Sunday, December 16, 2012

அக்கப்போர்-16/12/2012


நீர்ப்பறவை துரித விமர்சனம் 




சமீபத்தில் நான் கண்ட நீர்ப்பறவை திரைப்படம், நிச்சயம் ஒரு உலக சினிமா வகை என்பதில் ஆச்சர்யமில்லை..இம்மண்ணின் கதையை, மக்களின் கதையை உயர் தரத்தில் சொன்னால்..அது தான் உலக சினிமா..இப்படத்தில் வரும் அருளப்பசாமி, எஸ்தர் ஆகியோர் என்  கண் முன்னே இன்னும் உலாவிக்கொண்டிருக்கின்றனர்.நெய்தல் நிலத்தின் உப்புக்காற்று படம் பார்க்கும் நம்மை அப்பிக்கொள்கிறது.அப்படி ஒரு விஷுவல் ட்ரீட். .ஊர் மக்களுக்கு முன்னாடி அழுது கொண்டே சவால் விடும் அந்த ஒரு காட்சி கதாநாயகனின் ஒரு பானை  நடிப்பின் ஒரு சோறு பதம்..எதுவும் பேசாமல் தனது காதலனின் படகு தயார் ஆவதை பார்த்து விட்டு செல்லும் கதாநாயகியின் அந்த மௌனப்பார்வை தேசிய விருது கமிட்டியின் ஆட்களை நிச்சயம் தூங்க விடாது.பூ ராம் என்ற நடிகர், நிச்சயம் ஒரு பூ தான்..நடிப்பின் குறிஞ்சிப்பூ. அவர் மௌனமாக பார்க்கும் அந்த கவலை தோய்ந்த பார்வை, ஆயிரம் அர்த்தங்கள் கொண்ட பார்வை. .சிறுபான்மையினரை பாகிஸ்தான் தீவிரவாதியாக சித்தரிக்காமல் , நம்பல்கி என்று வசனம் பேச விடாமல்..தேசப்பற்றுள்ள நம்பிக்கை கதாபாத்திரமாக காட்டியிருப்பது இயக்குனரின் நேர்மைக்கு எடுத்துக்காட்டு..சமுத்திரக்கனி பேசும் வசனங்கள் பொதுப்புத்திக்கு கொடுக்கப்படும் ஷாக் டிரீட்மன்ட். .நீர்ப்பறவை  ஐநாக்ஸில் பார்க்க வேண்டிய படம் அல்ல..ஐ.நா சபையில் பார்க்க வேண்டிய படம்..



செய்தி-1

எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் வடிவமைக்கப்பட்டது, தேர்தல் கமிஷன் ஒதுக்கிய, இரட்டை இலை சின்னம் அல்ல; அது, பறக்கும் குதிரையின் சிறகுகள் என, சென்னை ஐகோர்ட்டில், அட்வகேட்-ஜெனரல் தெரிவித்தார்

# சாச்ச.,,இத பாத்தா..ரெட்டை இலை மாதிரி தெரியலயே..ஆனா...?????.சொன்னா , அரெஸ்ட் பண்ணுவீங்க..எதுக்கு வம்பு??




செய்தி-2



பாலிவுட் நடிகை வித்யா பாலன் திருமணம்..

#பாராளுமன்றத்தில் அமளியும்..பாரத் பந்தும் இல்லையா?






இன்றைய ட்வீட்


அதிகாலை நேரம் வாக்கிங் போகும் ஆண்ட்டிகள் இந்த சமூகத்திற்கு ஒரு செய்தியை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். #டயட் முக்கியம்




இன்றைய தகவல் 


உலகிலேயே முதல் பெண் மருத்துவரை உருவாக்கியது சென்னை மருத்துவக் கல்லூரி.





இன்றைய லாஜிக்


பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களுக்கு ஃபைன் போட்டால் அவர்கள் கேட்கும் கேள்வி "சிகரட்ட முடிஞ்சா தடை செய்வது தானே?"




No comments: