடைகளைத் திறக்க தடை விதிக்கவும் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

# சியர்ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ்




செய்தி-2

புதுடெல்லியில் உள்ள திட்டக் குழு தலைமை அலுவலகத்தில் உள்ள இரண்டு கழிவறைகள் ரூ. 35 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

# அது சர்ரி...சந்தனமா வரப்போகுது





செய்தி-3

சென்னை வந்து சேர்ந்தார் ஆ.ராசா.

# எனக்கு இவர்ட்ட பிடிச்ச விஷயமே இவர் இனிசியல் தான்..ஆச்சர்யப்பட வைக்கும் ஆ.ராசா



செய்தி-4

மாநிலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற மாணவன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் வெற்றி பெற்றதற்கு முக்கியமான காரணம் சுலபமான சமச்சீர் கல்வி பாட திட்டம் தான் என்று கூறினார்

# மேடம்..கோட்டையில்ல பரிசு கொடுக்கும் போது மூஞ்சிய சிரிச்சா மாதிரி வச்சு கொடுங்கங்க..



செய்தி-5

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அ.தி.மு.க விற்கு ஆதரவாக டி.ராஜேந்தர் வீதி..வீதியாக பிரச்சாரம்

# ஏய்..டண்டனக்கா ..டனக்குனக்கா ..ஏய்..டண்டணக்கா..டகா ..ஏய் ..டண்டணக்கா.....கரன்சி வித்தைகளுக்கு நடுவில் எதற்க்கய்யா கரடி வித்தை




இன்றைய தத்துவம்

போலியான உறவை விட..வெளிப்படையான பகைவனே மேல்..




இன்றைய தகவல்

டாஸ்மாக்கின் விரிவாக்கம் -TASMAC (TAMIL NADU STATE MARKETING CORPORATION LTD)



இன்றைய ட்வீட்

போன்ல அப்பறமா கூப்பிடரேன்னு சொல்றவங்க..திரும்ப கூப்பிட்டதா வரலாறே கிடையாது..




இன்றைய பேசும்படம்








பிடிக்குதோ..பிடிக்கலையோ..சொல்லிட்டு போங்க..கீழே பாருங்க..USE FACEBOOK OR BLOGGER COMMENTS PLEASE


Tuesday, June 5, 2012

அக்கப்போர்-05/06/2012

செய்தி 1
ஜூன் 3 ல் பிறந்த நாள் கொண்டாடிய திமுக தலைவர் கலைஞரிடம் உங்கள் பிறந்த நாள் செய்தி என்ன? என்று நிருபர்கள் கேட்டனர்.அதற்கு பதிலளித்த கருணாநிதி நான் பிறந்ததே செய்திதான் என்றார்.

# நல்ல ரைமிங்..நல்ல டைமிங்




செய்தி-2
தெருவோரம் நடந்த திருமணத்தில் கலந்து கொண்ட நடிகை நமீதா

# சும்மாவா ஆரம்பிச்சாங்க NDF (நமீதா டெவெலப்மன்ட் போர்ஸ்)


நமீதா சிறப்பு கவிதை உங்களுக்காக


"நான் கவிதை சொல்லுது,
நீ கேக்குது,
படம் நடிக்குது,
பைசா வாங்குது,
பெட்டி நிறையுது,
பேட்டி கொடுக்குது,
மச்சான் பாக்குது,
நல்லா தூங்குது,
கனவு காணுது,
கவிதை முடியுது..
பாய் மச்சான்ஸ் "




செய்தி 3

பெட்ரோல் விலை உயர்வை ஒரு கசப்பு மருந்தாக பொதுமக்கள் ஏற்றக்கொள்ள வேண்டும் :ப.சிதம்பரம்

# கசப்பு மருந்துக்கு..இனிப்பு விஷமே பெட்டர் 






இன்றைய ட்வீட்


சுதந்திர காற்றை சுவாசிக்கும் நிமிடம் எதுவென்றால், பேருந்து நிலைய கட்டண கழிப்பிடம் விட்டு வெளியே வரும்போது தான்.!








இன்றைய புகைப்படம்






பார்டருக்கு அந்த பக்கம் 


தமிழ்நாடு ரீவைண்டு







ஏன் தயக்கம்? கமெண்ட்ஸ் மற்றும் facebook லைக்குகளால் மட்டுமே அக்கப்போர் தொடரும். கீழே பாருங்க..கம்மேன்ட்சோ..லைக்கோ போட்டு விட்டு கிளம்புங்கோ..