Thursday, April 9, 2009

மாற்றம் தருமா மனித நேய மக்கள் கட்சி

முஸ்லீம் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட ஒரு மாபெரும் இயக்கம் தான் த.மு.மு.க. நீண்ட யோசனைக்குப்பின் அரசியல் கட்சி உருவாக்க நினைத்து உருவானது தான் ம.ம.க...அதாவது மனிதநேய மக்கள் கட்சி ..
தோன்றிய மறுகணமே ..அரசியல் உலகில் ..மிகப்பெரிய்ய எதிர்பார்ப்பை உருவாக்கியது இந்த மனித நேய மக்கள் கட்சி ...இன்று கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டாத நிலையில் ..தனித்து போட்டியாம் ...
இந்த அறிவுப்பும் ஒரு மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கும் என நான் நினைத்தேன்.ஆனால் இது ரொம்ப தாமதம் ...
இவர்கள் அறிவித்திருக்கும் தொகுதிகள் அனைத்தும் ..ரொம்ப கஷ்டம் ..
அண்ணன் ரிதீஷும் ..தயாநிதி மாறனும் ..அவ்வளவு சீக்கிரம் தோற்க மாட்டாங்க ..
ஆனாலும் பார்ப்போம்..என்ன நடக்க போகிறது என்று ..அரசியலே ஒரு மாதிரி தான்

10 comments:

Anonymous said...

தோற்றாலும் பரவாயில்லை, நமது பலத்தை அறிய முடியுமே. கிடைக்கும் வாக்குகளின் அடிப்படையில் தான் கட்சியின் பலத்தை பரிசோதிக்க முடியும்.

உதயம் said...

அப்பா கட்சியுடன் கூட்டனி பேச்சு வார்த்தை, அப்புறம் அம்மா கட்சியுடன் பேச்சு வார்த்தை,இப்போது சித்தப்பா கட்சியுடன் (சித்தி - ராதிகா) கூட்டனி . எப்போதும் தெளிவான முடிவை எடுக்கும் த.மு.மு.க அரசியலுக்கு வந்ததும் ஏன் இந்த தடுமாற்றம் ?

கலைஞரிடம் இன்னும் பத்து அம்புலன்ஸ்கேட்டு இருந்தால் உடனே கொடுத்து இருப்பார் .சீட்டு கேட்டால் இதயத்தில் இடம் இருக்கிறது என்ற பதிலே வரும்! அப்படி இருந்தும் ஒரு சீட்டு கொடுக்க தயாராக இருந்து இருக்கிறார் ! அதை ம.ம.க பயன் படுத்தி இருக்கலாம் . த .மு.மு.க படி படியாக வளர்ந்த இயக்கம் .அதே பாதையில் சென்று இருக்கலாம் . கட்சி ஆரம்பித்த உடன் ஆறு சீட்டு ,எழு சீட்டு என்பது கொஞ்சம் அதிகமாகவே தெரிகிறது !

உங்கள் தனி பலத்தை கண்பிக்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம் ! பார்போம் எத்தனை வோட்டுக்கள் என்று?

Thamiz Priyan said...

முஸ்லிம்களின் ஓட்டுக்கள் அதிகம் உள்ள இடத்தில் தான் போட்டியிடுகின்றார்கள் என்றாலும் முஸ்லிம்களின் ஓட்டுக்களைக் கவர எந்த கள வேலையும் செய்யவில்லை என்பது ஒரு சோகமான செய்தி.. 50,000 ஓட்டுக்கள் வாங்கினாலே கிட்டத்தட்ட பெரிய வெற்றி தான்.

பீர் | Peer said...

அவர்கள் (ம.ம.க) தனித்து போட்டியிட முடிவெடுத்ததே அவர்களின் சரியான ஆரம்பமாய் இருக்கும். பொறுத்திருந்து பார்ப்போம்...

ராஜவம்சம் said...

M.N.M.K.IS NOT RIGHT PARTY

Mannadykaka said...

மனித நேய மக்கள் கட்சி

Anonymous said...

மம கட்சி விரல் விட்டு என்னும் அளவிற்க்கு ஓட்டு பெருவார்கள் என்னமோ போங்க!

Anonymous said...

மம கட்சி விரல் விட்டு என்னும் அளவிற்க்கு ஓட்டு பெருவார்கள் என்னமோ போங்க!

ஜலால் திருப்பூண்டி

Anonymous said...

http://www.youtube.com/watch?v=p4BeBYXGHaI&eurl=http%3A%2F%2F

Anonymous said...

Muslim gal mathil MMK vai vida TNTJ ku than selvakku. TNTJ DMK ku aadaravu yendru kuri irukeerargal. Athanal DEPOSIT ILAPARGAL Yendru ethirparkalam ....