Monday, December 31, 2012

அக்கப்போர்-31/12/2012

செய்தி-1

மருத்துவ மாணவியை கற்பழித்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வாங்கி தருவோம்- காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா 

# ஆறு பேரையும் தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைங்க..போலி என்கௌண்டர்ல போட்டு தள்ளுங்க..அதுக்கு ஒரு கதை தயார் பண்ணி சொல்லுங்க..நாங்க கேட்டுக்கிருவோம்..விஷயம் சீக்கிரம் நடக்கட்டும்..செய்தி-2

அரசுகளும், அரசியல் கட்சிகளும் தொலைகாட்சி சேனல் மற்றும் கேபிள் டி.வி. வர்த்தகத்தில் ஈடுபட அனுமதிக்கக் கூடாது என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.#அப்ப..டி.வி யில எந்த சேனலும் வராதே..செய்தி-3

சி.டி. விவகாரத்துக்கு பிறகு முன்பைவிட அதிக பக்தர்கள் ஆசிரமத்துக்கு வருகிறார்கள்.நித்தியானந்தாவுடன் இன்னும் நல்ல தொடர்பில் இருப்பதாக நடிகை ரஞ்சிதா கூறியுள்ளார்.

#இன்னும் நாலு வருஷத்துக்கு ஏன்னா வேணாலும் நீங்க பேட்டி கொடுக்கலாம்..நோ ப்ராப்ளம் இந்த வார புகைப்படம் இந்த வார  "ட்வீட்" 

உருப்படியான விஷயம் ஏதாவது செய்ய விரும்பினால் உங்கள் வாழ்நாளில் ஒரு அனாதை குழந்தையின் படிப்பு செலவுக்கு உதவும் முறையில் தத்தெடுங்கள்
படித்ததில் "பிடித்தது" 

பார்வைகளால் உனக்கும் எனக்கும் பரவும் மின்சாரம் போதுமடி நாட்டின் மொத்த மின்சார தேவையையும் பூர்த்தி செய்ய !!
இந்த வார "அறிமுகம்"

தமிழ் திரைப்படங்களை உரிமையோடு விமர்சனம் செய்யும் கனடா நாட்டை சேர்ந்த வெள்ளைக்கார நண்பன் "REVIEW RAJA-ரிவ்யூ ராஜா"


Saturday, December 22, 2012

அக்கப்போர்-23/12/2012"செய்தி-1"

பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாக உள்ள நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தை தியேட்டர்களில் வெளியிடுவதில்லை என விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் முடிவு செய்துள்ளனர்

# ஒரு சந்தேகம்..துப்பாக்கி பாணியில்..இதுவும் விளம்பர யுக்தியா இருக்குமோ..
"செய்தி-2"

நான்காவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா குஜராத் மாநிலத்துக்குச் செல்கிறார்.

# வரும்போது கரண்ட் (மின்சாரம்) வாங்கிட்டு வாங்க..கலவரத்த வாங்கிட்டு வந்துராதீங்க.."செய்தி-3"

டெல்லியில் மருத்துவப் படிப்பு படிக்கும் மாணவி கற்பழிக்கப்பட்டதையடுத்து நாட்டில் உள்ள பெண்களுக்கு ஒருவித பயம் வந்துள்ளது. இதனால் அவர்கள் தங்களை காத்துக் கொள்ள கைப்பையில் கத்தியும், மிளகாய்த்தூள் ஸ்ப்ரேயும் வைத்துள்ளனர்.

#என்கௌண்டர் எக்ஸ்பர்ட் வெள்ளத்துரையை டெல்லிக்கு பார்சல் பண்ணுங்கப்பா..."இந்த வார கவிதை "


வீட்டில் சில செடிகளை
நட்டு வைத்து விட்டுச் சென்றேன்
பெருமரமாகி
கிளைபரப்பி நிற்கிறது..!
சின்னஞ்சிறு மழலையாய்
கொஞ்சி மகிழ்ந்த என் மகள்
பருவப் பெண்ணாக..
சிவந்து நிற்கிறாள்..!
அடர்ந்த மெளனத்தால் கனத்திருந்த
மலைகளின் உச்சியில்
என் துயரத்தின் பெருமூச்சையும் தாண்டி
சில குறிஞ்சிப் பூக்கள்
பூத்திருந்தன..!
என்னோடு சிறைக்கு வந்த
கொலைக் கைதிகளில் சிலர்
தண்டனைக் காலம் முடிந்து
வீடு திரும்பி விட்டனர்..!
எனக்கான விசாரணைக் காலம்
முடிவதற்குள்
சிலரின் ஆயுள் தண்டனையும்
முடிந்திருந்தது..!
நீதி தேவதையின் குருட்டு விழிகள்
கண் திறந்து பார்ப்பதற்குள்
என் இளமை வனப்பு
எரிந்து சாம்பலாகி இருந்தது..!
பிடிபட்ட முதல் நாள்
சித்ரவதைகளுக்கு ஊடாக
நான் சொன்ன வாக்குமூலத்தையே
இறுதியில்
தீர்ப்பாகத் தந்தார்கள்
”நான் குற்றமற்றவன்” என்று..!

நன்றி 
கவிஞர் அமீர் அப்பாஸ் 


கவிதை சொல்ல வருவது என்ன? உங்கள் ஊகங்களுக்கே விட்டு விடுகிறேன்..
"இந்த வார புகைப்படம் ""இந்த வார இசை "


உலகையே கலக்கி வரும் ரஹ்மானின் பாடல்..."இந்த வார ட்வீட்"

பேஸ்புக், ட்விட்­டர், எல்லாம் வர்ரதுக்கு முன்னயே ஸ்டேட்டஸ் போட்டவன் தமிழன்

#ஆட்டோ வாசகங்கள்


Sunday, December 16, 2012

அக்கப்போர்-16/12/2012


நீர்ப்பறவை துரித விமர்சனம் 
சமீபத்தில் நான் கண்ட நீர்ப்பறவை திரைப்படம், நிச்சயம் ஒரு உலக சினிமா வகை என்பதில் ஆச்சர்யமில்லை..இம்மண்ணின் கதையை, மக்களின் கதையை உயர் தரத்தில் சொன்னால்..அது தான் உலக சினிமா..இப்படத்தில் வரும் அருளப்பசாமி, எஸ்தர் ஆகியோர் என்  கண் முன்னே இன்னும் உலாவிக்கொண்டிருக்கின்றனர்.நெய்தல் நிலத்தின் உப்புக்காற்று படம் பார்க்கும் நம்மை அப்பிக்கொள்கிறது.அப்படி ஒரு விஷுவல் ட்ரீட். .ஊர் மக்களுக்கு முன்னாடி அழுது கொண்டே சவால் விடும் அந்த ஒரு காட்சி கதாநாயகனின் ஒரு பானை  நடிப்பின் ஒரு சோறு பதம்..எதுவும் பேசாமல் தனது காதலனின் படகு தயார் ஆவதை பார்த்து விட்டு செல்லும் கதாநாயகியின் அந்த மௌனப்பார்வை தேசிய விருது கமிட்டியின் ஆட்களை நிச்சயம் தூங்க விடாது.பூ ராம் என்ற நடிகர், நிச்சயம் ஒரு பூ தான்..நடிப்பின் குறிஞ்சிப்பூ. அவர் மௌனமாக பார்க்கும் அந்த கவலை தோய்ந்த பார்வை, ஆயிரம் அர்த்தங்கள் கொண்ட பார்வை. .சிறுபான்மையினரை பாகிஸ்தான் தீவிரவாதியாக சித்தரிக்காமல் , நம்பல்கி என்று வசனம் பேச விடாமல்..தேசப்பற்றுள்ள நம்பிக்கை கதாபாத்திரமாக காட்டியிருப்பது இயக்குனரின் நேர்மைக்கு எடுத்துக்காட்டு..சமுத்திரக்கனி பேசும் வசனங்கள் பொதுப்புத்திக்கு கொடுக்கப்படும் ஷாக் டிரீட்மன்ட். .நீர்ப்பறவை  ஐநாக்ஸில் பார்க்க வேண்டிய படம் அல்ல..ஐ.நா சபையில் பார்க்க வேண்டிய படம்..செய்தி-1

எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் வடிவமைக்கப்பட்டது, தேர்தல் கமிஷன் ஒதுக்கிய, இரட்டை இலை சின்னம் அல்ல; அது, பறக்கும் குதிரையின் சிறகுகள் என, சென்னை ஐகோர்ட்டில், அட்வகேட்-ஜெனரல் தெரிவித்தார்

# சாச்ச.,,இத பாத்தா..ரெட்டை இலை மாதிரி தெரியலயே..ஆனா...?????.சொன்னா , அரெஸ்ட் பண்ணுவீங்க..எதுக்கு வம்பு??
செய்தி-2பாலிவுட் நடிகை வித்யா பாலன் திருமணம்..

#பாராளுமன்றத்தில் அமளியும்..பாரத் பந்தும் இல்லையா?


இன்றைய ட்வீட்


அதிகாலை நேரம் வாக்கிங் போகும் ஆண்ட்டிகள் இந்த சமூகத்திற்கு ஒரு செய்தியை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். #டயட் முக்கியம்
இன்றைய தகவல் 


உலகிலேயே முதல் பெண் மருத்துவரை உருவாக்கியது சென்னை மருத்துவக் கல்லூரி.

இன்றைய லாஜிக்


பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களுக்கு ஃபைன் போட்டால் அவர்கள் கேட்கும் கேள்வி "சிகரட்ட முடிஞ்சா தடை செய்வது தானே?"