Monday, July 12, 2010

முஸ்லிம் =தீவிரவாதியா?

என் இலக்கிய நண்பர் ஒருவர் கவிதை சொன்னார்.

”இந்தியா ஒளிர்கிறது.
தேசமெங்கும்...
தீவீரவாதத் தீ..!”

muslims_360இந்த கவிதையை நான் திருத்தச் சொன்னேன். ஏனென்றால் உலகில் எந்த பிரச்சினையும் இல்லைவே இல்லை. தீவிரவாதம் மட்டுமே ஒற்றைப் பிரச்சினை... என்கிற அமெரிக்காவின் குரல் இது. ஈராக்கின் எண்ணெய் வளத்தைக் கொள்ளையடிக்க பயங்கரவாதத்திற்கு எதிரான போரை நடத்திய அமெரிக்காவின் பாணியில் பச்சை வேட்டை நடத்தும் நாடாக நாம் உள்ளோம். இந்தியாவில் நாம் வாழ்வதாக நம்பிக்கொண்டு இருக்கிறோம். உண்மையில் நாம் அமெரிக்காவின் அடிமைகள்.

அவர் கவிதையை திருத்தினார்..!

”இந்தியா ஒளிர்கிறது..
தேசமெங்கும்...
வறுமைத் தீ..!”

இலக்கியம்,வரலாறு ஊடகம் என எல்லாவற்றிலும் ஆதிக்கவாதிகள் சொல்வதைத் திரும்ப சொல்லும் கிளிப்பிள்ளைகள் போல வாழ்கிறோம்.

இது நம்பிக்கைகளின் தேசம்.

கர்ணன் கவசகுண்டலத்துடன் பிறந்தான் என்கிற நம்பிக்கை மாதிரி ஒவ்வொரு இஸ்லாமியனும் வெடிகுண்டுடன் பிறக்கிறான் என்பது ஊடகங்களின் நம்பிக்கை. எல்லா சமூகத்திலும் குற்றவாளிகள் உண்டு. ஆனால் ஒரு சமூகத்தையே குற்றவாளியாகப் பார்க்கிற மனோபாவம் மிகவும் ஆபத்தானது.
சாதியத்தை வேரறுப்பதில் முனைந்த பெளத்தம், ஆரியத்திற்கு முன்னால் முகவரி இழந்தது. கிறிஸ்தவம் இந்திய சூழலில் சாதியத்தைத் தழுவிக் கொண்டது. இஸ்லாம் மட்டுமே சாதியத்தை முற்றிலுமாக மறுப்பதில் வெற்றி கண்டது. சாதியத்தின் உயர் அடுக்கில் சுகம் காணும் பார்ப்பனியம் இதை எதிர்கொள்ள முடியாமல் அவதூறுகளின் அரசியலில் களம் இறங்கி உள்ளது.

பொதுவுடமை அரசியலை உலக அளவில் அதிகாரம் இழக்கச் செய்து விட்ட ஏகாதிபத்தியம், இஸ்லாமிய அரசியலின் போர்க்குணத்தை எதிர்கொள்ள திணறி வருகிறது. ஆகவே பயங்கரவாதம் என்கிற சொல்லைக் கட்டவிழ்த்து விட்டு, ஊடக சர்வாதிகாரம் மூலம் அதை நிறைவேற்றி வருகிறது.

ஊடகத்தின் மையமாக திகழும் திரைக்கலை இதில் முக்கிய பங்காற்றுகிறது. கறுப்பு வெள்ளை காலத்தில் துணை கதாபாத்திரமாகவும் உதவி செய்பவராகவும் முஸ்லிம்களை சித்தரித்தனர். இந்தப் போக்கை ரோஜா என்கிற திரைப்படத்தின் மூலம் மணிரத்னம் என்கிற பார்ப்பனர் மாற்றி வைக்கிறார்.

