Sunday, April 19, 2009
இனிதே துவங்கியது பவர் கட்..
மீண்டும் இனிதே துவங்கியது பவர் கட்..நீண்ட நாட்களாக நாங்கள் ஆவலுடன் காத்திருந்த மின்சார துண்டிப்பு மீண்டும் ஒரு முறை கோலாகலமாக துவங்கியது..
சென்ற வருடத்தில் மக்கள் மிகவும் வெறுத்த ஒன்று இந்த பவர் கட்..ஆம் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் மின்சாரம் இல்லாமல் இருந்து பாருங்கள் ..தெரியும் ஏன் நான் புலம்புகிறேன் என்று..சம்சாரம் இல்லாமல் கூட இருந்து விடலாம்,ஆனால் மின்சாரம் இல்லாமல் இருக்கவே முடியாது..சுட்டெரிக்கும் கோடை கால மாதத்தில் , அதுவும் இரவில் கூட வியர்த்து கொட்டும் இந்த நேரத்தில் , ஈவு இல்லாமல்,இறக்கம் இல்லாமல், சுமார் பனிரெண்டு மணி நேரம் மின்சார துண்டிப்பு.. மின்சாரம் இல்லாமல் புழுக்கத்தில் அவிந்தோம்.புலம்பினோம்,தவித்தோம்,ஏங்கினோம்,..அப்படியே இரவை கடந்தோம்...அநேகமாக பவர் கட்டை பற்றி இந்த வருடம் நான் தான் பதிவை ஆரம்பித்து வைக்கிறேன் என்று தோன்றுகிறது..இது தொடக்கம் தான் என்று நன்றாக எனக்கு தெரியும்..அண்டை வீட்டு காரனிடம் புலம்பும் இந்த விஷயத்தை நான் இந்த பதிவின் மூலமாக சர்வதேச சமூகத்திடம் பகிர்ந்து கொள்கிறேன் என் புழுக்கத்தை ..வியர்வை துளிகளில் நனைந்து கொண்டே ...
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
இந்தியாவிலேயே மிகக் குறைவான நேரம் மின் துண்டிப்பு நமது தமிழகத்தில் மட்டுமே என்பதை
பொதுமக்களுக்கு எடுத்துச்சொல்வதில் பெருமை
கொள்கிறோம்.
:-அப்பாவி அரசியல்வாதி
தலை நகர நக்கல் என்பது இது தானோ...?
பிற மாவட்டங்களில் தினமும் கட்டாயமாக இரண்டு மணி நேர துண்டிப்பு வருடமாக நடப்பது அறிவீரோ என்ன...? ஒரு சென்னையில் இல்லாதவர்கள் மனிதர்கள் இல்லையோ?
மின்சாரத்தை கட்பண்றவங்களுக்கு நாம ஓட்டை கட் பண்ணி. அவர்களை எதிர்க்கும் வலுவான மாற்று அணிக்கு போடுவதன் மூலமே இதனை தீர்க்க முடியும்.
Post a Comment