Saturday, April 11, 2009
மாத்தி யோசி
தேர்தலை பற்றி அநேகமாக அனைவருமே எழுதி வரும் இந்த நேரத்தில்..நானும் அதே தேர்தலை பற்றி தான் சொல்ல போகிறேன்..ஆனால்..சற்று வித்தியாசமாக..இதை நான் ஒன்றும் புதியதாய் கண்டுபிடித்து கூற வில்லை.ஒரு சின்ன கற்பனை ..இன்றைய தேதியில் கண்டதுக்கெல்லாம் கஸ்டமர் கேர் வந்து விட்டது..அப்புறம் கத்திரிக்காய் நசுங்கிருந்தா கூட கன்சூமர் கோர்ட் வரைக்கும் காய்கறி காரண இழுக்கும் இந்த தேசத்தில் ..ஏன் வாக்காளருக்கு என்று பிரத்யேகமாக ஒரு கஸ்டமர் கேர் ஆரம்பிக்க கூடாது..அதுக்குன்னு ஒரு டோல் ப்ரீ நம்பர் ஏன் இருக்க கூடாது..குறிப்பிட்ட அளவுக்கு மேல் புகார்கள் மீது நடவடிக்கையே எடுக்காமல் போனா அந்த நாடாளுமன்ற உறுப்பினரின் பதவியை ஏன் ரத்து பண்ண கூடாது..அட்லீஸ்ட் தற்காலிகமாக ..பின்னர் நடவடிக்கை எடுத்த பின்னர் ரிகனக்சன் கொடுக்கலாம் ..பதவியை ..ஏதோ இதல்லாம் கற்பனைல பேசல...ஏன்..தொலைபேசி கட்டணம் கட்டலனா மட்டும் தானா கட்டாகுதுல கனெக்சன் .அந்த மாதிரி இவர்களை இப்படி நடத்துனா தான் அறிவு வரும்..இதெல்லாம் நடக்கிற காரியமா ..அப்படின்னு நீங்க நினச்சா இத காமடியா எடுத்துகோங்கோ ..பரவாயில்லையேன்னு தோனுச்சுனா இத நாலு பேருக்கு சொல்லி சிந்திக்க வைங்க..எது எப்படியோ..மறக்காம கருத்துகளை சொல்லி விட்டு செல்லுங்கள்..
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
மாத்தி யோசி! மாத்தி யோசி!
அரசியல் வாதிக்கு பிரச்சனையான ஒன்றை எப்படி கொண்டு வரமுடியும்
49 ஓ வையே மறைமுகமாக அழிக்க வழிசெய்ய முடியவில்லை ... இதற்கும் ஒரு பட்டன் இருந்தால் ஒரு புரட்சியை காணமுடியும் நண்பா
idea mani....
Post a Comment