இந்திய ஆக்கிரமிப்பிலும் பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பிலும் மூச்சு திணறும் ஒரு மாநிலத்தைப் பற்றி... அரசு பயங்கரவாதத்திற்கு ஆதரவாக நியாயப்படுத்தி அம்மக்களை கொச்சைப் படுத்தினார். அங்கே ஒவ்வொரு குடிமகனும் ஒரு சிறைக்கைதியைப் போல நடத்தப் படுகிறான் என்கிறனர் மனித உரிமை ஆர்வலர்கள். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வணிக வெற்றிக்காக மண்ணின் மைந்தர்களை இழிவுபடுத்தி வெற்றி பெற்றார். தொடர்ந்து வல்லரசு போன்ற இந்துத்துவப் படங்கள் வரத் தொடங்கின. அர்ஜூன் போன்ற மத வெறியர்கள் தேசப்பக்தியின் பெயரால் முஸ்லிம்களை இழிவுப்படுத்தி, தொடர்ந்து இயங்கினர்.

பாபர் மசூதி இடிப்பைக் குறித்து இருட்டடிப்பு செய்து விட்டு அதன் எதிர்வினையாக நிகழ்ந்த பம்பாய் குண்டுவெடிப்புக்கு எதிரான குரலை மட்டுமே பதிவு செய்ததன் மூலம் மணிரத்னம் யார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பால்தாக்கரேயிடம் பாராட்டு பெற்றதன் மூலம் அவருக்கும் தேச பக்தி இருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

உலக நாயகன் கமல் தன் பங்குக்கு ஏற்கெனவே ஹே ராம் படத்தைப் போலவே, தற்போது 'உன்னைப் போல் ஒருவன்' என தன் கலைச்சேவையை தொடர்கிறார். கடவுள் இல்லை என்கிற பார்ப்பானை ஆயிரம் முறை சந்தேகிக்க வேண்டும் என்கிற அண்ணன் அறிவுமதியின் வார்த்தைகளுக்கு சான்றாக விளங்குகிறார்

இதற்கு எதிர்வினையாற்ற வேண்டிய வலிமையோ, இதை எதிர்கொள்ள போதிய வரலாற்றுப் பார்வையோ அரசியல் அறிவோ ஊடகங்களில் இருக்கும் இஸ்லாமியர்களுக்கு இல்லை. ஆகவே இஸ்லாமியர் பற்றிய சித்திரத்தை எதிரிகளே தீர்மானிக்கிறார்கள். அவதூறுகளின் அரசியல் தொடர்கிறது.

-நன்றி  


27 comments:

Anonymous said...

நன்றி நண்பரே, இந்த கட்டுரைக்கு.
எதிர்வினையாற்ற வேண்டிய வலிமை, எதிர்கொள்ள போதிய வரலாற்றுப் பார்வை, அரசியல் அறிவு மற்றும் இவற்றுக்கு மேலாக ஊடகங்களில் இருக்கும் இஸ்லாமியர்களுக்கு இல்லைஎன்று மட்டும் தீர்மானித்து விடாதீர்கள். எல்லாம் இருக்கிறது - ஆனால், இஸ்லாமியர்களிடம் ஒற்றுமை இல்லாததே, இஸ்லாமியர் பற்றிய சித்திரத்தை எதிரிகளே தீர்மானிப்பதோடு, அவதூறுகளின் மேல் அரசியலும் தொடர்ந்து கொண்டுள்ளது - இது தான் நிதர்சன உண்மை.
-- Porto Novo-K.Nazimudeen,Riyadh

Anonymous said...

//இஸ்லாம் மட்டுமே சாதியத்தை முற்றிலுமாக மறுப்பதில் வெற்றி கண்டது.//

இஸ்லாம் மதத்தில் ஷியா, சன்னி என்ற பிரிவுகள் இல்லையா?
தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம் மக்களில் உள்ள ராவுத்தர், லெப்பை போன்றவை என்ன?

//பாபர் மசூதி இடிப்பைக் குறித்து இருட்டடிப்பு செய்து விட்டு அதன் எதிர்வினையாக நிகழ்ந்த பம்பாய் குண்டுவெடிப்புக்கு எதிரான குரலை மட்டுமே பதிவு செய்ததன் மூலம் மணிரத்னம் யார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.//

பாபர் மசூதி இடிப்புக்கு எதிர்வினையாக நிகழ்ந்ததுதான் மும்பை குண்டு வெடிப்பு என்று சொல்லி விட்டீர்கள்.
அதேபோன்று கோத்ரா ரயில் எரிப்புக்கு எதிர்வினையாக நிகழ்ந்ததுதானே குஜராத் கலவரம்.

