Sunday, January 13, 2013

அக்கப்போர்-13/01/2013

அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்...



செய்தி-1




"கிரக நிலைகள் பாதகமாக இருப்பதால் தான், நாட்டில், கற்பழிப்பு சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன,'' என, சத்தீஸ்கர் மாநில உள்துறை அமைச்சர், நான்கிராம் கன்வர் கூறியுள்ளார் 


# ரசாயன முறை ஆண்மை நீக்கத்திற்கு, இவரை சோதனை முறையில் பயன்படுத்தினால் தப்பா?





செய்தி-2



ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் மாடுகள் குறித்து தனித்தனியே விண்ணப்பங்கள் பூர்த்திசெய்து சென்னை மத்திய பிராணிகள் நல வாரிய அமைப் பிற்கு 30 நாட்களுக்கு முன்னர் விண்ணப்பித்து ஒப்புதல் பெறவேண்டும்.


#நல்ல வேலை..மாடு தான் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கையொப்பமிட வேண்டும் என்ற கண்டிஷன் இல்லை..



செய்தி-3



"விஸ்வரூபம்' படம், டி.டி.எச்.இல் திரையிடப்படுவது, தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தியேட்டரில் 25ம் தேதி வெளியிடப்படும், எப்போது, டி.டி.எச்., முறையில் வெளியிடப்படும்???


# பத்து பைசா செலவில்லாமல்..விளம்பரம் ரொம்ப ஜோரா நடக்குது..அய்யோ..நானும் விளம்பரம் பண்ணிட்டேனே




இந்த வார அறிமுகம்

கடல் போன்ற திரைப்படங்கள் அந்தமானின் கடலோர பகுதிகளில் தான் படமாக்கப்பட்டுள்ளன..அந்தமான் பகுதியின் பேஸ் புக் பக்கம்.


Andaman-100% Natural




இந்த வார ட்வீட் 


பொங்கலுக்கு ரேஷன் கார்டுக்கு 100 ரூபாய் - ஜெ # குடுக்கிற அத்தன காசும் டாஸ்மாக் வழியா திரும்பிபோயிடும் - வாழ்க்கை ஒரு வட்டம்

நன்றி 

ட்விட்டர் பவன் 






படித்ததில் பிடித்தது.. 

வீட்டு நாய் மிரட்சியுடன் என்னை கவனித்து கொண்டிருக்கிறது # என் தட்டில் உப்புமா!!




இந்த வார புகைப்படம் 








Sunday, January 6, 2013

அக்கப்போர்-06/01/2013

செய்தி-1


நீங்கள் நினைப்பது போல் நான் முட்டாள் இல்லை:சிதம்பரம் பேட்டி

# போன் வயர் பிஞ்சி ஒரு வாரம் ஆகுது..




செய்தி-2


முதல்வர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்துப் பேசியதற்காக நாஞ்சில் சம்பத் மீது தொடரப்பட்ட வழக்குகளைத்தான் தற்போது அதிமுக அரசு வாபஸ் பெற்றுள்ளது.

# அம்மாவின் கைப்பேசி-பார்ட் 2





செய்தி-3 



புத்தாண்டு தினத்தன்று 95 கோடிக்கு டாஸ்மாக்கில் மது விற்பனை 


#ஆல்  சிட்டிசன்ஸ்..என்னாச்சு..உடம்பு கிடம்பு சரியில்லையா..கம்மியா குடிச்சிருக்கீங்கலே..அடுத்த தடவை சாதனை படைக்கனும் ..சரித்திரம் படைக்கனும் 




இந்த வார பேஸ் புக் ஸ்டேட்டஸ் 


என்ன விசித்திரம்?
சினிமாக்காரன் குடியிருக்க 
வாடகைக்கு வீடு கிடையாது

ஆனால், 
ஆள்வதற்கு நாட்டையே
கொடுத்து விடுகிறார்கள்
தமிழ் மக்கள்..!



நன்றி 


இணை இயக்குனர்-அமீர் அப்பாஸ் 






இந்த வார தத்துவ புகைப்படம்







இந்த வார கடுப்பு 



ராஜகுமாரன் அவர்களுக்கு கடும் கண்டனங்கள்..

#பவர் ஸ்டார நாங்க பொருத்திக்கிட்ட நால..வருசா வருசா ஒருத்தன் கிளம்பிர்றதா..





Tuesday, January 1, 2013

தீரா தாகம்


     


 
    விதைகள்    விசமாகி ,
    வெள்ள    எரிக்கஞ்செடி பயிறாகி !

    விளைச்சலும்  பொய்யாகி ,
    வீழ்ந்தானே   விவசாயி !

   ஆடியிலே    பட்டங்க்கண்டு .
    தேடியே     விதைவிதைத்து ! 

   ஆழ     உழுதானே ,
   அன்னாந்து   பார்த்தானே !

    அடைமழை  பெய்யவில்லை ,
    ஆறு குளம்  நிறையவில்லை !

    புயல் மழையும்  பொய்யாகி ,
    பூந்தோட்டம்   சருகாகி !

    புலம்பல்    பொருளாகி !
    போனானே (விவசாயி) பிணமாகி !

     காவிரியை  பூட்டிவைக்கும் ,
     கர்நாடக   சண்டியரே !

     நீதிக்கு   தலைவணங்கா ,
     நீமட்டும்   நிரந்தரமா ?
 
     மார்கழி  விடை கொடுக்க ,
     மறுபடியும்  தை பிறக்க !

     மகிழ்ச்சியில்  மனங் குளிர ,
     மண் உழுதோர்  யா ரிருக்கார் !

     பூமிக்கு     நீர் வார்க்கும் ,
     புகழெல்லாம்  இறைவனுக்கே !- என

     பூரித்து   பொங்கல் வைக்க ,
     புதுநெல்லும் தான்  பறிக்க !

     தங்கமழை  பொழியாதோ ?
     தமிழகமும்   குளிராதோ   ?
 
     தாகமும்  தீராதோ  ?
     தமிழர் முகம்  மலராதோ  ?

 
   நன்றி

பிறைத்தமிழன்     

Monday, December 31, 2012

அக்கப்போர்-31/12/2012

செய்தி-1

மருத்துவ மாணவியை கற்பழித்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வாங்கி தருவோம்- காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா 

# ஆறு பேரையும் தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைங்க..போலி என்கௌண்டர்ல போட்டு தள்ளுங்க..அதுக்கு ஒரு கதை தயார் பண்ணி சொல்லுங்க..நாங்க கேட்டுக்கிருவோம்..விஷயம் சீக்கிரம் நடக்கட்டும்..



செய்தி-2

அரசுகளும், அரசியல் கட்சிகளும் தொலைகாட்சி சேனல் மற்றும் கேபிள் டி.வி. வர்த்தகத்தில் ஈடுபட அனுமதிக்கக் கூடாது என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.



#அப்ப..டி.வி யில எந்த சேனலும் வராதே..



செய்தி-3

சி.டி. விவகாரத்துக்கு பிறகு முன்பைவிட அதிக பக்தர்கள் ஆசிரமத்துக்கு வருகிறார்கள்.நித்தியானந்தாவுடன் இன்னும் நல்ல தொடர்பில் இருப்பதாக நடிகை ரஞ்சிதா கூறியுள்ளார்.

#இன்னும் நாலு வருஷத்துக்கு ஏன்னா வேணாலும் நீங்க பேட்டி கொடுக்கலாம்..நோ ப்ராப்ளம் 



இந்த வார புகைப்படம் 







இந்த வார  "ட்வீட்" 

உருப்படியான விஷயம் ஏதாவது செய்ய விரும்பினால் உங்கள் வாழ்நாளில் ஒரு அனாதை குழந்தையின் படிப்பு செலவுக்கு உதவும் முறையில் தத்தெடுங்கள்




படித்ததில் "பிடித்தது" 

பார்வைகளால் உனக்கும் எனக்கும் பரவும் மின்சாரம் போதுமடி நாட்டின் மொத்த மின்சார தேவையையும் பூர்த்தி செய்ய !!




இந்த வார "அறிமுகம்"

தமிழ் திரைப்படங்களை உரிமையோடு விமர்சனம் செய்யும் கனடா நாட்டை சேர்ந்த வெள்ளைக்கார நண்பன் "REVIEW RAJA-ரிவ்யூ ராஜா"






Saturday, December 22, 2012

அக்கப்போர்-23/12/2012



"செய்தி-1"

பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாக உள்ள நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தை தியேட்டர்களில் வெளியிடுவதில்லை என விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் முடிவு செய்துள்ளனர்

# ஒரு சந்தேகம்..துப்பாக்கி பாணியில்..இதுவும் விளம்பர யுக்தியா இருக்குமோ..




"செய்தி-2"

நான்காவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா குஜராத் மாநிலத்துக்குச் செல்கிறார்.

