தமிழன்..தமிழ்..உணர்வு..ஈழம்..வீரம் ..இனப்படுகொலை..பேரழிவு..ராஜபட்சே .முள்வேலி முகாம்..இதெல்லாம் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா..இருக்கும்..கடந்த இரண்டு ஆண்டுகளில் இணையத்திலும் சரி..தமிழர்கள் இதயத்திலும் சரி..அதிகமாக உச்சரிக்கப்பட்ட வார்த்தைகள் இவை..மதம், ஜாதி, தேசம் போன்றவைகளை தாண்டி...சராசரி தமிழனாகிய என்னைப்போன்றவர்களுக்கு இன்னும் இவ்வார்த்தைகள் சுடுகின்றன..காரணம்..இவ்வார்த்தைகள் மனித உயிர்கள் சம்பந்தப்பட்டது....தமிழன் செத்தா இனப்படுகொலை...அவனை கொன்ற ராஜபட்சே மனித மிருகம்..சரி .ஆனால் ஆயிரக்கணக்காக செத்து மடிந்த இந்திய முஸ்லீம்கள்?..என்ன பாவம் செய்தார்கள்? .அவர்களை கொன்று குவித்த மோடி ..இன்று மாபெரும் மனிதர்..அரசியல் உதாரணம் .தன் மக்களுக்கு உண்மையானவராம்...சொல்கிறார் செந்தமிழன் சீமான்..அப்படி பார்த்தால் உங்கள் சிந்தனைப்படி.., சிங்கள இனத்திற்கு உண்மையானவன் ராஜபட்சே..எங்கே..அப்படி ஒரு பேட்டி கொடுங்கள் பார்ப்போம்...யார் இந்த சீமான்.சராசரி தமிழனையும்..இளைஞர்களையும்..உசுப்பேற்றி..உணர்வேற்றி..காவு கொடுத்து..அத்தீக்குளிப்பில் குளிர் காயும் உண்மையான இன துரோகி.
செந்தமிழன் யார் ? இப்போது காரணம் புரிகிறது...சிலர் இப்போது என்னை சந்தேக கண்ணோடு, பார்க்க கூடும், காரணம் தமிழனாய் இருந்தும் நான் ஒரு இசுலாமியன்..ஈழத்தில் தமிழர்கள் செத்து மடிகிறார்களே என்ற ஒரே காரணத்திற்க்காக, என் உணர்வுகளை தமிழ் சகோதரர்களோடு பகிர்ந்து கொள்ள , இந்த தீப்பந்தம் பதிவு கொளுத்தப்பட்டது..இருந்தாலும் நான் தமிழனில்லை..தமிழ் உணர்வாளன் இல்லை .இழவு வீட்டில் பாரபட்சம் பார்க்கின்ற கூட்டத்தை சேர்ந்தவர்கள் நாங்கள் இல்லை..ஆகையால் தான்..உணர்ச்சியின் உச்சக்கட்டத்தில் முதன் முதலாக தீக்குளித்தான் சகோதரன் அப்துல் ரவூப்..இறந்த முறை தவறாக இருந்தாலும் அவன் உணர்வுகள் நேர்மையானவை...இத்தீ மற்ற சகோதரர்களையும் பின்னர் காவு வாங்கியது..குளிர் காய்ந்தவர்...காய்ந்து கொண்டிருப்பவர் சீமான் .நான் கேட்கிறேன்..ராஜபட்சே போர் குற்றவாளி என்றால்..மோடி? மனித இனத்தின் முதல் எதிரியல்லவா ..போர் குற்றவாளிப்பட்டியலில் ராஜபட்சேவோடு மோடியின் பெயரையும் இணைத்து கொள்ளுங்கள் தமிழ் உள்ளங்களே.முதல் வரிசையில் மோடியின் பெயர் இருக்கட்டும்.அனுபவத்தில் மூத்தவரல்லவா....இங்கு நான் முஸ்லீம் என்றோ..ஹிந்து என்றோ வேறுபாடு காணவில்லை..இன்று ஆங்காங்கே..இணையத்தில்..ராஜபட்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க தமிழ் உள்ளங்கள் பாடுபட்டு வருகின்றன..அது மட்டும்போதாது..அவன் சர்வதேச அகதியாக்கப்பட வேண்டும் என்பது எனது நிறைவேறா ஆசை..ஆனால்..குஜராத்தில் இறந்து மடிந்த பல்லாயிரக்கணக்கான முஸ்லீம் சகோதர..சகோதரிகளை எப்படி மறப்பது...ராஜ பக்ஷே விற்கு இனப்படுகொலையை அறிமுகம் செய்த மோடியை என்ன செய்வது..அந்த மோடியை புகழ்ந்த சீமானை இப்போது என்ன சொல்வது .செந்தமிழன் சீமான் அவர்களே...வன்னிக்காடுகளில் ஆரம்பித்த உங்கள் அரசியல் பயணம் எங்கே அழைத்து செல்கிறது?..தமிழகத்தில் ...தமிழர்கள் பட்டியலில் இருந்து முஸ்லீம்களை வெளியேற்றி..வெறுப்பேற்றி..சூதாடும் உங்கள் திட்டம் என்ன?..கருப்புச்சட்டை..காவிச்சட்டை அணிய துடிப்பது ஏன்?.எனக்கு கொஞ்சம் புரிகிறது...சர்வதேச தமிழ் உள்ளங்களே உங்களுக்கு இன்னும் புரியவில்லையா?
இப்படிக்கு
சராசரி தமிழன்..
5 comments:
சாட்டையடி .ஆனால் இந்த அடி சொரணயைக் கொடுக்குமா ? தமிழ் ஆர்வலன், தமிழ் இனப் பற்றாளன் எனப் பல்வேறு அடைமொழிகளுடன் மடிசார் மாமியின் முந்தானையில் ஒளிந்து கொண்டிருக்கும் இவன் முகமூடி விரைவில் கிழிய போகிறது.
சரியான சாட்டையடி தன் நாட்டுல நடக்குரத கேட்க துப்பு இல்லெ பக்கத்து நாட்டுக்கு panchayathu panraraam
புலிகள் அழிவுக்கு காரணம் புலிகள்தான் தம்மை யாரும் வெல்ல முடியாது என்ற ஆணவத்தில் அவர்கள் ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சமா?, 1990 ஆம் ஆண்டு யாழ்ப்பாணதில் தான் உண்டு தன் வியாபாரம் உண்டு என்று இருந்த அப்பாவி முஸ்லிம் தமிழர்களை துப்பாக்கி முனையில் அவர்கள் பல பல நுற்றாண்டு காலமாய் வாழ்ந்த வீடு, வாசல், சொத்து, சுகம் எல்லாவற்றயும் போட்டுவிட்டு உடுத்திய துணி 500 ருபாய் பணம் மட்டுமே அனுமதி என்று நான்கு மணி நேரத்தில் லாரிகளில் வைத்து விரட்டியது யார்? இரக்கமே இல்லாமல் குழ்ந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் நோயாளிகள் என்று பார்க்காமல் விரட்டியது யார்? குழ்ந்தைகள் கழுத்தில் கிடந்த சங்கிலி, வளையல் நகைகளை கொரடை கொண்டு வெட்டி எடுத்தவர்கள் யார்? கொள்ளை அடித்த பொருள்களை புத்த கோவிலில் வைத்து விற்றவர்கள் யார்? சிங்களவனா? இல்லையே புலிகளைதானே அது மட்டுமா கிழக்கு மாகாணத்தில் வாசித்த லட்சகணக்கான முஸ்லிம் தமிழர்களை விரட்டி அவர்களை அகதியாய் ஆக்கியது, காலையில் பள்ளிவாசலில் தொழுது விட்டு வந்த அப்பாவி முஸ்லிம்களை குருவி சுடுவது போல் சுட்டு கொன்றது என்று சொல்லிக்கொண்டே போகலாம், நரேந்திர மோடியை விட ஒருபடி மேலே போய் முஸ்லிம்களுக்கு அநீதி இளைத்தது புலிகள்தானே இந்த விசயத்தில் பிரபாகரன் ஓர் இந்துமதவெறியர் போல் நடந்த இருக்கின்றார் ஆனால் அவரை ஆதரிப்பது எல்லோரும் இந்து மத எதிர்பாளர்கள் இதுதான் வேடிக்கை,
