Sunday, April 26, 2009

ஓர் இரவு காத்திருப்போம்


இலங்கையில் யுத்தம் மேலும் மேலும் தீவிரம் அடைந்து வரும் இச்சூழலில் அரசியல்வாதிகளின் கருத்து மற்றும் அணுகுமுறை நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகிறது..இதில் முக்கியமான மாற்றம் ஜெயலலிதா கூறிய ஈழ அதரவு கருத்து தான்..இப்படி நாள் தோறும் அரசியல் அரங்கில் வெளியிடப்படும் அறிக்கைகள் செத்து கொண்டிருக்கும் தமிழனை காப்பாற்றுமா...
இன்று முக்கிய திருப்பமாக புலிகள் யுத்த நிறுத்தம் மேற்கொள்வதாக அறிவித்துள்ளதும்,அதை சிங்கள அரசு நிராகரித்ததும் நாம் அறிந்ததே..இந்த இக்கட்டான சூழ்நிலையில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் ஓர் இரவு காத்திருப்போம் என்று அறிக்கை விடுத்துள்ளார் ..புரியாத புதிராக இருக்கிறது இந்த ஓர் இரவு.முன்னாள் முதல்வர் ஒரே இரவில் எழுதிய கதை தான் பின்னால் ஓர் இரவு என்று திரைப்படமாக எடுக்கப்பட்டது.அதே போல் இவரும் ஒரே இரவில் என்ன செய்ய போகிறார் என்று ஆவலாக உள்ளது ..சரி ஓர் இரவை காத்திருந்து தான் பார்ப்போம்..நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில்.

என்னையும் கொஞ்சம் கவனிங்க-டி.ஆர்


தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் , ஆளாளுக்கு ஈழத்தமிழர்களை பிரச்சாரத்தின் பகடை காய்களாக பயன்படுத்தி வருகின்றனர்..காங்கிரஸ் காரன்ல இருந்து தி.மு.க,அ.தி.மு.க, ம.தி.மு.க வை தொடர்ந்து பா.ம.க , கம்யுனிஸ்ட் , ம.ம.க ல்லாம் தாண்டி அரசியல் கோமாளிகளான கார்த்திக் , டி.ஆர் வரைக்கும் அத்தனை பேருக்கும் இப்போ ஈழமே கதி..எத்தனையோ கூட்டணி,எத்தனையோ மேடைகள், எத்தனையோ பிரச்சாரங்கள், பார்த்து புளித்து போன நமக்கு ஒரு என்டர்டைன்மன்ட் க்காக சில அரசியல் காமடியன்கள் இந்த தேர்தல் களத்தில் உலா வருகிறார்கள்..சமீபத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த டி.ஆர் அவர்கள் கட்சிகளின் கூட்டணியை நம்பவில்லையாம்..கிரகங்களின் கூட்டணியை நம்பி தான் போட்டியிடுகிறாராம்..இதற்க்கு மேல் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த டி.ஆரின் ஆவேச பேட்டி

"இந்த தொகுதியில் கூட்டணி கட்சிகளை நம்பி நான் போட்டியிடவில்லை. கிரகங்களின் கூட்டணியை நம்பியே போட்டியிடுகின்றேன்"


"நான் கள்ளக்குறிச்சி தொகுதியை தேர்ந்தெடுத்ததற்கு காரணம் சிவபெருமானின் சங்கரன் என்ற பெயருடைய சங்கராபுரத்தை குறித்தும், ரிஷிகள் வாழ்த்த ரிஷிவந்தியத்தை குறித்தும், சிவபெருமானின் தலையில் நதியாக விழும் கெங்கவல்லியை கடந்து செல்லும் ஆத்தூரை குறித்தும், காடுகள் நிறைந்த ஏற்காடை குறித்தும் உள்ளதால் தேர்ந்தெடுத்துள்ளேன்"

பொறுமைய்யா இருங்க..மிச்சத்தையும் படிச்சிருங்க

"திருச்சியில் எனது கட்சி சார்பில் போட்டியிடும் மன்சூர் அலிகான் இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவ புகைப் படங்களை வைத்து பிரசாரத்தில் ஈடுபட்டார். இதை காவல்துறையினர் தடுத்துள்ளனர். இது எங்கள் பிரசார யுக்திக்கு தடையாக உள்ளது"


தொடர்ந்து விஜய டி.ராஜேந்தர், தான் கள்ளக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்றால் அந்த தொகுதிக்கு என்னென்ன செய்வேன் என்று பட்டியலிட்டு பேசினார்..

டி.ஆரின் ஒட்டுமொத்த பிரச்சார காட்சிகள் யு டுபிள் காமடி காட்சியாக பதிவு செய்யப்படும்..

Sunday, April 19, 2009

இனிதே துவங்கியது பவர் கட்..


