Sunday, April 26, 2009

என்னையும் கொஞ்சம் கவனிங்க-டி.ஆர்


தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் , ஆளாளுக்கு ஈழத்தமிழர்களை பிரச்சாரத்தின் பகடை காய்களாக பயன்படுத்தி வருகின்றனர்..காங்கிரஸ் காரன்ல இருந்து தி.மு.க,அ.தி.மு.க, ம.தி.மு.க வை தொடர்ந்து பா.ம.க , கம்யுனிஸ்ட் , ம.ம.க ல்லாம் தாண்டி அரசியல் கோமாளிகளான கார்த்திக் , டி.ஆர் வரைக்கும் அத்தனை பேருக்கும் இப்போ ஈழமே கதி..எத்தனையோ கூட்டணி,எத்தனையோ மேடைகள், எத்தனையோ பிரச்சாரங்கள், பார்த்து புளித்து போன நமக்கு ஒரு என்டர்டைன்மன்ட் க்காக சில அரசியல் காமடியன்கள் இந்த தேர்தல் களத்தில் உலா வருகிறார்கள்..சமீபத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த டி.ஆர் அவர்கள் கட்சிகளின் கூட்டணியை நம்பவில்லையாம்..கிரகங்களின் கூட்டணியை நம்பி தான் போட்டியிடுகிறாராம்..இதற்க்கு மேல் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த டி.ஆரின் ஆவேச பேட்டி

"இந்த தொகுதியில் கூட்டணி கட்சிகளை நம்பி நான் போட்டியிடவில்லை. கிரகங்களின் கூட்டணியை நம்பியே போட்டியிடுகின்றேன்"


"நான் கள்ளக்குறிச்சி தொகுதியை தேர்ந்தெடுத்ததற்கு காரணம் சிவபெருமானின் சங்கரன் என்ற பெயருடைய சங்கராபுரத்தை குறித்தும், ரிஷிகள் வாழ்த்த ரிஷிவந்தியத்தை குறித்தும், சிவபெருமானின் தலையில் நதியாக விழும் கெங்கவல்லியை கடந்து செல்லும் ஆத்தூரை குறித்தும், காடுகள் நிறைந்த ஏற்காடை குறித்தும் உள்ளதால் தேர்ந்தெடுத்துள்ளேன்"

பொறுமைய்யா இருங்க..மிச்சத்தையும் படிச்சிருங்க

"திருச்சியில் எனது கட்சி சார்பில் போட்டியிடும் மன்சூர் அலிகான் இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவ புகைப் படங்களை வைத்து பிரசாரத்தில் ஈடுபட்டார். இதை காவல்துறையினர் தடுத்துள்ளனர். இது எங்கள் பிரசார யுக்திக்கு தடையாக உள்ளது"


தொடர்ந்து விஜய டி.ராஜேந்தர், தான் கள்ளக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்றால் அந்த தொகுதிக்கு என்னென்ன செய்வேன் என்று பட்டியலிட்டு பேசினார்..

டி.ஆரின் ஒட்டுமொத்த பிரச்சார காட்சிகள் யு டுபிள் காமடி காட்சியாக பதிவு செய்யப்படும்..

1 comment:

Vishnu - விஷ்ணு said...

இனி தமிழ் நாட்டுக்கு என்ன கவலை

விஜய டி.ஆர் கிரகங்களின் துணை கொண்டு களத்தில குதிச்சிட்டாருல்ல இனி கலக்கல் தான்.

நாடளும் மக்கள் நாயகன் கார்த்திக்கை எதிர் கட்சிகள் எல்லாம் சேர்ந்து ஒழிக்க பார்க்குது. ஏன்னா அவருவாட்டுக்கு எம்.பி எலக்சன்ல ஜெயிச்சு நாடளுமன்றத்துல போய் தமிழ்நாட்டுக்கு ஆதராவ பேச(?) ஆரம்பிச்சு எதர் கட்சிகளோட வண்டவாளங்களை தண்டவாளத்தில எத்திட்டாருன்னா