Saturday, December 10, 2011

அரசியல் கோமாளி சு.சுவாமி ஹார்வர்டில் இருந்து நீக்கம்..





அரசியல் குள்ள நரி சுப்பிரமணிய சுவாமியை அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக் கழகம் நீக்கியுள்ளது.  மேலும் அவர் கற்றுத் தரும் 2 பொருளியல் பாடப் பிரிவுகளையும் நிர்வாகம் நீக்கியுள்ளது. 2011 ஜூலை 16 ம் தேதி மும்பையில் இருந்து வெளியாகும் டி.என்.ஏ நாளிதழில் முஸ்லீம்கள் குறித்த சர்ச்சைக்குரிய கட்டுரையை சுவாமி எழுதினார். அதற்கு ஆட்சேபம் தெரிவித்து ஹார்வர்டு பல்கலைக் கழகம் அவரை நீக்கியுள்ளது. 2012 ம் ஆண்டுக்கான பாடப் பிரிவுகள் குறித்த இறுதி முடிவெடுக்க ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்கள் கூட்டம் நடந்தது. அப்போது சுவாமியால் எடுக்கப்பட்டு வரும் 2 பொருளியல் பாடங்களை நீக்குவது என்று முடிவெடுக்கப்பட்டது.

1 comment:

vizzy said...

எல்லா துண்டர்கள் மற்றும் காங்கிரஸ்காரங்கள் ராத்தூக்கத்தை கெடுத்த அந்த ஆள் கொரங்கா இருந்தா என்னா இல்ல குள்ளநரியாய் இருந்தா என்னா?எப்படியோ நாட்டுக்கு நல்லது நடந்தா சரி.