Saturday, December 22, 2012

அக்கப்போர்-23/12/2012



"செய்தி-1"

பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாக உள்ள நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தை தியேட்டர்களில் வெளியிடுவதில்லை என விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் முடிவு செய்துள்ளனர்

# ஒரு சந்தேகம்..துப்பாக்கி பாணியில்..இதுவும் விளம்பர யுக்தியா இருக்குமோ..




"செய்தி-2"

நான்காவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா குஜராத் மாநிலத்துக்குச் செல்கிறார்.

# வரும்போது கரண்ட் (மின்சாரம்) வாங்கிட்டு வாங்க..கலவரத்த வாங்கிட்டு வந்துராதீங்க..



"செய்தி-3"

டெல்லியில் மருத்துவப் படிப்பு படிக்கும் மாணவி கற்பழிக்கப்பட்டதையடுத்து நாட்டில் உள்ள பெண்களுக்கு ஒருவித பயம் வந்துள்ளது. இதனால் அவர்கள் தங்களை காத்துக் கொள்ள கைப்பையில் கத்தியும், மிளகாய்த்தூள் ஸ்ப்ரேயும் வைத்துள்ளனர்.

#என்கௌண்டர் எக்ஸ்பர்ட் வெள்ளத்துரையை டெல்லிக்கு பார்சல் பண்ணுங்கப்பா...



"இந்த வார கவிதை "


வீட்டில் சில செடிகளை
நட்டு வைத்து விட்டுச் சென்றேன்
பெருமரமாகி
கிளைபரப்பி நிற்கிறது..!
சின்னஞ்சிறு மழலையாய்
கொஞ்சி மகிழ்ந்த என் மகள்
பருவப் பெண்ணாக..
சிவந்து நிற்கிறாள்..!
அடர்ந்த மெளனத்தால் கனத்திருந்த
மலைகளின் உச்சியில்
என் துயரத்தின் பெருமூச்சையும் தாண்டி
சில குறிஞ்சிப் பூக்கள்
பூத்திருந்தன..!
என்னோடு சிறைக்கு வந்த
கொலைக் கைதிகளில் சிலர்
தண்டனைக் காலம் முடிந்து
வீடு திரும்பி விட்டனர்..!
எனக்கான விசாரணைக் காலம்
முடிவதற்குள்
சிலரின் ஆயுள் தண்டனையும்
முடிந்திருந்தது..!
நீதி தேவதையின் குருட்டு விழிகள்
கண் திறந்து பார்ப்பதற்குள்
என் இளமை வனப்பு
எரிந்து சாம்பலாகி இருந்தது..!
பிடிபட்ட முதல் நாள்
சித்ரவதைகளுக்கு ஊடாக
நான் சொன்ன வாக்குமூலத்தையே
இறுதியில்
தீர்ப்பாகத் தந்தார்கள்
”நான் குற்றமற்றவன்” என்று..!

நன்றி 
கவிஞர் அமீர் அப்பாஸ் 


கவிதை சொல்ல வருவது என்ன? உங்கள் ஊகங்களுக்கே விட்டு விடுகிறேன்..




"இந்த வார புகைப்படம் "







"இந்த வார இசை "


உலகையே கலக்கி வரும் ரஹ்மானின் பாடல்...







"இந்த வார ட்வீட்"

பேஸ்புக், ட்விட்­டர், எல்லாம் வர்ரதுக்கு முன்னயே ஸ்டேட்டஸ் போட்டவன் தமிழன்

#ஆட்டோ வாசகங்கள்






No comments: