Tuesday, January 1, 2013

தீரா தாகம்


     


 
    விதைகள்    விசமாகி ,
    வெள்ள    எரிக்கஞ்செடி பயிறாகி !

    விளைச்சலும்  பொய்யாகி ,
    வீழ்ந்தானே   விவசாயி !

   ஆடியிலே    பட்டங்க்கண்டு .
    தேடியே     விதைவிதைத்து ! 

   ஆழ     உழுதானே ,
   அன்னாந்து   பார்த்தானே !

    அடைமழை  பெய்யவில்லை ,
    ஆறு குளம்  நிறையவில்லை !

    புயல் மழையும்  பொய்யாகி ,
    பூந்தோட்டம்   சருகாகி !

    புலம்பல்    பொருளாகி !
    போனானே (விவசாயி) பிணமாகி !

     காவிரியை  பூட்டிவைக்கும் ,
     கர்நாடக   சண்டியரே !

     நீதிக்கு   தலைவணங்கா ,
     நீமட்டும்   நிரந்தரமா ?
 
     மார்கழி  விடை கொடுக்க ,
     மறுபடியும்  தை பிறக்க !

     மகிழ்ச்சியில்  மனங் குளிர ,
     மண் உழுதோர்  யா ரிருக்கார் !

     பூமிக்கு     நீர் வார்க்கும் ,
     புகழெல்லாம்  இறைவனுக்கே !- என

     பூரித்து   பொங்கல் வைக்க ,
     புதுநெல்லும் தான்  பறிக்க !

     தங்கமழை  பொழியாதோ ?
     தமிழகமும்   குளிராதோ   ?
 
     தாகமும்  தீராதோ  ?
     தமிழர் முகம்  மலராதோ  ?

 
   நன்றி

பிறைத்தமிழன்     

No comments: