Saturday, September 17, 2011

மோடி வழியில் ஜெயா

தமிழன் செத்தா இனப்படுகொலை...அவனை கொன்ற ராஜபட்சே மனித மிருகம்..சரி .ஆனால் ஆயிரக்கணக்காக செத்து மடிந்த இந்திய முஸ்லீம்கள்?..என்ன பாவம் செய்தார்கள்? .அவர்களை கொன்று குவித்த மோடி ..இன்று மாபெரும் மனிதர்..அரசியல் உதாரணம். தமிழக முதல்வருக்கு ஒருவன் போர்குற்றவாளியாக தெரிகிறான்..இன்னொருவன் வருங்கால பிரதமராக தெரிகிறான். நல்ல டபுள் கேம்...ராஜபட்சே போர் குற்றவாளி என்றால்..மோடி? மனித இனத்தின் முதல் எதிரியல்லவா. பார்ப்பனியம் பிரசவித்த சாதி ஆணவமே.. பரமக்குடியில் கலவரமாக பற்றி எரிந்தது.தியாகி இம்மானுவேல் சேகரன் படுகொலை செய்யப்பட்ட நினைவு தினத்தன்று.. அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் போலவே அவரைப் பின் தொடரும் வஞ்சிக்கப்பட்ட மக்களின் துயரமும் தொடருகிறது. காவல் துறை அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் ஜெயலலிதா துப்பாக்கிச் சூட்டை நடத்தி தன்னை யாரென மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருக்கிறார். அடுத்த வாரமே..மோடிக்கு வக்காலத்து வாங்கி மீண்டும் ஒருமுறை தான் யாரென்று உரக்க சொல்லி வருகிறார். 

ஆதிக்க வன்புணர்ச்சிக்கு
ஆளான முஸ்லீம்களின் காயங்கள் ஆறாது!
மோடிக்கு நீங்கள் புகழ்மாலை சூட்டுவதால்
பிண வாடை மறையாது!
பிள்ளைக்கறி கேட்கும்
பெரும்பசிக்கு இரையான
அப்பாவி முஸ்லீம் சமுதாயம்
இனி ஒருபோதும் உறங்காது!
ஜனநாயகத்தின்
விலகாத திரைச்சீலைகளில்
ஹிட்லரை மிஞ்சும்
மோடி படுகொலைகள்!





5 comments:

Anonymous said...

though i am a hindu, i strongly object these people's ,the greatest bramana religious fanatics who will do anything to get power,acts.
beware of these leaders who try to mesmerise poor innocent voters.

மால்கம் "X" ஃபாருக்- இராஜகம்பீரம் said...

அரசியல் நடத்துவதற்கு மதக்கலவரங்களை விட மிகவும் எளிய வழிமுறைகள் இந்தியாவில் இல்லை,
மதக் கலவரங்களை உருவாக்கி ஒடுக்கப்பட்டவர்களை கொன்று குவிப்பது, இனம் அழிந்த எச்சம் கொண்டு அதிகாரம் தேடுவது, பிறகு அதிகாரத்தின் வலிமையால் தனது நியாங்களை வலிமைபடுத்துவது. நீதி கிடைக்காதபோதும் அவர்களை சமுகத்தை விட்டு தூரமாக்குவதும்.இன்னும் கொலை செய்த கரை காயும் முன்பே தன்னை இதிகாச நாயகனாய் புனிதபடுத்தி கொள்வதுமாய்....தொடர்கிறது இந்துத்துவத்தின் பயனம்..கல்ல மெளனம் காக்கும் பெரும்பான்மை சமுகம்...

பனித்துளி சங்கர் said...

தலைப்பிலே அனைத்து உண்மைகளையும் தெளிவாய் சொல்லிவிட்டீர்கள் . மோடி வழியில் ஜெயா"

காதர் said...

மால்கம் எக்ஸ் அவர்களே ..உண்மையை உரக்க கூறியதற்கு நன்றி

காதர் said...

பனித்துளி சங்கர் அவர்களே..தலைப்பும் உண்மையை சொல்கிறது..இனி தமிழகத்தின் தலையெழுத்தும் உண்மையை உணர்த்தும்