# வரும்போது கரண்ட் (மின்சாரம்) வாங்கிட்டு வாங்க..கலவரத்த வாங்கிட்டு வந்துராதீங்க..



"செய்தி-3"

டெல்லியில் மருத்துவப் படிப்பு படிக்கும் மாணவி கற்பழிக்கப்பட்டதையடுத்து நாட்டில் உள்ள பெண்களுக்கு ஒருவித பயம் வந்துள்ளது. இதனால் அவர்கள் தங்களை காத்துக் கொள்ள கைப்பையில் கத்தியும், மிளகாய்த்தூள் ஸ்ப்ரேயும் வைத்துள்ளனர்.

#என்கௌண்டர் எக்ஸ்பர்ட் வெள்ளத்துரையை டெல்லிக்கு பார்சல் பண்ணுங்கப்பா...



"இந்த வார கவிதை "


வீட்டில் சில செடிகளை
நட்டு வைத்து விட்டுச் சென்றேன்
பெருமரமாகி
கிளைபரப்பி நிற்கிறது..!
சின்னஞ்சிறு மழலையாய்
கொஞ்சி மகிழ்ந்த என் மகள்
பருவப் பெண்ணாக..
சிவந்து நிற்கிறாள்..!
அடர்ந்த மெளனத்தால் கனத்திருந்த
மலைகளின் உச்சியில்
என் துயரத்தின் பெருமூச்சையும் தாண்டி
சில குறிஞ்சிப் பூக்கள்
பூத்திருந்தன..!
என்னோடு சிறைக்கு வந்த
கொலைக் கைதிகளில் சிலர்
தண்டனைக் காலம் முடிந்து
வீடு திரும்பி விட்டனர்..!
எனக்கான விசாரணைக் காலம்
முடிவதற்குள்
சிலரின் ஆயுள் தண்டனையும்
முடிந்திருந்தது..!
நீதி தேவதையின் குருட்டு விழிகள்
கண் திறந்து பார்ப்பதற்குள்
என் இளமை வனப்பு
எரிந்து சாம்பலாகி இருந்தது..!
பிடிபட்ட முதல் நாள்
சித்ரவதைகளுக்கு ஊடாக
நான் சொன்ன வாக்குமூலத்தையே
இறுதியில்
தீர்ப்பாகத் தந்தார்கள்
”நான் குற்றமற்றவன்” என்று..!

நன்றி 
கவிஞர் அமீர் அப்பாஸ் 


கவிதை சொல்ல வருவது என்ன? உங்கள் ஊகங்களுக்கே விட்டு விடுகிறேன்..




"இந்த வார புகைப்படம் "







"இந்த வார இசை "


உலகையே கலக்கி வரும் ரஹ்மானின் பாடல்...







"இந்த வார ட்வீட்"

பேஸ்புக், ட்விட்­டர், எல்லாம் வர்ரதுக்கு முன்னயே ஸ்டேட்டஸ் போட்டவன் தமிழன்

#ஆட்டோ வாசகங்கள்






Sunday, December 16, 2012

அக்கப்போர்-16/12/2012


நீர்ப்பறவை துரித விமர்சனம் 




சமீபத்தில் நான் கண்ட நீர்ப்பறவை திரைப்படம், நிச்சயம் ஒரு உலக சினிமா வகை என்பதில் ஆச்சர்யமில்லை..இம்மண்ணின் கதையை, மக்களின் கதையை உயர் தரத்தில் சொன்னால்..அது தான் உலக சினிமா..இப்படத்தில் வரும் அருளப்பசாமி, எஸ்தர் ஆகியோர் என்  கண் முன்னே இன்னும் உலாவிக்கொண்டிருக்கின்றனர்.நெய்தல் நிலத்தின் உப்புக்காற்று படம் பார்க்கும் நம்மை அப்பிக்கொள்கிறது.அப்படி ஒரு விஷுவல் ட்ரீட். .ஊர் மக்களுக்கு முன்னாடி அழுது கொண்டே சவால் விடும் அந்த ஒரு காட்சி கதாநாயகனின் ஒரு பானை  நடிப்பின் ஒரு சோறு பதம்..எதுவும் பேசாமல் தனது காதலனின் படகு தயார் ஆவதை பார்த்து விட்டு செல்லும் கதாநாயகியின் அந்த மௌனப்பார்வை தேசிய விருது கமிட்டியின் ஆட்களை நிச்சயம் தூங்க விடாது.பூ ராம் என்ற நடிகர், நிச்சயம் ஒரு பூ தான்..நடிப்பின் குறிஞ்சிப்பூ. அவர் மௌனமாக பார்க்கும் அந்த கவலை தோய்ந்த பார்வை, ஆயிரம் அர்த்தங்கள் கொண்ட பார்வை. .சிறுபான்மையினரை பாகிஸ்தான் தீவிரவாதியாக சித்தரிக்காமல் , நம்பல்கி என்று வசனம் பேச விடாமல்..தேசப்பற்றுள்ள நம்பிக்கை கதாபாத்திரமாக காட்டியிருப்பது இயக்குனரின் நேர்மைக்கு எடுத்துக்காட்டு..சமுத்திரக்கனி பேசும் வசனங்கள் பொதுப்புத்திக்கு கொடுக்கப்படும் ஷாக் டிரீட்மன்ட். .நீர்ப்பறவை  ஐநாக்ஸில் பார்க்க வேண்டிய படம் அல்ல..ஐ.நா சபையில் பார்க்க வேண்டிய படம்..



செய்தி-1

எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் வடிவமைக்கப்பட்டது, தேர்தல் கமிஷன் ஒதுக்கிய, இரட்டை இலை சின்னம் அல்ல; அது, பறக்கும் குதிரையின் சிறகுகள் என, சென்னை ஐகோர்ட்டில், அட்வகேட்-ஜெனரல் தெரிவித்தார்

# சாச்ச.,,இத பாத்தா..ரெட்டை இலை மாதிரி தெரியலயே..ஆனா...?????.சொன்னா , அரெஸ்ட் பண்ணுவீங்க..எதுக்கு வம்பு??




செய்தி-2



பாலிவுட் நடிகை வித்யா பாலன் திருமணம்..

#பாராளுமன்றத்தில் அமளியும்..பாரத் பந்தும் இல்லையா?






இன்றைய ட்வீட்


அதிகாலை நேரம் வாக்கிங் போகும் ஆண்ட்டிகள் இந்த சமூகத்திற்கு ஒரு செய்தியை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். #டயட் முக்கியம்




இன்றைய தகவல் 


உலகிலேயே முதல் பெண் மருத்துவரை உருவாக்கியது சென்னை மருத்துவக் கல்லூரி.





இன்றைய லாஜிக்


பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களுக்கு ஃபைன் போட்டால் அவர்கள் கேட்கும் கேள்வி "சிகரட்ட முடிஞ்சா தடை செய்வது தானே?"




Saturday, November 3, 2012

தீப்பந்தம்..புதுப்பொலிவோடு மீண்டும் வருகிறது




தீப்பந்தம்..புதுப்பொலிவோடு மீண்டும் வருகிறது..அன்றாட நிகழ்வுகளை கலாய்க்கும் "அக்கப்போர் "..கூடுதல் நக்கலோடு வருகிறது...காத்திருங்கள்..இன்னும் சில நாட்களில்.....

Monday, July 2, 2012

அக்கப்போர்-02/07/2012


செய்தி-1


அதிமுகவில் சேர அழைப்புக்காக காத்திருக்கிறேன்: எஸ்.வி.சேகர்

அடேய் ….இதுக்கு பேறு தான் கப்…அதுக்கு மேல இருக்குதே..அதுக்கு பேறு தான் மாண்டில்… இதுல தான் லைட் பளீறு ன்னு எறியும்




செய்தி-2




சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ 30 வரை குறையுங்கள், என மத்திய அரசுக்கு அதிரடி கோரிக்கை விடுத்துள்ளார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி

# நீங்க ஏன் ப்ரைம் மினிஸ்டர் ஆக கூடாது..


செய்தி-3


அண்ணா மேம்பால விபத்து-பஸ் டிரைவரின் 2 செல்போன் பறிமுதல்
# வந்ததே ராங்கு.இதுல என்ன சாங்கு 

செய்தி-4



ஹைதராபாத் ஜூப்ளி ஹாலில் காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்களைச் சந்தித்து ஆத்ரவு திரட்டிவிட்டுச் சென்றார் பிரணாப் முகர்ஜி, அவர் சென்ற பிறகு அந்தக் கட்டிடத்தின் மேற்கூரையில் சிறு தீ விபத்து ஏற்பட்டது

# தீயா வேலை செய்யணும் மிஸ்டர் நல்ல தம்பி..




இன்றைய ட்வீட் 

#ஒரு ஆம்பள கேட்டவுடனே, மதிச்சு, பதில் சொல்ற ஒரே ஆளு கூகிள் மட்டும் தான்.!