இன்றுவரை யாராவது கோத்ரா ரயில் எரிப்பை பற்றி பேசுகிறீர்களா?
குஜராத் கலவரம் என்று தானே வாய்கிழிய கத்துகிறீர்கள்.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

கோத்ரா ரயிலை எரித்தவர்களை தீவிரவாதிகள் என்று சொல்லாமல் எப்படி சொல்வது. அவர்கள் என்ன தேசப்பிதா மகாத்மாவின் வாரிசுகளா?

உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் ஒப்பிட்டு பாருஙகள். உங்களுக்கே தெரியும். முஸ்லிம் தீவிரவாதியா? இல்லையா? என்பதை ஒப்பிட்டு பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

இந்தியாவில் இந்துக்களுக்கு எதிராக போராடுகிறார்கள் என்றே வைத்துக் கொள்ளுவோம். அப்படியானால் பாகிஸ்தானில் நடப்பது என்ன?

பகையாளியை கொல்லுவதற்கு பதில் அப்பாவி மக்களின் உயிரை குண்டு வைத்த கொல்லும் இவர்களை தீவிரவாதிகள் என்று சொல்லாமல் எப்படி சொல்வது?

காதர் said...

வெறுப்பை கக்கியதற்க்கு நன்றி நண்பரே ..
உங்களின் பல வெறுப்பு மற்றும் சந்தேகம் கலந்த கேள்விகளுக்கு பதிலாக இதோ மற்றொரு பதிவு.

U F O said...

இந்த பதிவையும் 'அவர்களுக்கு' பயந்துபோய் தூக்கி விடுவீர்களா?

காதர் said...

"எவர்களுக்கு" பயந்து தோழரே ? சமூக நல்லிணக்கத்தை மனதில் கொண்டு தான் கடந்த பதிவை நீக்க நேரிட்டது..மீண்டும் ஒரு முறை கூறுகிறேன்..இங்கே இப்பதிவுகள் வெறுப்பை வளர்ப்பதற்காக அல்ல..இன்றைய உலகில் முஸ்லீமாகிய மக்கள் அனைவரும் தீவிரவாதியாகவும், தேச துரோகிகளாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள்..இந்த போக்கை, அவதூறு அரசியலை, திட்டமிட்ட சதியை..கண்டிப்பது மனிதம் உள்ளவர்கள் மீது கடமை..

ILA (a) இளா said...

அமெரிக்காவுல ஒன்னு சொல்லுவாங்க. எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதியில்லை, ஆனால் தீவிரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களாக இருக்கிறார்கள்னு. இதுக்கு என்ன பதில் சொல்ல சொல்லுங்க?

THE UFO said...

எங்கள் ஊரில் ஒரு முதுமொழி சொல்வார்கள் Mr.ILA(@)இளா...

அதாவது...

எல்லா இளா-க்களும் முட்டாள்கள் இல்லை, ஆனால், முட்டாள்கள் எல்லாருமே இளா-க்களாக இருக்கிறார்கள் என்று...

இதுக்கு என்ன பதில் சொல்ல சொல்லுங்க?


@நன்றியுடன் காதர்...

முடிந்தால், இராண்டாம் அனானிமஸ் மற்றும் இளாக்களுடன் மதநல்லிணக்கம் பேணுங்கள்.

நன்றியுடன்...UFO.

ILA (a) இளா said...

இந்த மாதிரி மத உணர்வுள்ள பதிவுகளை தவிர்த்தால் நல்லது. தேவையில்லாத, சச்சரவு வரும் பதிவுகள் இவை.

ILA (a) இளா said...

//முட்டாள்கள் எல்லாருமே இளா//
ஓஹ் அவுங்களா நீங்க. ஆள விடுங்க சாமிகளா,.

ILA (a) இளா said...
This comment has been removed by the author.
Anonymous said...

கோத்ரா ரயிலை எரித்ததும் இந்துதுவாதான் அந்தப்பழியை முஸ்லிம்கள்மீது சுமத்தி கலவரம் நடத்தியதும் இந்துதுவாதான்.