அப்பாவிகளை கொலை செய்வதில் ராஜபக்சேவுக்கு சற்றும் சளைத்தவர் இல்லை பிரபாகரன், எத்தனை தமிழர்கள், மாற்று கருத்து உள்ள அரசியல் தலைவர்கள், சகோதர இயக்க தலைவர்கள், சொந்த இயக்கத்தை சேர்த்தவர்கள் முஸ்லிம்கள், அப்பாவி சிங்களவர்கள் சொல்லிக்கொண்டே போகலாம், 1991 ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட பொழுது 40 கும் மேற்பட்ட அப்பாவி பொது மக்களும் போலீஸ் இறந்தர்களே அவர்கள் தமிழர்கள் இல்லையா? இவர்கள் எல்லோரும் இந்திய அமைதி படையுடன் சேர்ந்து போய் தமிழ் பெண்களின் கற்பை சூறையாடி விட்டு வந்தவர்களா? புலிகளுக்கு உதவ போய் அவருக்கே தெரியாமல் மிகபெரிய சதியில் நளினி என்ற அப்பாவி 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடுவதற்கு காரணம் புலிகள்தானே,
புலிகளுக்கு கலைஞர் துரோகம் செய்துவிட்டார் என்று சொல்லுகின்றர்களே புலிகள் மட்டும் கலைஞர்க்கு துரோகம் செய்யவில்லயா? 1989 இல் புலிகளுக்கு உதவ போய் ஆட்சியை இழந்தார், புலிகளை ஆதரித்த ஒரே காரணத்துக்காக ராஜிவ் கொலை பழியை சுமந்தார், அதனால் தானே 1991ஆம் ஆண்டு தி,மு, க படுதோல்வியை சந்தித்தது, ராஜுவை கொலை செய்தால் அந்த பழி நம்மை ஆதரிக்கும் தி மு கதிற்கு போய் விழும் என்று ஏன் பிரபாகரன் சிந்திக்கவில்லை?, எல்லோரும் தமிழர்கள் என்கின்றர்களே இலங்கைஇல் உள்ள தோட்ட தொழிலாளர்களுக்கு பிரச்சினை வந்த பொழுது புலிகள் என்ன உதவி செய்தார்கள்? தனக்கு ஒரு பிரச்சினை என்றால் அது எல்லோருக்கும் பொருந்தும் ஆனால் மற்றவர்களுடை பிரச்னை அவரவர்களுக்கு, 1985 களில் எல்லோரையும் போல் புலிகளை ஆதரித்தவன்தான் நான், இப்போது என்னை இப்படி எழுதுவதற்கும் காரணம்மும பிரபாகரன்தான், அப்பாவி இலங்கை தமிழர்கள்தான் பாவம் ஒருபக்கம் புலிகளும் மறுபக்கம் இலங்கை ராணுவத்தாலும் வாழ்விழந்து நிற்கின்ற்கள்,
சொந்த நாட்டில் நடக்கும் அநீதிகளை தட்டி கேட்க இவர்கள் முன்வரமாட்டார்கள். ஏன்?... கொல்லப்படுவது இஸ்லாமியர்கள்
நல்ல பதிவு பொதுவாகவே இதுபோன்ற இனவாதங்கள் எல்லாம் பாசிசம் நோக்கியே போகும் என்பதற்கு புலிகளே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு கையில் வெறும் 50 ரூபாயை கொடுத்து 24 மணிநேரத்தில் இசுலாமியர்களை இடத்தை காலி செய்ய சொன்னவர்கள்தனே அவர்களும்
Post a Comment