இன்றைய தத்துவம் 

#ஹீரோ தலையை தூக்கி அண்ணாந்து 'ஹாஹாஹா'னு சிரிச்சா பாரதிராஜா படம், அதே ஹீரோயின் தலையை தூக்கி அண்ணாந்து மொறைச்சா பாலச்சந்தர் படம்.






தமிழ்நாடு ரீவைண்டு




Saturday, June 23, 2012

அக்கப்போர்-23/06/2012




செய்தி-1

இதுவரை எந்த தேர்தலிலும் தான் தோற்றதில்லை என்று ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிடும் பி.ஏ.சங்மா கூறியிருக்கிறார்.

# அண்ணனுக்கு ஒரு ஜிகர் தண்டா தூத் ..


செய்தி-2

விளையாடிக் கொண்டிருந்தபோது 70 அடி ஆழ குழியில் விழுந்த 4 வயது குழந்தை கதி என்ன?: 2-வது நாளாக மீட்பு பணி

# இனிமே குழி தோண்டறவன்..வேலைய முடிச்சு ..குழிய அடச்சு போகற வரைக்கும்..அங்கயே இருக்கணும்னு ஒரு சட்டம் போடணும்...என்னது சட்டமா?



செய்தி-3

பெப்சி அமைப்புக்கு நடந்த தே‌ர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட அமீர் வெற்றி பெற்றுள்ளார்

# கூல் ட்ரிங்க்ஸ்க்கும் இப்ப தேர்தல் ஆரம்பிச்சாச்சா..



செய்தி -4

விஜய் விஸிட் - ஏக தள்ளுமுள்ளு... ரசிகர்கள், போலீசாருக்கு காயம்


# எப்படி ..ஒரு விழாவுல எண்ட்ரி இருக்கணும்னு நம்ம பவர் ஸ்டார பாத்து கத்துக்கொங்கன்னா ..





இந்த வார ட்வீட் 


# ஓசில டிவிய வாங்கிட்டு ஓட்டவாடா மாத்தி போடுறீங்கனு., திமுக கடுங் கோபத்தோட பழி வாங்குது போல #இசையருவி தொகுப்பாளினிகள்ல்


# விருதுகள் வேண்டாம் விசில் சத்தம் போதும் : சிம்பு # அது படம் பார்க்க நிறைய கூர்கா வந்தால் மட்டுமே சாத்தியம்




இன்றைய தத்துவம் 


# கல்யாண வீட்டிலும் சீட்டு விளையாடுறாங்க, இழவு வீட்டிலும் சீட்டு விளையாடுறாங்க. வாழ்க்கைத் தத்துவத்தை தெளிவாக உணர்த்துகிறார்கள்

Thursday, June 21, 2012

ப்ளாஷ் நியூஸ் :பற்றியெரியும் மும்பை மந்த்ராலாயா

ஒரு மாநிலத்தின் தலைமை செயலகமே பற்றி எரிகிறது..மள மளவென்று பற்றிய தீ..ஸ்தம்பித்தது மும்பை மாநகரம்.தீயை அணைக்க முடியாமல் திணறும் வீரர்கள். உயிரழப்பு நிச்சயம். சில முக்கியமான ஆவணங்கள் அழிந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன?????


உங்களுக்கு யாராவது தெரிந்தவர்கள் உள்ளே சிக்கி இருந்தால் அவர்களை ROOFTOP க்கு வருமாறு தொலைபேசியில் தெரிவித்து விடுங்கள் . THIS IS MESSAGE FROM NAVY FOR RESCUE OPERATION


நேரடி காட்சிகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
http://www.ndtv.com/blog/show/major-fire-at-mantralaya-in-mumbai-234400?pfrom=home-lateststories