Sunday, January 13, 2013

அக்கப்போர்-13/01/2013

அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்...



செய்தி-1




"கிரக நிலைகள் பாதகமாக இருப்பதால் தான், நாட்டில், கற்பழிப்பு சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன,'' என, சத்தீஸ்கர் மாநில உள்துறை அமைச்சர், நான்கிராம் கன்வர் கூறியுள்ளார் 


# ரசாயன முறை ஆண்மை நீக்கத்திற்கு, இவரை சோதனை முறையில் பயன்படுத்தினால் தப்பா?





செய்தி-2



ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் மாடுகள் குறித்து தனித்தனியே விண்ணப்பங்கள் பூர்த்திசெய்து சென்னை மத்திய பிராணிகள் நல வாரிய அமைப் பிற்கு 30 நாட்களுக்கு முன்னர் விண்ணப்பித்து ஒப்புதல் பெறவேண்டும்.


#நல்ல வேலை..மாடு தான் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கையொப்பமிட வேண்டும் என்ற கண்டிஷன் இல்லை..



செய்தி-3



"விஸ்வரூபம்' படம், டி.டி.எச்.இல் திரையிடப்படுவது, தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தியேட்டரில் 25ம் தேதி வெளியிடப்படும், எப்போது, டி.டி.எச்., முறையில் வெளியிடப்படும்???


# பத்து பைசா செலவில்லாமல்..விளம்பரம் ரொம்ப ஜோரா நடக்குது..அய்யோ..நானும் விளம்பரம் பண்ணிட்டேனே




இந்த வார அறிமுகம்

கடல் போன்ற திரைப்படங்கள் அந்தமானின் கடலோர பகுதிகளில் தான் படமாக்கப்பட்டுள்ளன..அந்தமான் பகுதியின் பேஸ் புக் பக்கம்.


Andaman-100% Natural




இந்த வார ட்வீட் 


பொங்கலுக்கு ரேஷன் கார்டுக்கு 100 ரூபாய் - ஜெ # குடுக்கிற அத்தன காசும் டாஸ்மாக் வழியா திரும்பிபோயிடும் - வாழ்க்கை ஒரு வட்டம்

நன்றி 

ட்விட்டர் பவன் 






படித்ததில் பிடித்தது.. 

வீட்டு நாய் மிரட்சியுடன் என்னை கவனித்து கொண்டிருக்கிறது # என் தட்டில் உப்புமா!!




இந்த வார புகைப்படம் 








Sunday, January 6, 2013

அக்கப்போர்-06/01/2013

செய்தி-1


நீங்கள் நினைப்பது போல் நான் முட்டாள் இல்லை:சிதம்பரம் பேட்டி

# போன் வயர் பிஞ்சி ஒரு வாரம் ஆகுது..




செய்தி-2


முதல்வர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்துப் பேசியதற்காக நாஞ்சில் சம்பத் மீது தொடரப்பட்ட வழக்குகளைத்தான் தற்போது அதிமுக அரசு வாபஸ் பெற்றுள்ளது.

# அம்மாவின் கைப்பேசி-பார்ட் 2





செய்தி-3 



புத்தாண்டு தினத்தன்று 95 கோடிக்கு டாஸ்மாக்கில் மது விற்பனை 


#ஆல்  சிட்டிசன்ஸ்..என்னாச்சு..உடம்பு கிடம்பு சரியில்லையா..கம்மியா குடிச்சிருக்கீங்கலே..அடுத்த தடவை சாதனை படைக்கனும் ..சரித்திரம் படைக்கனும் 




இந்த வார பேஸ் புக் ஸ்டேட்டஸ் 


என்ன விசித்திரம்?
சினிமாக்காரன் குடியிருக்க 
வாடகைக்கு வீடு கிடையாது

ஆனால், 
ஆள்வதற்கு நாட்டையே
கொடுத்து விடுகிறார்கள்
தமிழ் மக்கள்..!



நன்றி 


இணை இயக்குனர்-அமீர் அப்பாஸ் 






இந்த வார தத்துவ புகைப்படம்







இந்த வார கடுப்பு 



ராஜகுமாரன் அவர்களுக்கு கடும் கண்டனங்கள்..

#பவர் ஸ்டார நாங்க பொருத்திக்கிட்ட நால..வருசா வருசா ஒருத்தன் கிளம்பிர்றதா..





Tuesday, January 1, 2013

தீரா தாகம்


     


 
    விதைகள்    விசமாகி ,
    வெள்ள    எரிக்கஞ்செடி பயிறாகி !

    விளைச்சலும்  பொய்யாகி ,
    வீழ்ந்தானே   விவசாயி !

   ஆடியிலே    பட்டங்க்கண்டு .
    தேடியே     விதைவிதைத்து ! 

   ஆழ     உழுதானே ,
   அன்னாந்து   பார்த்தானே !

    அடைமழை  பெய்யவில்லை ,
    ஆறு குளம்  நிறையவில்லை !

    புயல் மழையும்  பொய்யாகி ,
    பூந்தோட்டம்   சருகாகி !

    புலம்பல்    பொருளாகி !
    போனானே (விவசாயி) பிணமாகி !

     காவிரியை  பூட்டிவைக்கும் ,
     கர்நாடக   சண்டியரே !

     நீதிக்கு   தலைவணங்கா ,
     நீமட்டும்   நிரந்தரமா ?
 
     மார்கழி  விடை கொடுக்க ,
     மறுபடியும்  தை பிறக்க !

     மகிழ்ச்சியில்  மனங் குளிர ,
     மண் உழுதோர்  யா ரிருக்கார் !

     பூமிக்கு     நீர் வார்க்கும் ,
     புகழெல்லாம்  இறைவனுக்கே !- என

     பூரித்து   பொங்கல் வைக்க ,
     புதுநெல்லும் தான்  பறிக்க !

     தங்கமழை  பொழியாதோ ?
     தமிழகமும்   குளிராதோ   ?
 
     தாகமும்  தீராதோ  ?
     தமிழர் முகம்  மலராதோ  ?

 
   நன்றி

பிறைத்தமிழன்