Anonymous said...

கோத்ரா ரயிலை எரித்ததும் இந்துதுவாதான் அந்தப்பழியை முஸ்லிம்கள்மீது சுமத்தி கலவரம் நடத்தியதும் இந்துதுவாதான்.

ILA (a) இளா said...

.

ILA (a) இளா said...

.

ILA (a) இளா said...

.

ILA (a) இளா said...

.

ILA (a) இளா said...

.

ILA (a) இளா said...

.

ILA (a) இளா said...

.

ILA (a) இளா said...

.

ILA (a) இளா said...

.

ILA (a) இளா said...

.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் சகோதரர்களே
// இஸ்லாம் மதத்தில் ஷியா, சன்னி என்ற பிரிவுகள் இல்லையா?
தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம் மக்களில் உள்ள ராவுத்தர், லெப்பை போன்றவை என்ன? //
அய்யா அனானிமஸ், இஸ்லாத்தில் இருக்குற ஷியா,சன்னி, ராவுத்தர், லெப்பை லாம் நீங்க நினைக்குற மாதிரி சாதிகள் இல்லை. இஸ்லாத்துல இருக்கின்ற மக்கள் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையை தவறாக புரிந்து கொண்டதின் விளைவு தான் இந்த பிரிவுகள். ஷியா மக்கள் சன்னியாக மாறலாம். சன்னி ஷியாவாகவும் மாறலாம். அதே போல நீங்க சொல்லுற ராவுத்தர் லெப்பை லாம் இஸ்லாத்தை சரியா புரிந்தா உண்மையான முஸ்லிமாக மாறிவிடலாம்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

இவ்வளவு ஏன் என்னுடைய சிறு வயதில் என் ஒட்டுமொத்த குடும்பத்தினர்களும் சூபியிசத்தின் மேல் நம்பிக்கை வைத்த முஸ்லிம் பெயர்தாங்கிகளாக இருந்தோம். பின்னர் சரியாக புரிந்து கொண்டோம். உண்மையான இஸ்லாமியர்களாக மாறி விட்டோம். சூபிகள் என்ற பேர் போய் விட்டது. இன்று தமிழ்நாட்டுல ராவுத்தர் லெப்பை லாம் மறந்து போச்சு. பள்ளிக்கூட டிசியில் மட்டுமே அவை இருக்கின்றன. ஆனால் ஒரு தலித் பிராமணராக மாற முடியுமா? ஆனால் ஒரு சூபி, லெப்பை , ராவுத்தர் போன்றவர்கள் உண்மையான முஸ்லிமாக முடியும். தலித் பிராமணராக மாறுன ஒரு இடத்தையாவது நீங்க காட்டுங்க அனானிமஸ். ஷியா சன்னி ராவுத்தர் லெப்பை, சூபி , சையத் லாம் நீங்க நினைக்குற மாதிரி சாதிகள் இல்லை. இஸ்லாமிய கொள்கையை தவறாக விளங்கியதன் விளைவுகள் இந்த மேற்கண்ட பிரிவுகள். கொள்கை சரியாக புரிந்தால் இந்த பிரிவுகள் விலகி ஓடி விடும். ஆனால் பிறப்பால் ஒரு தலித் தன்னுடைய சாதி அடையாளத்தை மாற்ற முடியுமா? பதில் சொல்லுங்கள் அனானிமஸ்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

//பாபர் மசூதி இடிப்புக்கு எதிர்வினையாக நிகழ்ந்ததுதான் மும்பை குண்டு வெடிப்பு என்று சொல்லி விட்டீர்கள்.
அதேபோன்று கோத்ரா ரயில் எரிப்புக்கு எதிர்வினையாக நிகழ்ந்ததுதானே குஜராத் கலவரம்.//

பாபர் மசூதி இடிப்பு என்பது சங்பரிவார்களால் நீண்டகாலம் திட்டமிட்டு அண்ணன் தம்பிகளாய் வாழ்ந்து கொண்டிருந்த இந்து - முஸ்லிம் சமுதாயங்களை கூறு போடுவதற்கான படு பயங்கரமான திட்டம் என்பதை தாங்கள் அறிவீர்களா அனானிமஸ்? அத்வானி தலைமையில் இந்த நாட்டின் குடிமக்களுடைய இரத்தத்தை ஆறாக ஒட்டிய ஒரு கருப்பு தினம் தான் பாபர் மசூதி இடிப்பு. பாபர் மசூதி இடித்த போதும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டவர்கள் முஸ்லிம்களே. பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து நடந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

மும்பை குண்டு வெடிப்பை நான் நியாயபடுத்த மாட்டேன். தவறு யார் செய்தாலும் தவறுதான். தவறுக்கான தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்.ஆனால் பாபர் மசூதி இடிப்புக்கு பிறகு நடந்த மும்பை குண்டுவெடிப்பிற்கு குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுத்தாகி விட்டது. ஆனால் ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலையாவதற்கு காரணமான பாபர் மசூதி இடிப்பிற்கு என்ன தண்டனையை இடித்தவர்கள் பெற்றனர்? ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்களை படுகொலை செய்தவர்கள் ஒரு தண்டனையையும் பெறவில்லையே? இது தான் நீதியா?

பி.ஏ.ஷேக் தாவூத் said...

//இன்றுவரை யாராவது கோத்ரா ரயில் எரிப்பை பற்றி பேசுகிறீர்களா?
குஜராத் கலவரம் என்று தானே வாய்கிழிய கத்துகிறீர்கள்.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
கோத்ரா ரயிலை எரித்தவர்களை தீவிரவாதிகள் என்று சொல்லாமல் எப்படி சொல்வது. அவர்கள் என்ன தேசப்பிதா மகாத்மாவின் வாரிசுகளா? //

கோத்ரா ரயிலை எரித்தவர்கள் முஸ்லிம்கள் இல்லை என்று இரயில்வே துறை நியமித்த பானர்ஜி கமிஷன் அறிக்கை தாக்கல் செய்ததே அனானிமஸ். பானர்ஜி கண்டிப்பாக முஸ்லிம் இல்லை. பானர்ஜிக்கு என்ன பதிலை வைத்திருக்கின்றீர்கள்? இந்த செய்தி உங்களுக்கு தெரியாதா? இரயிலை கொளுத்தியவர்கள் சங்பரிவார்கள் தான் என்று தெஹெல்கா வீடியோ ஆதாரம் வெளியிட்டதே. அதைக் கூடவா பார்க்கவில்லை. கண்டிப்பாக கோத்ரா ரயிலை எரித்தவர்கள் தீவிரவாதிகளே. ஆனால் உண்மையான தீவிரவாதிகள் கைது செய்யப்படவில்லை.

கோத்ரா ரயிலை கொளுத்தி சொந்த இன மக்களையே கொலை செய்து விட்டு பலியை முஸ்லிம்கள் மீது போட்டு முஸ்லிம் இனத்தையே படுகொலை செய்தது சங்பரிவார்கள் என்பது உங்களுக்கு தெரியாதா? அல்லது நீங்களும் சங்க கும்பலை சேர்ந்தவரா? கர்ப்பிணியின் வயிற்றில் திரிசூலத்தை விட்டு கிழித்து சிசுவை வெளியில் எடுத்து பெட்ரோல் ஊற்றி கொளுத்தியது யார்? அப்படி செய்தவர்கள் இன்னும் தண்டனை பெறவில்லையே? தேசப்பிதா காந்தியை பற்றி பேச என்ன தகுதி இருக்கின்றது உங்களுக்கு? தேசப்பிதா காந்தியை முஸ்லிம் வேடம் போட்டு படுகொலை செய்தது சங்பரிவார இந்துத்துவ வெறியன் நாதுராம் கோட்சே தானே. அவனை இன்று வரை தூக்கி பிடிப்பது ஆர்.எஸ்.எஸ் காவி கும்பல்கள் தானே.

காதர் said...

மீண்டும் முஸ்லீம்கள் மீது தீவிரவாத முத்திரை குத்த சர்வதேச அரசுகள் ஆயுத்தமாகி வருகின்றன..விரைவில் சில திடுக்கிடும் செய்திகள் வெளியாகலாம்