மீண்டும் இனிதே துவங்கியது பவர் கட்..நீண்ட நாட்களாக நாங்கள் ஆவலுடன் காத்திருந்த மின்சார துண்டிப்பு மீண்டும் ஒரு முறை கோலாகலமாக துவங்கியது..
சென்ற வருடத்தில் மக்கள் மிகவும் வெறுத்த ஒன்று இந்த பவர் கட்..ஆம் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் மின்சாரம் இல்லாமல் இருந்து பாருங்கள் ..தெரியும் ஏன் நான் புலம்புகிறேன் என்று..சம்சாரம் இல்லாமல் கூட இருந்து விடலாம்,ஆனால் மின்சாரம் இல்லாமல் இருக்கவே முடியாது..சுட்டெரிக்கும் கோடை கால மாதத்தில் , அதுவும் இரவில் கூட வியர்த்து கொட்டும் இந்த நேரத்தில் , ஈவு இல்லாமல்,இறக்கம் இல்லாமல், சுமார் பனிரெண்டு மணி நேரம் மின்சார துண்டிப்பு.. மின்சாரம் இல்லாமல் புழுக்கத்தில் அவிந்தோம்.புலம்பினோம்,தவித்தோம்,ஏங்கினோம்,..அப்படியே இரவை கடந்தோம்...அநேகமாக பவர் கட்டை பற்றி இந்த வருடம் நான் தான் பதிவை ஆரம்பித்து வைக்கிறேன் என்று தோன்றுகிறது..இது தொடக்கம் தான் என்று நன்றாக எனக்கு தெரியும்..அண்டை வீட்டு காரனிடம் புலம்பும் இந்த விஷயத்தை நான் இந்த பதிவின் மூலமாக சர்வதேச சமூகத்திடம் பகிர்ந்து கொள்கிறேன் என் புழுக்கத்தை ..வியர்வை துளிகளில் நனைந்து கொண்டே ...

Saturday, April 18, 2009

ஐ.பி.எல்-விளம்பர இடைவேளையில் இதை படியுங்கள்


பண மழை கொட்டும் ஐ.பி.எல் விளையாட்டு..
"பதினொன்று முட்டாள்கள் விளையாட,பதினோராயிரம் முட்டாள்கள் பார்க்கும் விளையாட்டு" என்று பிரபல அறிஞர் பெர்னார்ட் ஷா எப்போதோ கூறியிருந்தார்..ஆனால் அவர் கூறியதில் பாதி தான் மிகச்சரியான கருத்து..பாதிக்கருத்து தவறு...ஆம் பதினொன்று முட்டாள்கள் விளையாட என்று கூறியது தான்..தவறான கருத்து ..நம்மை முட்டாள் என்று கூறியது தான் மிகப்பொருத்தம் ...ஆனால் இப்போது பதினோராயிரத்திலிருந்து எண்ணிக்கை சுமார் 111 கோடிகளை தாண்டி விட்டது ..நம்மை முட்டாளுக்கும் அறிவாளிகளின் கூட்டு சதியை பற்றி தான் இங்கு பேச போகிறேன்..குறிப்பாக ஒவ்வொரு பகுதியாக நம் நாட்டை பிரிக்கும் இவ்விளையாட்டின் உள்நோக்கம் ..சரி அந்தந்த பகுதியை சேர்ந்தவர்கள் விளையாடுகிறார்களா என்று பார்த்தால்..ஒரு பெயருக்காக அந்த பகுதியை சேர்ந்த ஒரு இளைஞனுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.மீதி எல்லாம் வெளிநாட்டு இறக்குமதிகள் ..குறிப்பாக நமது பகுதியின் பேரை கொண்ட அணியில் எத்தனை உள்ளூர் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது என்று கவனியுங்கள்...சரி அதெல்லாம் விடுங்கள்..முக்கியமான விஷயத்திற்கு வருவோம்..ஆம் அது தான் துட்டு விஷயம்..குத்து மதிப்பாக நமது பி.சி.சி.ஐ விற்கு இவ்விளையாட்டு மூலம் கிடைக்கப்போகும் வருமானம் சுமார் 8200 கோடி , இது அத்தனைக்கும் காரணம் நாமே தான் ..ஆம்..உலகம் முழுவதும்..குறிப்பாக இந்தியாவில் 40 கோடி பேர் இந்த போட்டிகளை பார்த்து ஏமாறுகின்றனர்..மேலும் கேளுங்கள்..இதனை ஒளிபரப்பும் சோனி மாக்ஸ் என்ற தொலைகாட்சி நிறுவனம் இதுவரை சுமார் 400 கோடி சம்பாதித்துள்ளது..அதாவது விளம்பரத்திற்கான சுமார் 120000 நொடிகள் விற்று தீர்ந்து விட்டன..மிச்சம் அவர்களிடம் இருப்பது 20% விளம்பரத்திற்கான நேரம் மட்டும் தான்..மேலும் இந்த அணிகளின் முதலாளிகளுக்கு சுமார் 7000 கோடி வருமானம் நம்மால் வர இருக்கிறதாம்.இவர்களுக்கு இந்த மாபெரும் சிந்தனை எப்படி தோன்றியிருக்கும் என நினைத்தேன்..அட..நம்ம பழைய பழமொழியில் இருந்து தான் வந்திருக்கு இந்த விளையாட்டு சிந்தனை..அந்த பழமொழி.."ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் " .அதெல்லாம் சரி ஸ்கோர் எவ்வலோனு தெரியலயே..நீங்களும் கண்டினூ பண்ணுங்க மாட்ச்ச ..

Monday, April 13, 2009

கற்றதனால் ஆன பயன்..


எங்களது சம்பளம்
உங்கள் கண்களை உறுத்திற்று
வாழ்கை முறை கண்டு
வயிறு எறிந்தீர்கள்
கலாசாரத்தை கெடுத்தோம்
என்றொரு புகாரும் உண்டு
பப்புகளில் புகுந்து உதைத்தீர்கள்
சினிமா எடுத்தீர்கள்
பத்திரிகைகளில் கிழித்தீர்கள்
பெண் கொடுக்க மறுத்தீர்கள்
எங்கள் சம்பாத்தியத்தின்
பெரும் பகுதியை
வரியென பிடுங்கினீர்கள்
நாங்கள் அந்நிய தேசங்களிலிருந்து
ஈட்டி வந்த பணத்தில்
பாலங்கள் கட்டினீர்கள்
"இந்திய ஒளிர்கிறது" என
விளம்பரம் செய்தீர்கள்
இதோ கும்பல் கும்பலாக
நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம்
சந்தோசம் தானா
சகோதரர்களே?
உங்கள் சட்டைகளை பற்றிக்
கேட்கிறோம்...
"கணினிமொழி கற்றதன்றி
வேறென்ன பிழை செய்தோம்?"


நன்றி
செல்வேந்திரன்

Saturday, April 11, 2009

மாத்தி யோசி


தேர்தலை பற்றி அநேகமாக அனைவருமே எழுதி வரும் இந்த நேரத்தில்..நானும் அதே தேர்தலை பற்றி தான் சொல்ல போகிறேன்..ஆனால்..சற்று வித்தியாசமாக..இதை நான் ஒன்றும் புதியதாய் கண்டுபிடித்து கூற வில்லை.ஒரு சின்ன கற்பனை ..இன்றைய தேதியில் கண்டதுக்கெல்லாம் கஸ்டமர் கேர் வந்து விட்டது..அப்புறம் கத்திரிக்காய் நசுங்கிருந்தா கூட கன்சூமர் கோர்ட் வரைக்கும் காய்கறி காரண இழுக்கும் இந்த தேசத்தில் ..ஏன் வாக்காளருக்கு என்று பிரத்யேகமாக ஒரு கஸ்டமர் கேர் ஆரம்பிக்க கூடாது..அதுக்குன்னு ஒரு டோல் ப்ரீ நம்பர் ஏன் இருக்க கூடாது..குறிப்பிட்ட அளவுக்கு மேல் புகார்கள் மீது நடவடிக்கையே எடுக்காமல் போனா அந்த நாடாளுமன்ற உறுப்பினரின் பதவியை ஏன் ரத்து பண்ண கூடாது..அட்லீஸ்ட் தற்காலிகமாக ..பின்னர் நடவடிக்கை எடுத்த பின்னர் ரிகனக்சன் கொடுக்கலாம் ..பதவியை ..ஏதோ இதல்லாம் கற்பனைல பேசல...ஏன்..தொலைபேசி கட்டணம் கட்டலனா மட்டும் தானா கட்டாகுதுல கனெக்சன் .அந்த மாதிரி இவர்களை இப்படி நடத்துனா தான் அறிவு வரும்..இதெல்லாம் நடக்கிற காரியமா ..அப்படின்னு நீங்க நினச்சா இத காமடியா எடுத்துகோங்கோ ..பரவாயில்லையேன்னு தோனுச்சுனா இத நாலு பேருக்கு சொல்லி சிந்திக்க வைங்க..எது எப்படியோ..மறக்காம கருத்துகளை சொல்லி விட்டு செல்லுங்கள்..

Thursday, April 9, 2009

மாற்றம் தருமா மனித நேய மக்கள் கட்சி

முஸ்லீம் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட ஒரு மாபெரும் இயக்கம் தான் த.மு.மு.க. நீண்ட யோசனைக்குப்பின் அரசியல் கட்சி உருவாக்க நினைத்து உருவானது தான் ம.ம.க...அதாவது மனிதநேய மக்கள் கட்சி ..
தோன்றிய மறுகணமே ..அரசியல் உலகில் ..மிகப்பெரிய்ய எதிர்பார்ப்பை உருவாக்கியது இந்த மனித நேய மக்கள் கட்சி ...இன்று கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டாத நிலையில் ..தனித்து போட்டியாம் ...
இந்த அறிவுப்பும் ஒரு மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கும் என நான் நினைத்தேன்.ஆனால் இது ரொம்ப தாமதம் ...
இவர்கள் அறிவித்திருக்கும் தொகுதிகள் அனைத்தும் ..ரொம்ப கஷ்டம் ..
அண்ணன் ரிதீஷும் ..தயாநிதி மாறனும் ..அவ்வளவு சீக்கிரம் தோற்க மாட்டாங்க ..
ஆனாலும் பார்ப்போம்..என்ன நடக்க போகிறது என்று ..அரசியலே ஒரு மாதிரி தான்