Sunday, July 19, 2009

"இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக"

இந்த நூற்றாண்டில் அடிமைத்தனம் முற்றிலும் ஒளிந்து விட்டதாக நாம் அனைவரும் நினைத்து கொண்டிருக்கும் இவ்வேளையில் , நாம் அனைவரும் நம்மை அறியாமல் மாபெரும் அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ..மெகா தொடர்களுக்கு முன்னாள் ..இந்தியாவில் அடிமைகளாக வாழ்ந்து பழகி விட்டோம் ..அதுவும் குறிப்பாக நம் தமிழகத்தில் ..ஒரு பக்கம் பெண்கள் எல்லாம் சீரியல் பார்த்து சீரழிந்து வருகிறார்கள் ..ஒரு சாம்பிளுக்கு ..குத்து மதிப்பாக எல்லா தொடர்களையும் பத்து பத்து நிமிடம் பாருங்கள் .ஒரே நேரத்தில் கல்ல தொடர்பை பற்றியும் ,.அண்ணன் பொண்டாட்டியின் கருவை கலைப்பதை பற்றி தம்பி பொண்டாட்டி சிந்திப்பதை பற்றியும் , ஒருத்தனின் இரு மனைவிகள் ஒரு வரை ஒரு வர் கொல்ல துடிப்பதை பற்றியும் , விவாகரத்தை பற்றியும் , சொந்த கணவனை கடத்தி வைக்கும் மனைவியை பற்றியும் .. தொடர்ந்து காலை முதல் இரவு வரை காண்பித்து வந்தால் ...நம்மை அறியாமல் நம் வீட்டில் உள்ள சகோதரிகள் கிரிமினல்களாக மாறி வருகிறார்கள் மெல்ல ..மெல்ல .. .சற்று சிந்தித்து பாருங்கள் ..முன்னாள் கவர்ச்சி நடிகைகளின் போலி கண்ணீரை கண்டு மனம் உடைந்து போகிறார்கள் குடும்ப பெண்கள் ..
மறுபக்கம் ஆண்கள் எல்லாம் பாட்டு கேட்டு வருடக்கணக்கில் தொகுப்பாளினியை டாவடிக்கிறார்கள் …அந்த மூஞ்சிகளை பார்த்து நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்று வாய் கூசாமல் பொய் சொல்லி வருகிறார்கள் ..
ரெண்டு வருடமாக முயற்சி செய்து வருவதாக கூறுகிறார்கள் ..லோவ்வருக்கு டெடிகேட் செய்யனுமாம் ...அதிகாலை முதல் நடுநிசி வரை ..உங்க டி .வி வோளும்மா கொரைங்க ..உங்க டி .வி வோளும்மா கொரைங்க ..என்ற உத்தரவை கேட்டு கேட்டு புளிக்க வில்லை தமிழனுக்கு ..
இதில் அடுத்த கட்டமாக ஆடலுடன் பாடல் நிகழ்ச்சி வேறு ..கூத்தாடிகள் நடனமாட ..குத்தாட்டம் போட்டவர்கள் நடுவர்கலாம் ..குலுங்க குலுங்க ஆடி விட்ட பிறகு கெமிஸ்ட்ரி சரியில்லையாம் நடுவர்களுக்கு ..மழையில் நனைந்து புரள்கிறார்கள் ..கட்டி உருள்கிறார்கள் ..இதை கண்டு உசுப்பேரிய நடிகை “கிளிசிட்டீங்க ” என்கிறார் ..எதை ?
நம்மை சிந்திக்க விடாமல் செய்யப்படும் சர்வதேச சதி இது ..குறிப்பாக தமிழகத்தில் தொலைக்காட்சி நடத்தும் அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த சதி திட்டத்தில் பங்கிருக்கிறது .தொடர்ந்து நிகழ்ச்சிகளின் மூலம் வருமானம் பெருக்க நம் மூளையை மழுங்கடிக்கிறார்கள் .ஒரு இனத்தின் வளர்ச்சியை , வாழ்கையை , சிந்தனையை , கலாசாரத்தை அளிக்கும் மாபெரும் பேரழிவு இது ..
தற்ப்போது தமிழ் தொலைக்காட்சிகளில் ஒரே ஆறுதல் “மக்கள் தொலைகாட்சி ”.இந்த அடிமைகளின் தேசத்தில் இந்த மண்ணை பற்றியும் ..மனிதர்களை பற்றியும் நிகழ்ச்சிகள் பல நடத்தி வருகிறார்கள் ..வாழ்த்துக்கள் ..
நமீதாவை நம்பாமல் நாட்டுப்புற பாடல்களை நம்புகிறார்கள் ..வோளும்மை குறைக்க சொல்லாமல் ..உரக்க தமிழ் பேச சொல்லுகிறார்கள் ..வாழ்கையை கெடுக்கும் தொடர்களுக்கு மத்தியில் வாழ சொல்லி கொடுக்கிறார்கள் .. காலப்போக்கில் மாறிவிடாமல் , தொடர்ந்து நம் மக்களின் புத்திக்கூர்மையை தீட்டும் வகையில் நிகழ்ச்சிகள் பல நடத்திட எனது வாழ்த்துக்கள்