Monday, July 12, 2010

முஸ்லிம் =தீவிரவாதியா?

என் இலக்கிய நண்பர் ஒருவர் கவிதை சொன்னார்.

”இந்தியா ஒளிர்கிறது.
தேசமெங்கும்...
தீவீரவாதத் தீ..!”

muslims_360இந்த கவிதையை நான் திருத்தச் சொன்னேன். ஏனென்றால் உலகில் எந்த பிரச்சினையும் இல்லைவே இல்லை. தீவிரவாதம் மட்டுமே ஒற்றைப் பிரச்சினை... என்கிற அமெரிக்காவின் குரல் இது. ஈராக்கின் எண்ணெய் வளத்தைக் கொள்ளையடிக்க பயங்கரவாதத்திற்கு எதிரான போரை நடத்திய அமெரிக்காவின் பாணியில் பச்சை வேட்டை நடத்தும் நாடாக நாம் உள்ளோம். இந்தியாவில் நாம் வாழ்வதாக நம்பிக்கொண்டு இருக்கிறோம். உண்மையில் நாம் அமெரிக்காவின் அடிமைகள்.

அவர் கவிதையை திருத்தினார்..!

”இந்தியா ஒளிர்கிறது..
தேசமெங்கும்...
வறுமைத் தீ..!”

இலக்கியம்,வரலாறு ஊடகம் என எல்லாவற்றிலும் ஆதிக்கவாதிகள் சொல்வதைத் திரும்ப சொல்லும் கிளிப்பிள்ளைகள் போல வாழ்கிறோம்.

இது நம்பிக்கைகளின் தேசம்.

கர்ணன் கவசகுண்டலத்துடன் பிறந்தான் என்கிற நம்பிக்கை மாதிரி ஒவ்வொரு இஸ்லாமியனும் வெடிகுண்டுடன் பிறக்கிறான் என்பது ஊடகங்களின் நம்பிக்கை. எல்லா சமூகத்திலும் குற்றவாளிகள் உண்டு. ஆனால் ஒரு சமூகத்தையே குற்றவாளியாகப் பார்க்கிற மனோபாவம் மிகவும் ஆபத்தானது.
சாதியத்தை வேரறுப்பதில் முனைந்த பெளத்தம், ஆரியத்திற்கு முன்னால் முகவரி இழந்தது. கிறிஸ்தவம் இந்திய சூழலில் சாதியத்தைத் தழுவிக் கொண்டது. இஸ்லாம் மட்டுமே சாதியத்தை முற்றிலுமாக மறுப்பதில் வெற்றி கண்டது. சாதியத்தின் உயர் அடுக்கில் சுகம் காணும் பார்ப்பனியம் இதை எதிர்கொள்ள முடியாமல் அவதூறுகளின் அரசியலில் களம் இறங்கி உள்ளது.

பொதுவுடமை அரசியலை உலக அளவில் அதிகாரம் இழக்கச் செய்து விட்ட ஏகாதிபத்தியம், இஸ்லாமிய அரசியலின் போர்க்குணத்தை எதிர்கொள்ள திணறி வருகிறது. ஆகவே பயங்கரவாதம் என்கிற சொல்லைக் கட்டவிழ்த்து விட்டு, ஊடக சர்வாதிகாரம் மூலம் அதை நிறைவேற்றி வருகிறது.

ஊடகத்தின் மையமாக திகழும் திரைக்கலை இதில் முக்கிய பங்காற்றுகிறது. கறுப்பு வெள்ளை காலத்தில் துணை கதாபாத்திரமாகவும் உதவி செய்பவராகவும் முஸ்லிம்களை சித்தரித்தனர். இந்தப் போக்கை ரோஜா என்கிற திரைப்படத்தின் மூலம் மணிரத்னம் என்கிற பார்ப்பனர் மாற்றி வைக்கிறார்.

இந்திய ஆக்கிரமிப்பிலும் பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பிலும் மூச்சு திணறும் ஒரு மாநிலத்தைப் பற்றி... அரசு பயங்கரவாதத்திற்கு ஆதரவாக நியாயப்படுத்தி அம்மக்களை கொச்சைப் படுத்தினார். அங்கே ஒவ்வொரு குடிமகனும் ஒரு சிறைக்கைதியைப் போல நடத்தப் படுகிறான் என்கிறனர் மனித உரிமை ஆர்வலர்கள். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வணிக வெற்றிக்காக மண்ணின் மைந்தர்களை இழிவுபடுத்தி வெற்றி பெற்றார். தொடர்ந்து வல்லரசு போன்ற இந்துத்துவப் படங்கள் வரத் தொடங்கின. அர்ஜூன் போன்ற மத வெறியர்கள் தேசப்பக்தியின் பெயரால் முஸ்லிம்களை இழிவுப்படுத்தி, தொடர்ந்து இயங்கினர்.

பாபர் மசூதி இடிப்பைக் குறித்து இருட்டடிப்பு செய்து விட்டு அதன் எதிர்வினையாக நிகழ்ந்த பம்பாய் குண்டுவெடிப்புக்கு எதிரான குரலை மட்டுமே பதிவு செய்ததன் மூலம் மணிரத்னம் யார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பால்தாக்கரேயிடம் பாராட்டு பெற்றதன் மூலம் அவருக்கும் தேச பக்தி இருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

உலக நாயகன் கமல் தன் பங்குக்கு ஏற்கெனவே ஹே ராம் படத்தைப் போலவே, தற்போது 'உன்னைப் போல் ஒருவன்' என தன் கலைச்சேவையை தொடர்கிறார். கடவுள் இல்லை என்கிற பார்ப்பானை ஆயிரம் முறை சந்தேகிக்க வேண்டும் என்கிற அண்ணன் அறிவுமதியின் வார்த்தைகளுக்கு சான்றாக விளங்குகிறார்

இதற்கு எதிர்வினையாற்ற வேண்டிய வலிமையோ, இதை எதிர்கொள்ள போதிய வரலாற்றுப் பார்வையோ அரசியல் அறிவோ ஊடகங்களில் இருக்கும் இஸ்லாமியர்களுக்கு இல்லை. ஆகவே இஸ்லாமியர் பற்றிய சித்திரத்தை எதிரிகளே தீர்மானிக்கிறார்கள். அவதூறுகளின் அரசியல் தொடர்கிறது.

-நன்றி  


Wednesday, June 30, 2010

எம்மொழி செம்மொழியானது




மொழிக்காக சிந்தப்பட்ட
குருதிப் பெருக்கால்
நனைந்து நனைந்து
எம்மொழி
செம்மொழியானது !
ஆதிக்க வன்புணர்ச்சிக்கு
ஆளான தமிழ்த்தாயின்
காயங்கள் ஆறாது!
புகழ்மாலை சூட்டுவதால்
போர்க்குற்றம் மறையாது!
பிள்ளைக்கறி கேட்கும்
பெரும்பசிக்கு இரையான
தமிழ்ச்சாதி
இனி ஒருபோதும் உறங்காது!
ஜனநாயகத்தின்
விலகாத திரைச்சீலைகளில்
ஹிட்லரை மிஞ்சும்
இராஜபக்சப் படுகொலைகள்!
செம்மொழிச் செம்மலே!
சொந்தக் காலில் நிற்க முடியாத
காலத்திலும்
தன் வாரிசுகளின் பதவிக்கு
பந்தக்கால் நடுவதில் நாட்டம் கொள்ளும்
அதிகார வெறியுனக்கு!
தமிழர்களின் நிர்வாணத்தால்
தயாரிக்கப்பட்டது
உன் பதவிப் பொன்னாடை!
நான் என்று சொன்னால்
ஒட்டாதது
உதடுகள் மட்டுமல்ல!
துரோகிகளின் பட்டியலில்
வரலாற்றுப் பிழையான
உன்பெயரும் தான் !
வீழ்வது
நாமாக இருந்தோம்!
வாழ்வது
தமிழின் பெயரால்
பிழைப்பு நடத்தும்
ஈனர்களின் கூட்டம்!
ம‌லிந்த‌ அர‌சியல் ந‌ட‌த்தும்
உன் த‌வ‌றுக‌ளைக்
மன்னிக்கக் கூடும்..!
மன்னிக்க முடியாது..!
பிணங்களின் மீதேறி
நீ நடத்தும்
முடிவற்ற பெருநாடகம்!
-நன்றி 
அமீர் அப்பாஸ்  



Monday, March 15, 2010

"இஸ்லாம் மதமில்லை, மார்க்கம்"

தமிழகத்தின் தற்போதைய பர பரப்பு ..டாக்டர் பெரியார் தாசன் இஸ்லாத்தை தழுவியது தான்.இது பலருக்கும் அதிர்ச்சியாகவும் , கவலையாகவும்..குறிப்பாக அவால்லாம் சந்தோஷப்படுவதாக தெரிகிறது..ஏன்? இந்த குதூகலம்..குறிப்பாக பதிவர்கள் மத்தியில்..நாத்திகவாதி மதவாதியாகிப்போனார் என்கிறார்கள்..இல்லை..இஸ்லாம் மதமில்லை ...இஸ்லாம் ஒரு மார்க்கம்..சத்தியம்..வாழ்க்கை நெறி..மற்றவர்கள் இதை புரிந்து கொள்கிறார்களோ இல்லையோ..நாத்திகவாதிகள் இதை நன்கு அறிவார்கள்..பெரியாரே இதற்க்கு உதாரணம்.ஜாதி வெறி உச்சத்தில் இருந்த அந்த காலத்தில், இஸ்லாம் பெரியாரின் மனதில் முழுமையாக குடிகொண்டது..ஆகையால் தான் அவர் கூறினார்
"இஸ்லாத்தை தழுவி முஸ்லிமாகும் வரை நமக்கு ஒரு போதும் சுய மரியாதையோ, நீதியோ, முன்னேற்றமோ கிடைக்க போவதில்லை"

"ஜாதி வெறிக்கு இஸ்லாமே ஒரு நன் மருந்து "

1947 மார்ச் 18 ல் திருச்சியில் பேசிய ஒரு பொதுகூட்டத்தில் பெரியார் அவர்கள்


"recommendable facts in Islam were: confession of one invisible and formless God; proclamation of equal rights for men and women; and advocating of social unity. Furthermore, Islam is not an Aryan religion. There are no caste distinctions in Islam"


இறை மறுப்பு கொள்கையால் பல்வேறு சமயங்களில் அவர் குரான் உள்பட பல்வேறு வேதங்களை சாடியிருந்தாலும்..இஸ்லாம் அவரை வெகுவாகவே கவர்ந்தது என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளன .


இன்னொரு சந்தர்ப்பத்தில் அவர் கூறியது 


"இந்து என்ற மதத்தில் இருந்து விடுதலை பெறுபவர்களுக்கு நான் மற்ற மதத்தை பரிந்ந்துரைப்பேன் என்றால் அது நிச்சயம் இஸ்லாம் தான்..தாழ்த்தபட்டோரை தன் சொந்த பந்தங்கலாக நினைத்து சமூகத்தில் சம உரிமை வழங்குவது இஸ்லாம் தான்"


நாத்திகவாதிகள் முழுமை பெறாமலே இருப்பார்கள்..குழப்பங்கள் அவர்களை குடைந்தெடுக்கும்..வாழ்க்கையில் வெற்றிடம் அதிகம் நிரம்பியிருக்கும்..
கடவுள் மறுப்பு என்ற கொள்கையால் பெரியார் இருந்தது போல் பிடிவாதமாக இருக்கும் நாத்திக சகோதரர்கள் இன்னும் குழப்பம் அடைந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்..நல்லது..குழப்பம் அடைய..அடைய  தான் தெளிவு பிறக்கும்..டாக்டர் அப்துல்லாவை கேவலப்படுத்தும் திட்டங்களை உடனே கை விட்டு சற்று சிந்திக்க வேண்டுகிறேன்..உங்களுக்கு அனைத்தும் தெரியும் என்று நினைக்க வேண்டாம்..தெரியாதது பல புரிந்தது தான் இந்த பரபரப்பு செய்தி.
தாழ்த்தபட்டவர்கள்(இஸ்லாம் இதை வெறுக்கிறது) என்று அழைக்கப்படும் உண்மை தமிழர்களே, , நாத்திகவாதிகள் என்று தங்களை அழைத்து கொள்ளும் அன்பு சகோதரர்களே பிடிவாதம் வேண்டாம், சற்று சிந்தியுங்கள்.