Thursday, April 12, 2012

டைட்டானிக் 3D-திரை விமர்சனம்



டைடானிக் படம் முதல் தடவை பார்த்து 14 வருடம் உருண்டோடி விட்டது. விவரம் தெரிந்து நான் பார்த்த முதல் ஹாலிவுட் திரைப்படம்..இன்று மீண்டும் பார்த்தேன் 3d வடிவத்தில் . நோஸ்டால்ஜியா என்று ஏதோ ஒன்று கூறுவார்களே..அதை எஸ்கேப் சினிமாஸின் தயவால் படம் பார்த்த ஒவ்வொரு நிமிடமும் உணர முடிந்தது. அடிக்கடி  ஹாலிவுட் திரைப்படங்களும்...அவ்வப்போது முக்கியமான ஹிந்தி திரைப்படங்களும்...அரிதாக பூக்கும் குறிஞ்சிப்பூ தமிழ்த்திரைப்படங்களை எப்போதாவது தான்   பார்க்க வேண்டும் என்ற எனது கொள்கை மீண்டும் ஒருமுறை டைட்டானிக் 3D யின் தயவால் உறுதி செய்யப்பட்டது. இந்த 14 வருடங்களில் எத்தனை நல்ல தமிழ் படங்கள் வெளியாகியுள்ளன என்ற கேள்விக்கு பதில் என்ன? தமிழ் திரையுலகில் ஏதோ பெப்சிக்கும் கொக்கா கொலாவிற்க்கும் சண்டயாமே..அப்டியே அதை தொடருங்கள்..நாங்கள் தப்பித்தோம்..ஏற்க்கனவே டைட்டானிக் திரைப்படத்தை பற்றி நிறைய அலசி ஆராய்ந்து விட்டதால் இந்த 3d வர்சன் பற்றி சில கொசுறு தகவல்கள் 

# மூன்று வருடங்களுக்கு மேலாக இந்த 3d வர்சனின் வேலை நடந்துள்ளது. 10 வருடங்களுக்கு மேலாக அவதார் என்ற ஒரே திரைப்படம் உருவாக பாடுபட்ட ஜேம்ஸ் கேமரூனுக்கு இந்த மூன்று வருடம் குறைந்த நேரம் தான்..


# ஒரு 3d படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த படம் ஒரு ரெபரன்ஸ் ..அப்படி ஒரு மேஸ்மாரைசிங் எபக்ட்.

# உலகம் முழுவதும் மறக்க முடியாத காதல் கதை என்று அறியப்பட்டாலும்..பல காட்சிகள் வேறு சில விஷயங்களை நினைவூட்டுகின்றன. இறந்து போன 1500 பேரில் முக்கால்வாசி பேர் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்தவர்கள். மறைமுகமாக இயக்குனர் இந்த கருத்தை இறுதி காட்சியில் நினைவூட்டுகிறார்..அதாவது ஏழை ஜாக் இறந்தும்..பணக்கார ரோஸ் பிளைத்துபோயிருப்பார். 

# தற்போது ஆங்கிலம் நன்கு புரிந்ததால்..பல புரட்சிகர வசனங்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது ஆச்சர்யம் அளித்தது. 

# உயிர்பிழைக்க வாய்ப்பு மறுக்கப்பட்ட ஏழை பயணிகளின் போராட்டத்தை   நன்கு காட்சி படுத்தியுள்ளார் இயக்குனர்..இவரின் அடுத்த படமான அவதார் பல நாடுகளில் மக்கள் போராட்டத்தை தீவிர படுத்தியதை இங்கு நான் நினைவு கூற விரும்புகிறேன்.

# மூன்று போன்ற மட்டமான தமிழ் திரைப்படங்களுக்கு மத்தியில் டைட்டானிக் திரைப்படம் உண்மையான சினிமா அனுபவத்தை அளித்தது.

# கிரியேட்டர் என்ற தகுதி ஒரு படம் உருவாக 10 வருடத்திற்கு மேல் பாடுபட்ட ஜேம்ஸ் கேமேர்ரூனுக்கு மட்டும் தான் பொருந்தும்..பர்மா பஜாரில் 20 ரூபாய்க்கு சி.டி வாங்கி ஹாலிவுட்,இரான் மற்றும் கொரிய படங்களை சுட்டு படமெடுக்கும் கோலிவுட் இயக்குனர் நண்பர்களுக்கு சற்றும் பொறுந்தாது.

No comments: