Thursday, December 15, 2011

முல்லைபெரியாறு பிரச்சனையும்..ஈழத்தமிழர்களின் அணுகுமுறையும்

முல்லைப்பெரியாறு அணை தீர்மானம் இன்று சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது,,ஒரு மனதாக.... காரணம் இது தமிழ்நாட்டின் வாழ்வாதார பிரச்சினை..குறிப்பாக தென் தமிழகத்தை சார்ந்த என் போன்றோர்களுக்கு இப்பிரச்சினை வாழ்வாதாரத்திற்கும் ஒரு படி மேல். இப்பிரச்சினைக்கு அரசியல் சாயம் பூசப்பட்டாலும்..தமிழ்நாடு விடுவதாய் இல்லை. "என் தங்கம் ..எனது உரிமை" என்ற புரட்சிகர கோஷத்தை பரப்புகிறது மலையாளிகளின் நகைக்கடை விளம்பரம்."என் அணை..எங்கள் உரிமை" என்று தமிழகம் எடுத்துக்கொள்ளும் என நம்புகிறேன். 
தமிழகமே இப்பிரச்சனையில் ஒன்று பட்டுள்ள நிலையில்..நான் பல நாட்களாக  பதிவுலகை சற்று உன்னிப்பாக கவனித்து வருகிறேன்..குறிப்பாக ஈழத்தமிழ் சகோதரர்கள் இப்பிரச்சினையை எவ்வாறு அணுகு கிறார்கள் என்று ..எத்தனை பேர் இப்பிரனையை பதிவிட்டுருக்கிரார்கள் என்று ஆராய்ந்து பார்த்தால்...ம்ஹூம்...குறிப்பாக என்னை போன்றோர்களெல்லாம் ஈழ தமிழர்களுக்காக..போர் நடைபெற்ற சமயத்தில் இத்தீப்பந்தத்தை கொளுத்த ஆரம்பித்தேன்..ஆனால்..தமிழகத்தில் ஏதாவது பிரச்சினை என்றால்..சர்வதேச தமிழ் சமூகத்தில் கனத்த மௌனம் நிலவுகிறது...இன்று தமிழ்மணத்தில் முதலிடம் பிடித்த பதிவை படித்து பாருங்கள். யோகராஜா சந்துரு என்பவர் மட்டக்களப்பில் விபச்சாரம் கலை கட்டுவதாகவும்..முஸ்லீம்கள் அதனை முன்னிறுத்தி செயல்படுவதாகவும்..பதிவிட்டு..அதிக ஹிட்டுகளை குவித்துள்ளார்..காவிக்கொடி ஈழத்திலுமா? 
நீர்..நிலத்தை விட முக்கியத்துவம் வாய்ந்தது..முல்லை பெரியார் அணை..தமிழகத்தின் தன்மான பிரச்சினை..தமிழர்களின் தன்மான பிரச்சினை. சர்வதேச தமிழ் சமூகமே..மௌனம் கலைத்து..தமிழக மக்களின் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக பதிவிடுங்கள்..ட்வீட் செய்யுங்கள்.முடிந்தால் போராட்டம் நடத்துங்கள்...தமிழன் யார் என்பதை மலையாளிகள் முதல் கொலையாளிகள் வரை தெரிந்து கொள்ளட்டும்.


7 comments:

ஆமினா said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

சகோதரர்.

தான் எந்த திரட்டியிலும் பதிவுகள் பார்ப்பதில்லை. அதனால் எனக்கு சரியா நிலவரம் தெரியல.

http://www.tamilaathi.com/2011/12/blog-post_11.html

இந்த பதிவினை நீங்கள் படிக்க வில்லை என்றால் படிங்க. இவரும் ஈழத்தமிழர் தான்.

இலங்கையில் நடைபெற்ற யுத்தம் எதற்குன்னு கேட்டா இன்னும் சொல்ல தெரியாத மக்கள் தமிழ்நாட்டிலும் இருக்காங்க. ஒரு நாட்டின் பிரச்சனையே நமக்கு தெரியாத போது இரு மாநிலத்துக்கு நடக்கும் பிரச்சனை இலங்கை ஊடகங்களில் அதிகமாக பெரிதுபடுத்தப்படாமல் இருக்கலாம் அல்லவா?

சிலருக்கு சரியான வரலாறு தெரியாமல் இருக்கலாம். எதுக்கு இந்த போராட்டம்னு முழு விவரங்கள் தெரியாமல் இருக்கலாம்.

நான் பார்த்த வரையில் இலங்கை பதிவர்கள் நிறைய இடங்களில் பின்னூட்டங்கள் வழியாக தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள். தமிழ்நாட்டுக்காரங்களுக்காக நாம தான் குரல் கொடுக்கணும்னு ஒரு இலங்கை சகோதரர் சொன்னது இன்னும் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

நீ ஏன் சண்டைக்கு வரல? நீ ஏன் போராட்டம் நடத்தலங்குறது இங்கே முக்கியம் இல்ல. எல்லாரும் ஒன்றிணைந்து செயல்படலாம். குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் இல்லையே இது. இது போன்ற எண்ணங்கள், பதிவுகள் பிரிவினையை தான் உண்டாக்கும். :-(

இலங்கை பதிவர்-இந்திய பதிவர் என எப்போதும் பிரித்துசொல்ல கூடாத்உ என முடிவு செய்திருந்தேன். உங்கள் பதிவுக்காக பல இடங்களில் உபயோகிக்க வேண்டியதாய் போய்விட்டது.

(எனக்கே இன்னும் முழுதாக அணை பற்றி விஷயம் தெரியவில்லை-ஒரு இந்திய பதிவர் :-)

-உங்கள் சகோதரி
ஆமினா முஹம்மத்

ஆமினா said...

இஸ்லாம் விபச்சாரத்தை எதிர்க்கும் மார்க்கம் எனும்போது இஸ்லாமியர்கள் அதை முன்னிறுத்துகிறார்கள் என்ற அந்த பதிவரின் கருத்துக்கு என் கடும் கண்டனங்கள்!

எவனோ செய்யும் தவறுக்கு ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் முன்னிலைபடுத்தி தலைப்பிடுவது கேவலத்திலும் கேவலம்.

ஆமினா said...

உங்கள் பார்வைக்கு

http://www.thamilnattu.com/2011/12/blog-post_13.html

காட்டான் said...

 வணக்கம்!
சில ஈழபதிவர்களுக்கு பெரியார் அணையின் பிரச்சனைய முழுமையாய் புரியவில்லை..அத்தோடு ஈழத்தில் இருக்கும் பத்திரிகைகளும் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.!!
. ஆனால் தார்மீக ஆதரவாய் சில ஈழ பதிவர்கள் அதிக பின்னூட்டங்கள் இட்டிருக்கிறார்கள்.. அவை போதாது எங்களுக்கு தாய்தமிழ் உறவுகள் தந்த ஆதரவுக்கு முன்னால்..!!

நாற்று குழுமத்தில் இந்த பதிவின் லிங் பார்த்து வந்தேன்...!

Anonymous said...

Always we support TN

வேல் தர்மா said...

முல்லைப் பெரியாற்றைப் பற்றி ஈழத் தமிழர்கள் அக்கறையுடன் இருக்கிறார்கள். தமிழ்நாட்டு அரசியலைப்பற்றியும் அங்கு நடக்கும் நிகழ்விகள் பற்றியும் ஈழத் தமிழர்கள் என்றும் அக்கறையுடனேயே இருக்கிறார்கள் இருப்பார்கள். எந்த ஒரு பதிவுத் திரட்டிகளும் தமிழர்களின் உள்ளக் கிடக்கையை வெளிப்படுதுவதில்லை. இலண்டனில் இருந்து வெளிவரும் ஒரு தமிழ்ப்பத்திரிகையில் முல்லைப் பெரியாற்றைப் பற்றி எழுதி இருந்ததை வாசித்தேன்.

நன்றியுடன் காதர் said...

ஈழத்தமிழர்கள்அனைவரும்.என்றும்.. என்றென்றும்.. தமிழ்நாட்டு நலனில் அக்கறை கொண்டுள்ளார்கள் என்பதை நான் நன்கு அறிவேன்...குறிப்பாக சில ஈழப்பதிவர்கள் கண்டதையும் எழுதி..முல்லைப்பெரியாரை பின் தள்ளியதற்கு எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன்..தமிழன்..ஊர் ஊராக துரத்தியடிக்கப்படும் இச்சூழலில்..ஒரே குரல்..தமிழர்களின் குரலாக.. உரிமைக்குரலாக ஒலிக்கவே இப்பதிவு