தமிழகத்தின் தற்போதைய பர பரப்பு ..டாக்டர் பெரியார் தாசன் இஸ்லாத்தை தழுவியது தான்.இது பலருக்கும் அதிர்ச்சியாகவும் , கவலையாகவும்..குறிப்பாக அவால்லாம் சந்தோஷப்படுவதாக தெரிகிறது..ஏன்? இந்த குதூகலம்..குறிப்பாக பதிவர்கள் மத்தியில்..நாத்திகவாதி மதவாதியாகிப்போனார் என்கிறார்கள்..இல்லை..இஸ்லாம் மதமில்லை ...இஸ்லாம் ஒரு மார்க்கம்..சத்தியம்..வாழ்க்கை நெறி..மற்றவர்கள் இதை புரிந்து கொள்கிறார்களோ இல்லையோ..நாத்திகவாதிகள் இதை நன்கு அறிவார்கள்..பெரியாரே இதற்க்கு உதாரணம்.ஜாதி வெறி உச்சத்தில் இருந்த அந்த காலத்தில், இஸ்லாம் பெரியாரின் மனதில் முழுமையாக குடிகொண்டது..ஆகையால் தான் அவர் கூறினார்
"இஸ்லாத்தை தழுவி முஸ்லிமாகும் வரை நமக்கு ஒரு போதும் சுய மரியாதையோ, நீதியோ, முன்னேற்றமோ கிடைக்க போவதில்லை"
"ஜாதி வெறிக்கு இஸ்லாமே ஒரு நன் மருந்து "
1947 மார்ச் 18 ல் திருச்சியில் பேசிய ஒரு பொதுகூட்டத்தில் பெரியார் அவர்கள்
"recommendable facts in Islam were: confession of one invisible and formless God; proclamation of equal rights for men and women; and advocating of social unity. Furthermore, Islam is not an Aryan religion. There are no caste distinctions in Islam"
இறை மறுப்பு கொள்கையால் பல்வேறு சமயங்களில் அவர் குரான் உள்பட பல்வேறு வேதங்களை சாடியிருந்தாலும்..இஸ்லாம் அவரை வெகுவாகவே கவர்ந்தது என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளன .
இன்னொரு சந்தர்ப்பத்தில் அவர் கூறியது
"இந்து என்ற மதத்தில் இருந்து விடுதலை பெறுபவர்களுக்கு நான் மற்ற மதத்தை பரிந்ந்துரைப்பேன் என்றால் அது நிச்சயம் இஸ்லாம் தான்..தாழ்த்தபட்டோரை தன் சொந்த பந்தங்கலாக நினைத்து சமூகத்தில் சம உரிமை வழங்குவது இஸ்லாம் தான்"
நாத்திகவாதிகள் முழுமை பெறாமலே இருப்பார்கள்..குழப்பங்கள் அவர்களை குடைந்தெடுக்கும்..வாழ்க்கையில் வெற்றிடம் அதிகம் நிரம்பியிருக்கும்..
கடவுள் மறுப்பு என்ற கொள்கையால் பெரியார் இருந்தது போல் பிடிவாதமாக இருக்கும் நாத்திக சகோதரர்கள் இன்னும் குழப்பம் அடைந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்..நல்லது..குழப்பம் அடைய..அடைய தான் தெளிவு பிறக்கும்..டாக்டர் அப்துல்லாவை கேவலப்படுத்தும் திட்டங்களை உடனே கை விட்டு சற்று சிந்திக்க வேண்டுகிறேன்..உங்களுக்கு அனைத்தும் தெரியும் என்று நினைக்க வேண்டாம்..தெரியாதது பல புரிந்தது தான் இந்த பரபரப்பு செய்தி.
தாழ்த்தபட்டவர்கள்(இஸ்லாம் இதை வெறுக்கிறது) என்று அழைக்கப்படும் உண்மை தமிழர்களே, , நாத்திகவாதிகள் என்று தங்களை அழைத்து கொள்ளும் அன்பு சகோதரர்களே பிடிவாதம் வேண்டாம், சற்று சிந்தியுங்கள்.
1 comment:
//பெரியாரே இதற்க்கு உதாரணம்.ஜாதி வெறி உச்சத்தில் இருந்த அந்த காலத்தில், இஸ்லாம் பெரியாரின் மனதில் முழுமையாக குடிகொண்டது..ஆகையால் தான் அவர் கூறினார்
"இஸ்லாத்தை தழுவி முஸ்லிமாகும் வரை நமக்கு ஒரு போதும் சுய மரியாதையோ, நீதியோ, முன்னேற்றமோ கிடைக்க போவதில்லை"//
It is laughable that you are quoting someone who DID NOT CONVERT to Islam!
Neither I care about what Periar said or what Periardasan did. but just found this funny!
Post a Comment